இது தெரியலனா உங்களுக்கு ஒன்னு அமைகிறது லேட் ஆகும் .. இல்லேன்னா அமையறதும் உங்க தகுதிக்கு கீழ அமையும். காரணம் திருமண விஷயத்தில் நல்ல வாழ்க்கை அமையறதுங்கிறது நம்மள தேடி நம்மள விரும்பி கேட்டு வர்றதுல தான் இருக்கு.. பரவல நம்மளை கேக்கணும் நாம அதுல இருந்து செலக்ட் பண்ணனும்... ஆனா பலருக்கும் இங்க ஆஃபரே வரமாட்டேங்குது அப்படிங்கிறது தான் பிரச்சனை.. பொதுவா பெண் அழகாய் இருந்தா போதும் எங்களுக்கு தாங்கன்னு வந்துவிழுவார்கள்.. அப்டினு பார்த்தா ஒரு சொற்ப சதவீதம் பேர தான் பாக்க லட்சணமா இருப்பாங்க அப்ப மத்த பேரு? வந்து பெண் பார்ப்பாங்க அப்புறம் அந்த சம்பந்தம் முடியாமல் போகும்.. அதுக்கு பல காரணம் இருக்கும்.. அவங்க கேட்கிற வரதட்சணையை இவங்க செய்ய முடியாது ... இது வேற.. இத அவங்களோட பேராசையும் இவர்களுடைய பொருளாதாரம் சம்பந்தப்பட்டது .. ஆனா இது தவிர சில காரணம் உண்டு அது என்னன்னு நமக்கு தெரியணும்.
பொதுவா மணமகனுக்கும் மணப்பெண்ணுக்கு மிகப்பெரிய மன உளைச்சலை தரக்கூடியது இதுதான்.. வந்து வந்து பாப்பாங்க எதுவும் சொல்ல மாட்டாங்க .. ஒவ்வொரு முறையும் ஆசையா தயாராகி அவர்களுக்கு ஒரு காட்சி பொருளாக நிற்கிறது மணப்பென்னுக்கு ஒரு பெரிய கவலை.. என்ன காரணம் எதனால் இப்படி நடக்குது
1. மணப்பெண் அல்லது மணமகன் தயாரிப்பு இல்லை
முதல் காரணம் , வரன் தன்னை தயார்படுத்திக்கிறது இல்லை . போலீஸ் ன்னா பொதுவான எண்ணம் என்ன தொப்பை இருக்கும் . ஆனா அவங்க போலீஸ்ல செலக்ட் ஆகும்போது இருக்குமா ? அதுக்குன்னு பிரத்யேகமா தன்னை தயார்படுத்தி பிட்டா இருந்தால் தான் செலக்ட் ஆக முடியுது . மணமகளோ மணமகனோ தனக்கு வரன் பார்க்கத் தொடங்குற அந்த நேரம் வரும் முன்னர் போலீஸ் எப்படி வேலையில சேருவதற்கு முன்னாடி தன்னை தயார்படுத்தி கொண்டார்களோ அப்படி நம்மள பார்க்க வர்றவங்களுக்கு நம்மள பிடிக்கணும்னு தயாராகணும் .. அழகு நம்ம கையில இல்லை .. ஆனா அம்சமா இருக்குறது நம்ம கையில உண்டு .. நான் இப்படித்தான் இருந்தேன் இப்படியே தான் வந்து நிற்பேன் ங்குறதுல என்ன எதிர்பார்ப்பு வைத்திட முடியும் ? நல்லா புரிஞ்சிக்கணும் அந்த நேரத்துல நாம இருக்குற இருப்பை கொண்டு தான் நமக்கு அடுத்த பாதி வாழ்க்கைக்கு உரிய துணை அமையும் . நம்மள அடுத்தவங்களுக்கு பிடிக்கனும்னு கொஞ்சம் மெனைக்கிடனும்.. சிரமம் தான் .. கொஞ்சம் சிரமப்பட்டா மிச்ச வாழ்க்கை சுபமா இருக்கும் .
2. ஆளா அதுக்கு முன்ன பார்க்காமல் அப்பதான் வந்து பார்க்கிறது
வரனை அதுக்கு முன்ன பார்க்காமல் அப்பதான் வந்து பார்க்கிறது .. பார்த்துட்டு வேண்டாம்னுட்டு போயிடுறது . முதல்ல வீட்டுக்கு வந்து பெண் பார்க்குற முன்ன போட்டோலையோ அல்லது வெளி இடங்கள்ல எங்கயுமோ பார்த்திருந்து அப்பறம் வீட்டுல போயி பார்க்கணும் . அவர் சொன்னார் இவர் சொன்னார்னு நேரடியா வந்து நிக்கிறது .. பார்க்க வந்து போறவங்களுக்கு ஈஸி . ஆனா பெண் தரப்புக்கு அது ஒரு இடைஞ்சல் .. வீட்டை தயார் படுத்தனும் . பெண்ணை தயார் படுத்தனும் .. சாப்பிட டீ ஸ்னேக்ஸ் வாங்கி வைக்கணும் .. எல்லாமே வேஸ்ட் . இதுபோல எத்தனை பேருக்கு தயார் படுத்திகிட்டு இருப்பாங்க .. மிச்சர் காபி வாங்கி கொடுத்துட்டு இருப்பாங்க ? இது போல வேஸ்ட் ஆகுற செலவுல ஒரு கல்யாணமே நடத்திடலாம் போல ... அதனால வரனோட உருவத்தை முதன்முதலா நேர்ல போயி தான் பார்க்குற மாதிரி இருக்கும்போது அங்க வந்து பார்த்தும் பிக்ஸ் ஆகுறதில்லை
3. கேள்விப்படுற வரனை எல்லாம் பார்க்க வர சொல்றது. ஒரு வரனை விடுறது கிடையாது அங்க இருக்கு இங்க இருக்குனு யாரும் சொன்னாலே போதும் பார்க்க வர சொல்றது .. அவங்க எதிர்பார்ப்பு வேறயா இருக்கும் வந்து பார்த்து ஏமாந்த மாதிரி இருக்கும்.. அந்த வீணான சுமை மணப்பெண் தலையில் வரும்.
4. ஆட்டைய கலைச்சு விடுட ஆள் இருக்கிறது. ஒரு நல்லது நடந்தால் கலைச்சி விடுறதுக்குனே சில பேரு இருப்பாங்க .. அவங்க சொந்தக்காரங்க வடிவில் இருப்பாங்க .. பக்கத்து வீட்டுக்காரங்க வடிவில் இருப்பாங்க .. வேண்டாத ஆட்களுக்கா பஞ்சம்? .. ஏதாவது சொல்லி கலைச்சிடுவாங்க . இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்
5. எதிர்த்தரப்பில் கொழுப்பு.. சில பேரு நினைக்க தோணும் இவங்க ஏதாவது ஒரு வீட்ல ஸ்நேக்ஸ் சாப்பிடவே அங்கங்க பொண்ணு பாக்குறேன்னு போறாங்களா ன்னு.. அந்த அளவுக்கு பல இடம் போவாங்க .. கடைக்கு வந்தாலே கஸ்டமர் வாங்கிட்டு போவாங்கன்னு இல்லை.. வாங்குற நோக்கமில்லாமல் விலை கேட்கிற நோக்கமும் இருக்கும்.. கடை ஏசில நிற்பதற்காகவும் இருக்கும் .. ஆக இதுபோல நோக்கம் இல்லாமல் வர்ற ஆட்களும் ஒரு காரணம்.
6. குடும்பத்தில் யாரு கேரக்டரும் சரியில்லாமல் இருந்தால் அது அந்த மணப் பெண்ணையயோ மணமகனையோ பாதிக்கலாம்.. பொண்ணெல்லாம் பிடிச்சிருக்கும் கடைசில விசாரிக்க இறங்கும்போது அவங்க வீட்டுல இப்படி ஒருத்தர் இருக்காரு ன்னு அந்த கேரக்டர் சரி இல்லாத நபர்கள் குடும்ப அங்கத்தினராக இருக்கும் போதும் பிக்ஸ் ஆகிறது தாமதமாகும்.
7. சம்பந்தப்பட்ட மணமகனோ மணமகளோ அவங்களோட பழைய கேரக்டரும் பேசப்படும்.. இதனால் தான் கெட்ட பழக்கங்கள் கெட்ட செயல்பாடுகள் இதில் எதலையும் மாட்டி இருக்க கூடாது.. அந்த நேரம் அது காதுக்கு வந்து விலகிருவாங்க .. பழைய கால கெட்ட பழக்கங்கள் திருமண நேரத்துல தான் வேலை செய்யும்.
8. வீட்டுல வரன் பார்த்து ஒருவழியா சரி இது ஓகே அப்படின்னு ஒருத்தர்ட்ட முடிச்சி இருவீடு தரப்பும் சம்மதம்னு பேசி அடுத்த கட்டத்துக்கு நிற்க்கைல அதை விட சிறந்த ஒரு வரனை ஏற்கனவே சொல்லி வைக்கப்பட்டவர்கள் வந்து இவர்களும் சரின்னு சொல்லிட்டாங்கன்னு சொல்லைல அந்த தருணம் ?! இது என்ன ஆகும் இவர்களை விட்டுட்டு அவங்க கிட்ட போயிருவாங்க .. ஃபிக்ஸ் ஆகாது.
அதனால் இது போல காரணங்கள் பிக்ஸ் ஆகாமல் இருப்பதற்கும் தள்ளிப் போவதற்கும் ஒரு காரணமாக இருக்கலாம்... இவைகள நம்ம கவனிச்சி சரி செய்து கொண்டோம் என்றால் நல்ல வரன் சீக்கிரமே பிக்ஸ் ஆகவும் வாய்ப்பு அமையும்.
---------------------------------------------------------
அல்மஹ்ர் முஸ்லிம் மேட்ரிமோனி
மணமகளுக்கு முற்றிலும் கட்டணம் இல்லை
Whatsapp : 9789271238
----------------------------------------------------------