பகுதி 23 : திருமணத்தில் செலவை குறைக்க பேரம் பேசுவது எப்படி ?



திருமணம் என்றாலே செலவு தான் பலரோட கண்முன்னாடி நிற்கும், அவங்க சொன்ன விலைக்கு நாம வாங்கிட்டு வர்றதுக்கு நம்ம கிட்ட பணம் இருந்தால் போதும். ஆனா நாம கேட்கிற விலைக்கு அவங்க தருவதற்கு நமக்கு சில திறமைகள் வேண்டும். அதுதான் பேரம் பேசுவது. இந்தத் திறமை சிலருக்கு பயங்கரமா இருக்கும். அசராமல் 100 ரூபாய் சொல்ற பொருளை 20 க்கு கேப்பாங்க. ஆனால் பலருக்கும் இந்த திறமை இருப்பதில்லை. கூச்சப்படுவாங்க, மானம் பார்ப்பாங்க, பேரம் பேசுறது டீசன்ட்குள்ள வராதுன்னு நினைப்பாங்க. ஆனால் உண்மையில இது ஒரு கலை ! எல்லாத்துலயும் கொஞ்சம் பேசி பார்த்தா, ஆயிரக்கணக்குல மிச்சம் பண்ணலாம்.

முதலில் எதுக்கு பேரம் பேச முடியும் எதுக்கு பேரம் பேச முடியாதுன்னு தெரிஞ்சிருக்கணும். எந்த ஒன்று நம்ம கைக்கு வருவதற்கு முன் பல கட்டங்களை கடந்து வருதுன்னு பாருங்க. அதோட அடக்க விலையில் அந்த ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கும். அது மாதிரி பொருட்களில் பேரம் பேச முடியாது. அவர்களாக குறைத்துக் கொடுப்பதில் தான் ஏற்றுக்கொள்ள முடியும். காரணம் அவர்களின் கைக்கு வருவதற்கு முன் அதன் விலை என்ன? அவர்களுக்கு லாபம் அதிலிருந்து எவ்வளவு வரும் என்று அவர்களுக்குத் தான் தெரியும். பொதுவா மூல பொருட்களால் உருவானது என்றால் அதன் தயாரிப்பு விலை கணிசமாக இருக்கும்.

இதுவே ஒரு சர்வீஸ் என்றால் அங்கே மூலப் பொருட்களுக்கு வேலை இருக்காது . உதாரணமாக கல்யாண டெக்கரேஷன் . அவர்கள் அந்த ஒரே டெக்கரேஷன்தான் எல்லா இடத்திற்கும் போடுவார்கள். அங்கே ஒரே ஒரு மூலப்பொருள் கொள்முதல் மட்டுமே. அதை வைத்துக் கொண்டே எல்லா இடத்திற்கும் போட்டு சம்பாதிப்பார்கள். இப்போது இவர்களுக்கு பெரும்பாலும் சர்வீஸ் காசு மட்டுமே. அதிலிருந்து நாம் கணிசமாக குறைக்க முடியும். இதேபோல மண்டபம் இருக்கிறது. அது ஒரு முறை கட்டி முடித்தது தான். நாம் பயன்படுத்துவதால் புதிதாக கட்டப் போவதில்லை . பெயிண்ட் அடிக்கப் போவதில்லை. தண்ணீர் செலவு மின்சார செலவு வேண்டுமானால் ஆகும். பாக்கி அனைத்தும் அவர்களுக்கான லாபம். எனும் போது அதிலிருந்து கணிசமாக குறைக்க முடியும்.

இப்படி ஒவ்வொன்றிலும் நாம் பேரம் பேசுவதற்கான வாய்ப்புகள் இருக்கா? இருந்தால் எந்த அளவு இருக்கிறது? என்பதை அறிந்து ஆட்டத்தை தொடங்கினால் வெற்றி கிடைக்கும். 

பேரம் பேசத் தகுந்த இடத்தில் எப்படி எல்லாம் பேரம் பேசலாம்னு சில வழிமுறைகள் உண்டு . 

முன்னாடியே புக் பண்ணுறேன்னு சொல்லி பேரம் பேசுங்க 

பிளைட்ல டிக்கெட் எடுத்தீங்கனா பல மாசம் முன்னாடி புக் பண்ணுனா ஒரு ரேட் இருக்கும். அதுவே நாளை கிளம்புற பிளைட்க்கு டிக்கெட் வேணும்னு கேட்டீங்கன்னா அதோட விலை வேற மாதிரி இருக்கும். முன்னாடியே அவர்களிடம் டிக்கெட்டுக்கான உறுதியை நாம் கொடுப்பதால் அந்த சலுகை. 

வீடு வாடகைக்கு எடுக்கிறதுன்னா, 'ஒரு வருஷத்துக்கு முன்னாடியே பணத்தைக் கொடுத்துடுறேன், ரெண்டு மாதம் வாடகை குறைச்சுங்க'ன்னு பேரம் பேசுறது. விற்பனையாளர்களுக்கு முன்னாடியே பணம் கைல வந்தா சந்தோஷம், அதனால "சரி"ன்னு இறங்கி வருவாங்க.

"சார், இப்போ சீசன் இல்லை, உங்களுக்கு வேலை கம்மியா இருக்கு, இப்பவே புக் பண்ணா கொஞ்சம் குறைச்சு கொடுங்க"ன்னு சொல்லுங்க. திருமண சீசனுக்கு முன்னாடி விற்பனையாளர்கள் வேலை தேடுவாங்க, இதுல பேரம் நல்லா வேலை செய்யும்.

போட்டியை முன்னிறுத்தி பேரம் பேசுவது 

ஒரே சர்வீசை ஒரே இடத்தில் நிறைய பேர் தருவதாக இருந்தால் அந்த இடத்தில் பேரம் பேச முடியும். காரணம் அந்த இடத்தில் அந்த செயலுக்கு, அந்த பொருளுக்கு மதிப்பு குறையும். வரத்து அதிகமாகும் போது விலை குறைவது இந்த அடிப்படையில் தான். தக்காளி கிலோ ஒரு ரூபாய்க்கு வரும். காரணம் தக்காளியை பொறுத்த அளவில் அது ரொம்ப நாள் தாங்காது. குறிப்பிட்ட நேரத்தில் விற்றே ஆக வேண்டும். இதற்கு ஒரு முறை விலை குறைக்க வேண்டும். அதுவும் அதன் வரத்து அதிகமாக இருந்தால் மேற்கொண்டு விலை குறைய வேண்டும். இதுதான் சில உணவுப் பொருட்கள் அடிமாட்டு விலைக்கு வருவதற்கு காரணம். இதுவே ஒரு பொருள் குறிப்பிட்ட காலத்துக்குள் கெட்டுப் போகாமல் நிலையாக இருக்கும் என்றால் அதில் விலை குறைப்புக்கான வாய்ப்புகள் குறைவு. அதிலும் அது அந்தப் பகுதியில் எங்குமே கிடைக்காத ஒரு பொருளாக இருந்தால் விற்பனையாளர் வைப்பது தான் விலை.

மார்க்கெட்டுல வேற யார் என்ன விலை சொல்றாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு, "சார், இன்னொரு இடத்துல 30,000-க்கு தர்றாங்க, நீங்க 40,000 சொல்றீங்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க"ன்னு சொல்லுங்க. உங்கள இழக்க விரும்பாம, "சரி, உங்களுக்காக குறைக்கிறேன்"னு சொல்லுவாங்க. இப்படி போட்டியாளர்களை முன்னிறுத்தி பேரம் பேசலாம்.

பட்ஜெட் டைட்டுன்னு ஒரு சோக கதை சொல்லி பேரம் பேசலாம்  

 இது ஒரு அனுதாப டெக்னிக். கருணை உள்ளம் கொண்டவர்களிடம் பயனளிக்கும். இத நீங்க சிறிய கடைகள்ல , வியாபாரம் எப்பவாவது வர்ற இடத்துல யூஸ் பண்ண கூடாது . கொஞ்சம் பெரிய வியாபாரம் நடக்கிற இடம் ஓகே. காரணம் அதிகமா பணம் வர்ற இடத்துல ஒரு சிறிய தொகை போவது பற்றி கவலைப்பட மாட்டார்கள். தர்மம் செய்ததாக நினைத்துக் கொள்வார்கள். "சார், எங்க பட்ஜெட் ரொம்ப டைட்டா இருக்கு, உங்களால தான் உதவ முடியும்"ன்னு முகத்தை சோகமா வச்சு சொல்லுங்க. அனுதாபத்துக்கு பலர் இறங்கி வருவாங்க. அடபாவம்டா நல்ல விஷயத்துக்காக தான் பண்றோம்னு அவங்க லாபத்துல 5-10% குறைப்பாங்க. நமக்குத் தேவை அவர்கள் லாபத்தில் இருந்து குறைப்பு மட்டுமே. 

ஆஃப்-சீசனை உபயோகப்படுத்துங்க

சீசன் இல்லாத நேரங்களில் வைக்கும் திருமணம். "சார், இப்போ நிறைய மண்டபம் காலியா இருக்கு, ஆனால் எங்களுக்கு இந்த மண்டபத்துல பண்ணனும்னு விருப்பம், கொஞ்சம் குறைங்க"ன்னு சொல்லுங்க. ஆஃப்-சீசன்ல அல்லது வார நடுவுல (வீக் டேஸ்) திருமணம்னா மண்டபம் சும்மா இருக்கிறதுக்கு ஏதாவது கிடைக்கும்னு காலியா விடாம பணம் சம்பாதிக்க இறங்கி வருவாங்க. இது நல்லா வேலை செய்யும்!

பெரிய ஆர்டரை காரணமா சொல்லுங்க

"நாங்க உங்கள கேட்டரிங், பூ, அலங்காரம் எல்லாத்துக்கும் புக் பண்றோம், ஒரு பேக்கேஜா கொஞ்சம் குறைச்சு கொடுங்க"ன்னு பேசுங்க. ஒரு திருமணம்ன்னாலே பல தொழில்கள் சங்கமிக்கும் இடம் அது. சில மண்டபங்கள் எல்லாத்துக்குமே ஆஃபர் வச்சிருப்பாங்க. அப்படியான மண்டபத்துல வெளியில கொடுக்கிறதுக்கு உங்ககிட்டயே எல்லாத்தையும் வாங்கிக்கிறோம்னு சொல்லும்போது, ஒரே தரப்புக்கு பல வேலை கொடுக்கும்போது, "இவன விட்டா நஷ்டம்"னு யோசிச்சு, டிஸ்கவுண்ட் தர சம்மதிப்பாங்க. ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்!

சின்ன சின்ன சர்வீஸை குறைக்க சொல்லுங்க

"இந்த பேக்கேஜ்ல இவ்வளவு தேவை இல்லை, இத நீக்கினா எவ்வளவு குறையும்?"ன்னு கேளுங்க. உதாரணமா, கேட்டரிங்ல 10 ஐட்டம் சொன்னா, "7 ஐட்டம் போதும், விலைய குறைங்க"ன்னு பேசுங்க. இப்படி சின்ன சின்னதா குறைச்சு, பெரிய தொகைய மிச்சம் பண்ணலாம்.

பழைய வாடிக்கையாளர்னு ஒரு பீல் கொடுங்க

"எங்க குடும்பம் உங்கள கடைசி திருமணத்துக்கு பயன்படுத்திருக்கு, இப்பவும் உங்கள நம்புறோம், கொஞ்சம் சலுகை கொடுங்க"ன்னு சொல்லுங்க. பழைய உறவை முன்னாடி வச்சு பேசினா, "இவங்க நம்ம ஆளுங்க"னு மரியாதை கொடுத்து, விலைய குறைப்பாங்க.. இதுல ரிப்பீட் ஆர்டரை ஆசை காட்டுங்க. நல்லா பண்ணி கொடுத்தீர்கள் என்றால் இனி அடுத்த திருமணமும் உங்க கிட்டயே வரோம்னு எதிர்காலம் லாபம் பற்றிய ஒரு நம்பிக்கை கொடுங்க. "சார், இந்த திருமணம் நல்லா பண்ணி கொடுத்தீங்கன்னா, அடுத்த திருமணத்துக்கும் உங்கள தான் கூப்பிடுவோம், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க"ன்னு சொல்லுங்க. எதிர்கால வாடிக்கை கிடைக்கும்னு தெரிஞ்சா, இப்போவே சலுகை தருவாங்க.

நட்பா, சிரிச்சு பேசுங்க

"சார், நீங்க எங்க ஊரு ஆளு, உங்கள நம்பி தான் வந்தோம், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க"ன்னு சிரிச்சுக்கிட்டே, நட்பா பேசுங்க. கோபமா, கத்தாம, அன்போடு பேசினா, "இவனுக்கு ஒரு உதவி பண்ணுவோம்"னு பலர் இறங்கி வருவாங்க. இது ஒரு செம டெக்னிக்! கடைசி 

பேரம் பேசி முடிச்சதும், "சார், ரொம்ப நல்லா பேசினீங்க, நன்றி"ன்னு ஒரு நல்ல வார்த்தை சொல்லுங்க. அவங்களுக்கு சந்தோஷமா இருக்கும், அடுத்த திருமணத்துக்கும் உங்களுக்கு சலுகை தருவாங்க.

"சார், எங்க குடும்பத்துல இந்த வருஷம் 3 திருமணம் இருக்கு, எல்லாத்துக்கும் உங்கள தான் புக் பண்ணுவோம், கொஞ்சம் டிஸ்கவுண்ட் கொடுங்க"ன்னு சொல்லுங்க. ஒரே ஆளுக்கு பல வேலை கிடைக்குதுன்னு தெரிஞ்சா, "இவங்கள விடக்கூடாது"ன்னு விலைய குறைப்பாங்க.

"நாங்க உங்க ஊரு ஆளுங்க, வேற ஊர்ல இருந்து வரலை, உங்களுக்கு உதவுறோம்னு கொஞ்சம் குறைச்சு கொடுங்க"ன்னு சொல்லுங்க. உள்ளூர் ஆளுங்களுக்கு உதவணும்னு பல வியாபாரிகள் யோசிப்பாங்க, இது நல்லா வேலை செய்யும்.

பாராட்டி பேசுங்க

"சார், உங்க சர்வீஸ் சூப்பர்னு எல்லாரும் சொல்றாங்க, அதான் உங்கள புக் பண்ணோம், கொஞ்சம் டிஸ்கவுண்ட் கொடுங்க"ன்னு புகழ்ந்து பேசுங்க. அவங்களுக்கு ஒரு பெருமை, சந்தோஷம் வந்தா, "சரி, இவனுக்கு ஒரு சலுகை தருவோம்"னு இறங்கி வருவாங்க.

"நான் பாதி பணத்தை இப்பவே தர்றேன், மீதிய திருமணத்துக்கு அப்புறம் தர்றேன், கொஞ்சம் குறைங்க"ன்னு சொல்லுங்க. முன்னாடியே பணம் கைல வந்தா, விற்பனையாளர்கள் சந்தோஷப்படுவாங்க, விலையில கொஞ்சம் இறங்குவாங்க.

சின்ன சமரசம் பண்ண சொல்லுங்க

" ரொம்ப விலை உள்ளது இல்லாவிட்டாலும் பரவால்ல, அதுக்கு விலைய குறைங்க"ன்னு சொல்லுங்க. உங்களுக்கு பெரிய பிரச்னை இல்லாத சின்ன சின்ன விஷயங்கள குறைச்சு, அதுக்கு ஏத்த மாதிரி விலையையும் குறைக்க சொல்லுங்க.

பெரிய கூட்டத்தை சொல்லி பேசுங்க

"எங்க திருமணத்துக்கு 300 பேர் வருவாங்க, பெரிய ஆர்டர்னு கொஞ்சம் டிஸ்கவுண்ட் கொடுங்க"ன்னு சொல்லுங்க. பெரிய எண்ணிக்கைன்னு தெரிஞ்சா, "இவனுக்கு கொஞ்சம் சலுகை தந்தாலும் லாபம் வரும்"னு யோசிச்சு இறங்குவாங்க.

உதவி கேட்குற மாதிரி பேசுங்க

"சார், இது எங்க முதல் திருமணம், கொஞ்சம் செலவு ஜாஸ்தியா போகுது, உங்க உதவி வேணும், குறைச்சு கொடுங்க"ன்னு சொல்லுங்க. உதவி கேட்குற மாதிரி பேசினா, பலருக்கு மனசு இறங்கி, "சரி, உனக்கு பண்ணுறேன்"னு சொல்லுவாங்க.

"சார், விலைய குறைக்க முடியலேன்னாலும், ஒரு சின்ன அலங்காரம் இலவசமா பண்ணி கொடுங்க"ன்னு சொல்லுங்க. விலைய குறைக்க முடியலைன்னாலும், ஏதாவது இலவசமா தர சம்மதிப்பாங்க – இதுவும் ஒரு வகையில மிச்சம் தான்!

கடைசியா, பேரம் பேசும்போது சிரிச்சு, அன்பா, பொறுமையா பேசுங்க. "நீங்க இப்படி பண்ணி கொடுத்தீங்கன்னா, உங்களுக்கு நல்ல பேர்"ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க. ஒரு இடத்துல 5,000, இன்னொரு இடத்துல 10,000 மிச்சமாச்சுன்னாலும், மொத்தமா பெரிய தொகை கையில இருக்கும். திருமணம் அழகா, பட்ஜெட்டுல முடியும்.

---------------------------------------------------------

அல்மஹ்ர் முஸ்லிம் மேட்ரிமோனி

மணமகளுக்கு முற்றிலும் கட்டணம் இல்லை

Whatsapp : 9789271238

----------------------------------------------------------