திருமணம் என்றாலே ஒவ்வொரு குடும்பத்திலும் அது பெரிய கனவு. தன் பிள்ளைக்கு ஊரே அசந்து போகிற மாதிரி இப்படி இப்படி செய்யணும்னு. இது பணம் உள்ளவர்களுக்கு சாத்தியம். ஆனால் பணம் இல்லாதவர்களுக்கு கூட குறைந்தபட்சம் யாரும் குறை சொல்லாத அளவு கண்ணியமாக நடத்த வேண்டும் என்ற ஆசை இருக்கும் . சில விஷயங்களை தெரிந்து கொண்டால் கிடைக்க வேண்டியதை குறைந்த செலவிலேயே பெற முடியும். யாருமே குறை சொல்ல முடியாதபடி இயல்பான திருமணமாக இருக்கும். ஆனால் அதற்கான பட்ஜெட் குறைவாக இருந்திருக்கும் .அது என்னென்ன பார்க்கலாம் வாங்க!
பட்ஜெட் திட்டமிடல்
எந்த ஒரு காரியங்களிலுமே அதை செய்து முடிப்பதற்கு எவ்வளவு பட்ஜெட் ஆகும்? நம்ம கிட்ட எவ்வளவு இருக்கு? மேற்கொண்டு எவ்வளவு தேவைப்படும்? சமாளிக்க முடியுமா? இந்தப் பிளானை முதலில் செய்ய வேண்டும். எது எது கட்டாயம் தேவை . எது எது இருந்தால் நல்லா இருக்கும் ஆனால் இல்லாவிட்டாலும் பிரச்சனை இல்லை. எது எது நமக்கு தேவைப்படாது, நமக்கு வேண்டாம் என இந்த வரிசையில் நமது தேவைகளை வரிசைப்படுத்தினால் தேவையற்ற செலவுகளை நாம் தவிர்க்க முடியும். சில கல்யாணத்துக்கு போகும்போது பார்த்திருக்கிறேன். சாப்பிடுபவர்களுக்கு வாட்டர் பாட்டில் வேண்டும் என்பது மட்டும் தான் அவர்களின் நோக்கமாக இருந்திருக்கும். ஆனால் அளவைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. அரை லிட்டர் கேன் ஒவ்வொருவருக்கும் வைக்கிறார்கள். முதலில் இது பணம் கூடுதல் செலவு. இரண்டாவது ஒவ்வொருவரும் அவர் ஒரு பாட்டிலில் அதிகமான தண்ணீர் மிச்சம் வைத்து குப்பைக்கு போகிறது. காரணம் சாப்பிட்டுவிட்டு அந்த அளவு தண்ணீரை அவர்களால் குடிக்க முடிவதில்லை. இதை யோசித்து இருந்தால் அவர்களது பட்ஜெட்டில் சிறிது குறைந்திருக்கும். இப்போ இந்த இடத்துல அவ்வளவு பெரிய பாட்டில் நமக்கு தேவையில்லை. சின்ன பாட்டில் போதும். பிளான்ல வரணும்.
அழைப்புகளை முடிந்தளவு குறைப்பது
எல்லாரையும் கூப்பிட வேண்டிய அவசியமில்லை. நெருங்கிய உறவினர்கள், நண்பர்களை மட்டும் அழைத்தால் செலவு குறையும், நெருக்கமும் அதிகரிக்கும்.
பெரும்பாலான திருமணம் சிக்கிக் கொள்வது இதில் தான். அழைப்புகளின் அளவே தெரியாது. எவ்வளவு அழைப்புக்கு எத்தனை பேர் வருவார்கள் தெரியாது. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு தயார் செய்ய வேண்டும் என்று தெரியாது. வந்தவர்களுக்கு சாப்பாடு இல்லை. சரி வந்ததுக்கு குடிக்க தண்ணியாவது கொடுங்க என்று கேட்டு அது கூட இல்லாமல் இருந்த அவலத்தை பார்த்திருக்கிறேன். காரணம் அழைப்புகளின் அளவும் அவர்களுக்கான தேவையும் தெரியாமல் இருந்தது.
இதுல ஒரு விஷயம், அதிகமான பேரை அழைத்தால் யாரை கவனிக்கிறோம், கவனிக்கவில்லை என்றே தெரியாது. என்னை கண்டு கொள்ளவில்லை என்று திருமணத்துக்கு வந்து அந்த திருமணத்தால் வில்லனாகி போனவர்கள் உண்டு. ஒரு நல்ல காரியத்தில் பிரச்சனை வருவது இதனால் தான். உறவுகளை அழையுங்கள், வீட்டின் அருகில் வசிப்பவர்களை அழையுங்கள். அடிக்கடி பார்ப்பவர்களையும் கூட அழைக்கலாம். எப்பவோ பார்த்தவர்கள் , வழியில் பேசியவர்கள், அப்பப்போ பார்ப்பவர்கள் , இனி பார்க்கவே வாய்ப்பு இல்லாதவர்கள் இவர்களுக்கெல்லாம் அழைப்பு கொடுக்கத் தேவையில்லை. அதுலயும் சில பேர் உண்டு. நமது தூரத்து உறவுகள் என்று நாம் அழைப்பு கொடுத்தால் என் சொந்தக்காரங்களையும் கூப்பிடுங்கள் என்று அவர்கள் சில வீட்டை காட்டுவாங்க. அவங்க வீட்ல இருந்து எத்தனை பேர் வருவார்கள் என்று நாம எதிர்பார்க்கவே முடியாது. விளைவு உக்கார கூட முடியாத அளவுக்கு கூட்டம் ஏற்படுவதை பார்க்க முடியும். அதனால் முடிந்த அளவு அழைப்பை குறைப்பது திருமணத்தில் மிகச் சிறப்பு. திருமணம் நல்லபடியாக முடிந்த பிறகு வேண்டுமானால் மற்றவர்களுக்கு ஒரு சிறிய சாப்பாடு வைக்கலாம். திருமணத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
எளிமையான இடத்தை தேர்வு செய்யவும்
திருமணம்னாலே பெரிய மண்டபம், ஆடம்பரமான அலங்காரம், பளபளப்பான இடம் என்று ஆசை வரும். ஆனால், உண்மையில் இதெல்லாம் செலவை மட்டுமே அதிகப்படுத்தும், இது உறவுகள் நெருக்கத்தை கூட அதிகப்படுத்தாது . காரணம் வந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியாது. சின்ன இடம் தான் கண்ணுக்கு முன்னாடி இருப்பாங்க . நமக்கு ஏசி மண்டபமோ, ஸ்டார் ஹோட்டலோ தேவை கிடையாது. உங்கள் வீட்டு மாடி, உறவினர் வீட்டு நிலம் ,கிராமத்தில் உள்ள சிறிய மண்டபம், அல்லது சமூககூடம் போன்றவை. இந்த இடங்கள் பெரும்பாலும் குறைந்த வாடகையில் கிடைக்கும் அல்லது சில இடங்கள் இலவசமாகவே பயன்படுத்தலாம். உறவுகள் நண்பர்களின் இடங்களில் காசு கொடுக்க வேண்டுமா என்ன? பெரிய மண்டபங்களில் அதற்கு ஏற்ப வாடகையும், கேட்டரிங் செலவும் அதிகம். ஆனால், உங்களுக்கு 100-150 பேர் மட்டுமே என்றால் சிறிய இடம் போதும். சிறிய இடத்தில் எல்லாரையும் பார்த்து, பேசி மகிழலாம். சிறிய மண்டபத்தில் மழை பெய்தால் என்ன செய்வது, வெயில் அதிகமானால் எப்படி என்று முன்னெச்சரிக்கை செய்துகொள்ள வேண்டும். ஒரு பெரிய மண்டபத்துக்கு ஒரு நாள் வாடகை 50,000 ரூபாய் என்றால், சிறிய இடத்துக்கு 10,000-15,000 ரூபாயில் முடிந்துவிடும். அடுத்து, அலங்காரத்துக்கும் அதிக பணம் தேவையில்லை – சிறிய இடத்தை சிறிய முயற்சியில் அழகாக்கலாம். அதிகமான வேலை ஆட்களும் தேவைப்படாது. எனவே எளிமையான இடத்தை தேர்ந்தெடுப்பது செலவைக் குறைப்பது மட்டுமல்ல, உங்கள் திருமணத்தை உணர்வுபூர்வமாகவும் சிறப்பாகவும் மாற்றும்.
முகூர்த்த காலங்களில் தவிர்த்தல்
திருமண செலவை குறைப்பதில் திருமணம் பிக்ஸ் பண்ற காலம் முக்கியம். முகூர்த்த காலங்களில் தான் அதிகமான திருமண வைப்பார்கள் . பூ விலை, காய்கறி விலை தாறுமாறா இருக்கும். நினைக்கிற மண்டபம் கூட கிடைக்காது. இதைத்தவிர்த்து திருமணம் இல்லாத சீசனில் திருமணம் செய்தால் மண்டபம், கேட்டரிங் எல்லாம் குறைந்த விலையில் கிடைக்கும். உண்டான விலையை கொடுப்பதே கஷ்டமாக இருக்கும் போது போட்டியில் நுழைந்து பணத்தை விரயமாக்குவது நல்லதில்லை.
முகூர்த்த நாட்கள் அதிகம் இருக்கும் நாட்களில் திருமணங்கள் பரபரப்பாக நடக்கும். இதை "பீக் சீசன்" என்று சொல்லலாம். இந்த சமயத்தில் எல்லாம் டிமாண்ட் அதிகமாக இருப்பதால், விலையும் ஏறி விடுகிறது.முகூர்த்த காலங்களில் மண்டபங்கள், கேட்டரிங், பூக்கடை, ஒப்பனைக்காரர்கள் எல்லாருக்கும் புக் செய்ய ஆள் குவியும். எல்லாரும் ஒரே நேரத்தில் கேட்கும்போது, விலை ஏறுவது சகஜம். இதை தவிர்த்தால், இந்த அதிகப்படியான செலவை மிச்சப்படுத்தலாம். சீசன் இல்லாத நேரத்தில் தள்ளுபடி கேட்கவும் எளிது. பேரம் பேசினால், பெரும்பாலும் ஒத்துக்கொள்வார்கள். பூக்களும் சீசன் இல்லாத நேரத்தில் மலிவாக கிடைக்கும்.நன்மைகள் என்ன? ஒரு திருமணத்துக்கு மொத்த செலவு 5 லட்சம் என்றால், ஆஃப்-சீசனில் 3-4 லட்சத்தில் முடிந்துவிடலாம்.
எளிய அழைப்பிதழ்கள்
திருமணம் என்றாலே அழைப்பிதழ் ஒரு பெரிய விஷயமாகி விடுகிறது. பலர் இதை ஒரு ஸ்டேட்டஸ் சின்னமாகவே பார்க்கிறார்கள். ஆடம்பரமாக செலவு செய்கிறார்கள். ஆனால், உண்மையில் அழைப்பிதழின் நோக்கம் என்ன? உங்கள் மகிழ்ச்சியை அன்போடு பகிர்வது. ஒரு ஆடம்பர அழைப்பிதழுக்கு 50-100 ரூபாய் செலவாகலாம். 500 பேருக்கு என்றால், 25,000-50,000 ரூபாய் போய்விடும்.மேலும், திருமண அட்டைகள் பெரும்பாலும் படித்தவுடன் கிழித்துவிடவும்னு குப்பைக்கு தான் போகும் . நீங்க யாரோடையும் பத்திரமா வச்சுக்கிட்டே இருக்கீங்களா என்ன? அதற்கு பதிலாக, எளிய முறையில் அனுப்பினால் பணமும் மிச்சம், குப்பையும் குறையும்.
முதல் வழி, டிஜிட்டல் அழைப்பிதழ்கள். இப்போது எல்லாரிடமும் ஸ்மார்ட்ஃபோன் இருக்கு. Whatsapp இருக்கு. தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் மொபைல் போனில் டிசைன் செய்து தருவார்கள். அதை எல்லாருக்கும் whatsapp பண்ணினால் செலவே இருக்காது. வாட்ஸ் அப் பண்ணிட்டு ஒரு போன் கால். நேர்ல பார்க்க அலைகிற செலவு கூட மிச்சம். டிஜிட்டல் அழைப்பிதழில் "காகிதத்தை மிச்சப்படுத்தி பூமியை காப்போம்" னு ஒரு வரி சேர்த்தால் போதும் எல்லாரும் பிளாட்டு!!
இரண்டாவது வழி, சிறிய அளவில் எளிய அட்டைகள். அச்சகத்தில் ஒரு பக்க அட்டையை மலிவாக அச்சடித்து, அதை நெருங்கியவர்களுக்கு மட்டும் கொடுக்கலாம். மற்றவர்களுக்கு வாயில் கூட சொல்லிக் கொள்ளலாம். முடிஞ்ச அளவு அழைப்பிதழ் விஷயத்தில் செலவு சுருக்க முயற்சி பண்ணனும். காரணம் அது தேதி முடிந்ததும் குப்பைக்கு மட்டுமே!
உணவு செலவு
திருமணத்தில் உணவு ஒரு பெரிய விஷயம், அதுவும் செலவு பெருக்கும் ஒரு முக்கிய பகுதி. இதில் சமரசம் செய்வது கொஞ்சம் கடினம்தான். திருமணத்துக்கு பலரும் வருவதே அவர்களுக்கு ஒருவேளை நல்ல ஒரு சாப்பாடு கிடைக்கிறது என்றுதான். எல்லாருக்குமே ஒரே மாதிரி தான் பத்திரிக்கை வைக்கிறோம். ஆனா கல்யாண நேரத்துல கூட்டம் இருப்பதையும் , பந்தி தொடங்கியவுடன் இருக்கும் கூட்டத்தையும் பார்த்தாலே புரியும். திருமணம் என்றாலே பலருக்கும் சாப்பாடு மட்டுமே. அதை சிறப்பாக செய்து கொடுத்து வந்தவர்கள் வாழ்த்தாவிட்டாலும் பரவாயில்லை ஆசையோடு வந்து ஏமாறாமல் சென்றால் போதும். பலர் இப்போது பலவகை உணவுகள் – சைனீஸ், நார்த் இந்தியன், கான்டினென்டல் என்று பட்டியலை நீட்டுகிறார்கள். ஆனால், உள்ளூர் உணவு மெனுவை தேர்ந்தெடுத்தால் செலவு குறையும், உள்ளூர் உணவு மெனு என்றால் உங்கள் பகுதியில் பாரம்பரியமாக சமைக்கப்படும், எளிதாக கிடைக்கும் பொருட்களால் செய்யப்படும் உணவுகள். உதாரணமாக சாம்பார், ரசம், பொரியல், கூட்டு, பாயாசம், அப்பளம், வடை, சாதம் என்று ஒரு எளிய சைவ சாப்பாடு. அல்லது மதுரை பக்கம் என்றால் பருப்பு பொடி இடியாப்பம், கார குழம்பு என்று உள்ளூர் சுவை. இதெல்லாம் பெரிய ஹோட்டல் மெனு இல்லை, ஆனால் சுவையில் தூக்கலாம்!
பிரியாணியை எடுத்துக் கொண்டால் அதுக்கு ஒரு சாம்பார், வெங்காய சம்பல் போதுமானது. மேற்கொண்டு சிக்கன்65, ஜாம் இதெல்லாம் ஆடம்பரம். மேலும் வாட்டர் பாட்டில் தேவையில்லை . ஒரு பிளாஸ்டிக் கிளாஸ் வைத்து தண்ணீர் நாமே ஊற்றலாம். அல்லது இலைக்கு ஒரு வாட்டர் பாக்கெட் வைக்கலாம். இது செலவுகளை வெகுவாக குறைக்கும்
திருமணத்தில் குடும்பத்தினர் உதவி
கேட்டரிங்குக்கு பதில், உறவினர்கள் சமைத்தால் செலவு மிச்சம். அத்தை சமையல், மாமா பரிமாறல். இதுவே ஒரு ஜாலி!
திருமணம் என்றாலே பெரிய செலவு, பலரை சார்ந்து நடக்கும் விஷயம். ஆனால், இதை எல்லாம் ப்ரொஃபெஷனல் டீமிடம் ஒப்படைக்காமல், குடும்பத்தினரை உள்ளே இழுத்தால் எப்படி செலவு குறையும், எப்படி இது சிறப்பாக இருக்கும் என்று பார்க்கலாம். குடும்பத்தினர் உதவி என்றால் என்ன? இதில் பெரிய கேட்டரிங் டீம், டெகரேஷன் நிறுவனம், புரோகிதர் குழு என்று எல்லாவற்றையும் வெளியாட்களை சார்ந்து செய்யாமல், உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் உறவினர்களையும் ஈடுபடுத்துவது. உதாரணமாக, அத்தை சமையல், மாமா பரிமாறல், அண்ணன் அலங்காரம், தங்கை வரவேற்பு – இப்படி எல்லாரும் ஒரு பங்கு எடுத்துக்கொள்ளலாம்.ஏன் குடும்பத்தினரை உள்ளே இழுக்க வேண்டும்? முதல் காரணம் – செலவு மிச்சம். ஒரு கேட்டரிங் டீமுக்கு 50,000-1,00,000 ரூபாய் செலவு செய்ய வேண்டிய இடத்தில், குடும்பத்தினர் சமைத்தால் பொருள் செலவு மட்டும் (20,000-30,000 ரூபாய்) போதும். அடுத்து, இது ஒரு கூட்டு முயற்சியாக மாறும் – எல்லாரும் சேர்ந்து செய்யும்போது, திருமணம் வெறும் செலவு இல்லாமல் ஒரு குடும்ப சந்திப்பாகவும் மாறும். பணம் மிச்சமாவதோடு, நினைவுகளும் சேரும்!எப்படி செயல்படுத்துவது என்றால் முதலில், உங்கள் குடும்பத்தில் யாருக்கு என்ன திறமை இருக்கிறது என்று பாருங்கள். சமையலில் ஒருவர் வித்தை காரராக இருப்பார் . ஒருங்கிணைப்பு திறன் ஒருவரிடம் இருக்கும். சிலருக்கு ஊர் சுற்ற பிடிக்கும் . பொருட்களை வாங்கி வர அவர்களை பயன்படுத்தலாம். அலங்கார நிபுணத்துவம் ஒருவரிடம் இருக்கும். அண்ணன்-தம்பி குழு விருந்தினரை வரவேற்கலாம், பார்க்கிங்கை கவனிக்கலாம். இப்படி எல்லாருக்கும் ஒரு சின்ன வேலை கொடுங்கள். ஒரு சிறிய திட்டம் போட்டு, முன்னாடியே பேசி வைத்துக்கொள்ளுங்கள்.நன்மைகள் என்ன? முதலில், செலவு பெரிய அளவில் குறையும் – கேட்டரிங், டெகரேஷன், ஒருங்கிணைப்பு எல்லாம் இலவசமாக முடியும். அடுத்து, குடும்ப பந்தம் வலுப்படும் – எல்லாரும் சேர்ந்து உழைக்கும்போது, சிரிப்பு, கலகலப்பு, சின்ன சண்டை எல்லாம் சேர்ந்து ஒரு ஜாலியான அனுபவமாக மாறும். மூன்றாவது, உணவு முதல் அலங்காரம் வரை எல்லாம் உங்கள் குடும்பத்தின் தனித்தன்மையை பிரதிபலிக்கும் – குடும்பசமையல் சுவையை எந்த கேட்டரிங்காலும் தர முடியாது!
சவால்கள் இருக்குமா? ஆமாம், கொஞ்சம் இருக்கலாம். எல்லாரும் ஒத்துழைப்பார்களா, நேரத்துக்கு வேலை முடியுமா என்று சந்தேகம் வரலாம். அதனால், ஒரு தலைவர் (லீடர்) தேவை. பெரிய கூட்டம் என்றால் (200-300 பேர்), குடும்பத்தினர் மட்டும் போதாது, கொஞ்சம் வெளி உதவி தேவைப்படலாம். ஆனால், 50-100 பேர் என்றால் இது சுலபமாக சாத்தியம். எனவே, குடும்பத்தினர் உதவியை பயன்படுத்துவது செலவைக் குறைப்பது மட்டுமல்ல, திருமணத்தை ஒரு அன்பான, நினைவு மறக்காத அனுபவமாக மாற்றும். உங்கள் குடும்பத்தில் யாரை எப்படி பயன்படுத்தலாம் என்று யோசிச்சு பாருங்க,
ஆடைகளை வாடகைக்கு எடுக்கவும்
திருமணம் என்றாலே மணமகன், மணப்பெண்ணுக்கு புது ஆடைகள், அதுவும் பட்டு, நகை என்று பெரிய செலவு ஆகிவிடுகிறது. ஆனால் திருமணத்திற்கென்று வாங்கும் ஆடைகளை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவதில்லை. அது ஒரு தனித்துவமான ஆடை என்பதால் அதை சாதாரண காலங்களில் பொதுவில் பயன்படுத்த வழியும் இல்லை. ஆனால், இதை வாடகைக்கு எடுத்தால் செலவு குறையும், இதில் மணமகன், மணப்பெண்ணுக்கு தேவையானவற்றை புதிதாக வாங்காமல், வாடகைக்கு எடுப்பது. இப்போது பல ஊர்களில் வாடகை ஆடை கடைகள் இருக்கிறது. அங்கே சென்று உங்களுக்கு பிடித்த டிசைனை தேர்ந்தெடுத்து, ஒரு நாள் அல்லது இரண்டு நாள் பயன்படுத்திவிட்டு திருப்பி கொடுக்கலாம். நகைகளையும் சில இடங்களில் வாடகைக்கு தருவார்கள்.
ஏன் வாடகைக்கு எடுக்க வேண்டும்? முதல் காரணம் – செலவு. ஒரு நல்ல பட்டு சேலை 20,000-50,000 ரூபாய் வரை ஆகலாம், மணமகனுக்கு பேண்ட் , சட்டை என்று 10,000-20,000 ரூபாய் சேரும். ஆனால், வாடகை என்றால் அதே சேலையை 2,000-5,000 ரூபாய்க்கு எடுக்கலாம், வேட்டி-சட்டை 1,000-2,000 ரூபாயில் கிடைக்கும். 50,000 செலவு செய்ய வேண்டிய இடத்தில் 5,000-10,000 ரூபாயில் முடியும். அடுத்து, இந்த ஆடைகள் பெரும்பாலும் ஒரு நாள் தான் உபயோகப்படும் – பிறகு அலமாரியில் தூசி பிடிக்கும். அதற்கு பதில், வாடகை எடுத்தால் பயன்படுத்தி, திருப்பி கொடுத்துவிட்டு டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்.எப்படி செய்வது? முதலில், உங்கள் ஊரில் உள்ள வாடகை ஆடை கடைகளை தேடுங்கள். சென்னை, மதுரை, கோவை போன்ற பெரிய ஊர்களில் இது சுலபமாக கிடைக்கும். உங்களுக்கு பிடித்த நிறம், டிசைன் தேர்ந்தெடுத்து, திருமண தேதியை சொல்லி புக் செய்யுங்கள். சில கடைகளில் ஒரு சிறிய டெபாசிட் கேட்பார்கள், பயன்படுத்திய பிறகு திருப்பி கொடுத்தால் அதை திரும்ப தருவார்கள். அளவு சரியா இருக்கிறதா என்று ட்ரையல் பண்ணி பார்த்துக்கொள்ளுங்கள்.
நன்மைகள் என்ன? முதலில், செலவு பெரிய அளவில் குறையும். ஒரு லட்சம் செலவு ஆக வேண்டிய இடத்தில் 10,000-20,000 ரூபாயில் முடியும். அடுத்து, இடப்பிரச்னை இல்லை – புது ஆடைகளை வாங்கினால் எங்கே வைப்பது, எப்படி பராமரிப்பது என்று யோசிக்க வேண்டும், வாடகையில் அது தேவையில்லை. மூன்றாவது, பல விதமான ஆடைகளை ட்ரை பண்ணலாம் – ஒரு நாளைக்கு மூன்று சேலை மாற்ற வேண்டும் என்றால், மூன்றையும் வாடகைக்கு எடுத்து செலவை குறைக்கலாம். அழகு குறையாமல் பல லுக்ஸ் கிடைக்கும்! சவால்கள் இருக்குமா என்றால் சிலருக்கு "வாடகை ஆடையா?" என்று தயக்கம் இருக்கலாம், "புதுசு வாங்கினால் தான் சிறப்பு" என்று நினைப்பார்கள். ஆனால் வாடகை ஆடைகள் புது மாதிரி சுத்தமாக தான் இருக்கும். இது அவர்களின் தொழிலாயிற்றே. யாருக்கும் வித்தியாசம் தெரியாது. மேலும், "இது ஒரு நாள் தானே, ஸ்மார்ட்டா செலவு செய்வோம்" என்று குடும்பத்தை சம்மதிக்க வைத்தால் பிரச்னை இல்லை. சில சமயம் சைஸ் அல்லது டிசைன் பிடிக்காமல் போகலாம், அதனால் முன்கூட்டியே சென்று பார்ப்பது முக்கியம்.எனவே, ஆடைகளை வாடகைக்கு எடுப்பது செலவைக் குறைப்பது மட்டுமல்ல, உங்கள் திருமணத்தை ஸ்மார்ட்டாகவும் அழகாகவும் மாற்றும்.
நண்பர்களை புகைப்படக்காரராக்குங்கள்
திருமணத்தில் புகைப்பட செலவை கம்மியாக்க உங்க நண்பர்களை புகைப்படக்காரர்களா மாற்றிடுங்க! ப்ரொஃபெஷனல் ஃபோட்டோகிராஃபரை அமர்த்தினா அதுக்கே ஆயிரக்கணக்குல செலவாகலாம். ஆனா, இப்போ உங்க நண்பர்கள் கைல இருக்குற ஸ்மார்ட்ஃபோன்கள்லயே HD கேமரா இருக்கு, சிலர் DSLR-ம், GoPro-வும் வச்சிருப்பாங்க. இதை ஸ்மார்ட்டா யூஸ் பண்ணிக்கலாம். முதல்ல உங்க நெருங்கிய நண்பர்களை கூப்பிட்டு ஒரு சின்ன பிளான் போடுங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஸ்பெஷல் மொமெண்டை கவர் பண்ண சொல்லுங்க. ஒருத்தர் மணமக்களை படம் பிடிக்கட்டும்; இன்னொருத்தர் வரவேற்பு பகுதி, உறவினர்கள், குழந்தைகள் ஆடுறது, சிரிக்கிறதை கவர் பண்ணட்டும்; வேறொருத்தர் சாப்பாடு ஏரியாவுல விருந்து, அங்க நடக்குற சின்னச் சின்ன தருணங்களை பிடிக்கட்டும். இப்படி பொறுப்பை பிரிச்சு கொடுத்தா எல்லாம் கவர் ஆகும்.
கொஞ்சம் முன்னாடியே, ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒரு மீட்டிங் வச்சு, எந்த எந்த மொமெண்ட்ஸ் முக்கியம், எப்படி எடுக்கணும், எந்த ஆங்கிள்ஸ் நல்லா இருக்கும்னு பேசி முடிவு பண்ணுங்க. உதாரணமா, மணமக்கள் மாலை மாற்றுறப்போ மேடையில இருந்து ஒரு க்ளோஸ்-அப், கூட்டத்துல இருந்து ஒரு வைட் ஷாட் எடுக்க சொல்லலாம். இதுக்கு கொஞ்சம் க்ரியேட்டிவிட்டி வேணும், ஆனா உங்க நண்பர்கள் இதை என்ஜாய் பண்ணுவாங்க. இன்னொரு டிப்ஸ் – ஒரு கூகுள் டிரைவ் ஃபோல்டர் உருவாக்கி, எல்லாரும் எடுத்த போட்டோ, வீடியோவை உடனே அப்லோட் பண்ண சொல்லுங்க, இல்லேனா ஏதாவது மிஸ்ஸாக வாய்ப்பிருக்கு.
இப்படி பண்ணா போட்டோ, வீடியோ செலவு முழுசா மிச்சமாகும். அதோட, உங்க நண்பர்கள் எடுக்குற போட்டோக்களுக்கு ஒரு பர்சனல் டச் இருக்கும். அவங்க உங்களை நல்லா தெரிஞ்சவங்க, உங்க கல்யாணத்தோட உணர்ச்சிகளை, மொமண்டை அவங்க பாணில பிடிப்பாங்க. இது உங்க ஆல்பத்துக்கு ஒரு யூனிக் அழகை கொடுக்கும். முக்கியமா, இந்த அனுபவம் உங்க நண்பர்களுக்கு ஒரு ஃபன் ஆக்டிவிட்டியா இருக்கும், உங்களுக்கும் அவங்க பங்களிப்பு கல்யாணத்தை இன்னும் ஸ்பெஷலா மாற்றிடும். ஒரு கல், பல மாங்காய்!
எல்லாமே ஒரே இடத்தில்
திருமணத்துக்கு செலவைக் குறைக்கணும்னா, திருமணமும் வரவேற்பும் ஒரே இடத்துல நடத்துறது ஒரு சிறந்த ஐடியா! வழக்கமா திருமணத்துக்கு ஒரு நாள், ஒரு மண்டபம், வரவேற்புக்கு இன்னொரு நாள் இன்னொரு மண்டபம்னு தனித்தனியா புக் பண்ணும்போது மண்டப வாடகை, டெகரேஷன், கேட்டரிங் எல்லாமே இரண்டு மடங்கு செலவாகும். அதுக்கு பதிலா, ஒரே இடத்துல ரெண்டு நிகழ்ச்சியையும் முடிச்சுட்டா இந்த செலவுகள் பாதியாகிடும். உதாரணமா, ஒரே மண்டபத்துல காலைல திருமண சடங்குகள் நடத்தி, மதியம் அல்லது மாலைல அதே இடத்தை கொஞ்சம் ரீ-அரேஞ்ச் பண்ணி வரவேற்பு செட் பண்ணிடலாம். இதனால மண்டப வாடகை ஒரு முறை மட்டுமே ஆகும், டெகரேஷனும் ஒரே முறை செட் பண்ணா போதும். ஒரு சின்ன மாற்றம் பண்ணி திருமணத்துக்கு பூ வளையம், வரவேற்புக்கு விளக்கு டெகர் பண்ணிடலாம். இது தவிர, உறவினர்கள், நண்பர்கள் எல்லாரும் ஒரே இடத்துக்கு ஒரே நேரத்துல வந்துடுவாங்க, இதனால வண்டி வாடகை, பயண செலவு எல்லாம் கம்மியாகும். கேட்டரிங்கையும் ஒரே இடத்துல ஒரே டீமை வச்சு மேனேஜ் பண்ணலாம், இது கூடுதல் காசு மிச்சப்படுத்தும். முக்கியமா, ஒரே இடத்துல எல்லாம் நடக்கும்போது உங்களுக்கு லாஜிஸ்டிக்ஸ் டென்ஷன் குறையும், எல்லாத்தையும் ஒரே இடத்துல இருந்து கவனிக்கலாம். இப்படி ஒரே இடத்துல ரெண்டு நிகழ்ச்சியையும் சிம்பிளா முடிச்சு பெரிய செலவை தவிர்க்கலாம்!
குறைவான நிகழ்ச்சிகள்
திருமணத்தில் செலவைக் குறைக்க சடங்குகளை எளிமையாக்கி, தேவையில்லாத நிகழ்ச்சிகளை ஸ்கிப் பண்ணிடுங்க. இது நேரத்தையும் பணத்தையும் ரொம்ப மிச்சப்படுத்தும்! பொதுவா, கல்யாணத்துல நிறைய சடங்குகள், பாரம்பரிய நிகழ்வுகள்னு நீட்டிக்கும்போது ஒவ்வொன்னுக்கும் தனியா செலவு – பொருட்கள், அலங்காரம், கேட்டரிங், ஏன், மண்டபத்துல கூடுதல் நேரம் வாடகை கூட ஆகும். அதுக்கு பதிலா, உங்களுக்கு முக்கியமான, உங்க கலாச்சாரத்துக்கு அவசியமான சடங்குகளை மட்டும் வச்சுக்கோங்க. உதாரணமா, சில பாரம்பரிய நிகழ்ச்சிகளை சின்னதா, வீட்டுலயே செஞ்சு முடிச்சுட்டு, மெயின் இவென்டை மட்டும் மண்டபத்துல வைங்க. இதனால மண்டப வாடகை, டெகரேஷன், உறவினர்களோட பயண செலவு எல்லாம் குறையும்.
கேட்டரிங்கையும் எளிமையா, ஒரு நல்ல மெனுவோட ஒரே ஒரு விருந்தா பிளான் பண்ணா, ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனியா சமைக்க வேண்டிய செலவு தவிர்க்கலாம். இது தவிர, குறைவான நிகழ்ச்சிகள்னா உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் ஓடி ஓடி வேலை பார்க்க வேண்டிய டென்ஷன் கம்மியாகும். எல்லாரும் டயர்டு ஆகாம, கல்யாணத்தை ரிலாக்ஸ்டா என்ஜாய் பண்ண முடியும். எளிமையா, ஆனா அழகா உங்க கல்யாணத்தை செலவு குறைச்சு கொண்டாடலாம்!
கூட்டு செலவு பகிர்வு
திருமண செலவைக் குறைக்க ஒரு அருமையான வழி, மணமகன் மற்றும் மணப்பெண் குடும்பம் சேர்ந்து செலவுகளை பகிர்ந்து கொள்வது! வழக்கமா ஒரு குடும்பமே எல்லா செலவையும் ஏத்துக்கும்போது, அது பெரிய பொருளாதார சுமையா மாறிடும். அதுக்கு பதிலா, ரெண்டு குடும்பமும் ஒரு டேபிள் போட்டு உட்கார்ந்து, எந்த செலவை யாரு எப்படி பங்கு போட்டுக்கறதுனு பேசி முடிவு பண்ணா, ரொம்ப ரிலாக்ஸா இருக்கும். உதாரணமா, மணமகன் குடும்பம் மண்டப வாடகையையும் கேட்டரிங்கையும் ஏத்துக்கலாம், மணப்பெண் குடும்பம் டெகரேஷன், புகைப்படம் எடுக்குற செலவை பார்த்துக்கலாம். இல்லேனா, மொத்த செலவை கணக்கு போட்டு 50-50-னு பிரிச்சுக்கலாம். இப்படி பண்ணும்போது ஒரு குடும்பத்துக்கு மட்டும் லோடு போகாம, ரெண்டு பேருக்கும் செலவு பாதியாகிடும். இது தவிர, இந்த பகிர்வு ரெண்டு குடும்பத்துக்கும் இடையில ஒரு ஒற்றுமையை, புரிதலையும் கொண்டு வரும். எல்லாரும் சேர்ந்து பிளான் பண்ணி, ஒரு டீமா வேலை செய்யும்போது, கல்யாணம் ஜஸ்ட் ஒரு நிகழ்ச்சியா மட்டும் இல்லாம, ரெண்டு குடும்பத்தையும் இணைக்கிற ஒரு அழகான அனுபவமா மாறிடும். பணம் மிச்சமாகுறதோட, உறவுகளும் வலுப்படும் – இதைவிட வேற என்ன வேணும்!
விளம்பரமில்லாத விற்பனையாளர்கள்
திருமண செலவை இன்னும் குறைக்க, பெரிய பிராண்டட் கடைகளையும், பேமஸ் விற்பனையாளர்களையும் தவிர்த்துட்டு, சின்ன சின்ன உள்ளூர் விற்பனையாளர்களை தேர்ந்தெடுக்கிறது நல்ல யோசனை! பிரபலமான கடைகள்ல பொருட்களோ, சர்வீஸோ எப்பவும் விலை ஜாஸ்தியா இருக்கும், ஏன்னா அவங்க விளம்பர செலவு, பிராண்ட் பெயர் எல்லாம் விலைல சேர்ந்துடும். ஆனா, உள்ளூர்ல இருக்குற சிறிய கடைகள், தனியார் விற்பனையாளர்கள் நல்ல தரமான பொருட்களையோ சேவைகளையோ குறைஞ்ச விலைல கொடுப்பாங்க. உதாரணமா, கல்யாண புடவை, நகை, கேட்டரிங், டெகரேஷன், இன்விடேஷன் கார்டு இப்படி எல்லாத்துக்கும் உங்க ஏரியாவுல இருக்குற சின்ன வியாபாரிகளை தேடிப்பாருங்க. முதல்ல அவங்க வேலையோட தரத்தை செக் பண்ணுங்க. மத்தவங்க ரிவ்யூ, அவங்க முன்னாடி செஞ்ச வேலையோட சாம்பிள், அல்லது நேரடியா பேசி எவ்ளோ நம்பிக்கையா இருக்காங்கனு பாருங்க.
இப்படி தரத்தை உறுதி செஞ்சு தேர்ந்தெடுத்தா, பெரிய கடைகளோட அதே குவாலிட்டி, ஆனா பாதி விலைல கிடைக்கும். இதோட, இந்த உள்ளூர் விற்பனையாளர்கள் உங்களோட பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரி கஸ்டமைஸ் பண்ணவும், கொஞ்சம் பேரம் பேசவும் வாய்ப்பு இருக்கும். இது உங்க பாக்கெட்டுக்கு மிச்சம் பண்ணுறதோட, உள்ளூர் வியாபாரிகளுக்கு சப்போர்ட் பண்ணுற ஒரு நல்ல விஷயமும் கூட!
அனைத்திலும் பேரம் பேசிப் பாருங்கள்
திருமண செலவைக் குறைக்க ஒரு ஸ்மார்ட் வழி, எல்லா விஷயத்திலும் கொஞ்சம் பேரம் பேசிப் பார்க்குறது! மண்டப வாடகை, கேட்டரிங், டெகரேஷன், புகைப்படக்காரர், இன்விடேஷன் கார்டு, எது எடுத்தாலும் நேரடியா விற்பனையாளர்கிட்ட பேசி தள்ளுபடி கேளுங்க. பெரும்பாலும், இந்த வியாபாரிகள் ஆரம்பத்துல சொல்ற விலைல கொஞ்சம் மார்ஜின் வச்சிருப்பாங்க, அதனால நீங்க புத்திசாலித்தனமா பேசினா கண்டிப்பா விலையைக் குறைப்பாங்க. உதாரணமா, மண்டப மேனேஜர்கிட்ட “இன்னொரு இடத்துல இவ்ளோ கம்மியா கொடுக்குறாங்க, நீங்க இதை மேட்ச் பண்ண முடியுமா?”னு கேட்டு பாருங்க, அவங்க தள்ளுபடி கொடுக்க வாய்ப்பு இருக்கு. இதே மாதிரி, கேட்டரிங்காரர்கிட்ட மெனுவை கொஞ்சம் எளிமையாக்கி அல்லது கூடுதல் சர்வீஸ் கேட்டு விலையை குறைக்க சொல்லலாம். புகைப்படக்காரர்கிட்ட ஒரு நாள் முழுக்க ஷூட் பண்ணாம, முக்கியமான நேரத்துக்கு மட்டும் வந்தா விலை கம்மியாகுமானு பேசலாம். இப்படி ஒவ்வொரு செலவுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி, நல்லா பேசி பேரம் பண்ணா, ஒவ்வொரு இடத்துலயும் 5-10% கூட மிச்சப்படுத்தலாம். இது மொத்தமா பார்த்தா பெரிய தொகையா மிச்சமாகும்! ஆனா, பேரம் பேசும்போது மரியாதையா, புரியும்படி பேசுங்க, இதனால விற்பனையாளர்களும் உங்களுக்கு ஹெல்ப் பண்ண மனசு வரும். கொஞ்சம் பேச்சு, நிறைய மிச்சம்.
முன்கூட்டிய முன்பதிவு
பொதுவா எந்த விஷயம் என்றாலும் அதை தாமதித்து செய்வது தான் பலரின் வழக்கம். செய்வதை சீக்கிரம் செய்து விடுவோம் என்ற நினைப்புடன் இருப்பவர்கள் குறைவே. அதுவும் திருமணம் என்றாலே கடைசி நிமிட பரபரப்பு, ஓட்டம் எல்லாம் சகஜம். நாள் நெருங்க நெருங்க தான் ஒவ்வொன்றாக நினைவுக்கு வரும். இது வெறும் தாமதமாக செய்து முடிக்கிற காரியம் மட்டுமல்ல. முன்கூட்டியே திட்டமிட்டு செய்தால் செலவை குறைக்கும் காரியம், முன்கூட்டிய முன்பதிவு என்றால் திருமணத்துக்கு தேவையான எல்லாவற்றையும் – மண்டபம், கேட்டரிங், காய்கறி, டெகரேசன் , போட்டோ வீடியோ, ஆடை என்று எல்லாவற்றையும் திருமணத்துக்கு பல நாட்களுக்கு முன்னாடியே வாங்குவது, புக் செய்து வைப்பது. அதாவது, கடைசி நேரத்தில் "மண்டபம் கிடைக்கலையே!" என்று ஓடாமல், முன்னாடியே எல்லாவற்றையும் ரெடி பண்ணி வைப்பது. திருமண சீசனில் எல்லாம் டிமாண்ட் அதிகமாக இருக்கும், விலை எல்லாம் ஏறி விடும். ஆனால் முன்னாடியே புக் செய்தால், அந்த நேரத்து விலையில் பேசி முடிக்கலாம். உதாரணமாக, ஒரு மண்டபம் இப்போ 30,000 ரூபாய் என்றால், சீசனில் 50,000 ஆகலாம் – முன்பதிவு செய்தால் 30,000 ரூபாய்க்கே உறுதி செய்யலாம். கடைசி நேரத்தில் புக் செய்யும்போது கிடைக்கிற சுமாரான சர்வீஸ் எடுக்க வேண்டியிருக்கும். முன்னாடியே செய்தால் உங்களுக்கு பிடித்ததை மலிவாக பிடிக்கலாம். செலவு குறையும். 10-30% வரை செலவில் தள்ளுபடி கிடைக்கலாம்.
திருமணம்னா கனவு மாதிரி ஒரு நாள், ஆனா அதுக்காக பாக்கெட்டை காலி பண்ண வேண்டியதில்லை! இந்த எல்லா யோசனைகளும் உங்க திருமணத்தை பட்ஜெட்டுக்குள்ள அழகா, ஆர்ப்பாட்டமா கொண்டாட உதவும். இதுல முக்கியமான விஷயம், செலவு குறைக்கிறோம்னு உங்க மகிழ்ச்சியையோ, உறவுகளோட ஒட்டுதலையோ குறைக்க வேண்டாம். கொஞ்சம் பிளானிங், க்ரியேட்டிவிட்டி, ஒற்றுமை இருந்தா, உங்க கல்யாணம் பணம் மிச்சமாகுற மாதிரியும், மனசு நிறையுற மாதிரியும் அமையும். எளிமையா, ஆனா அழகா கொண்டாடி, உங்க புது வாழ்க்கையை டென்ஷன் இல்லாம ஆரம்பிங்க.
---------------------------------------------------------
அல்மஹ்ர் முஸ்லிம் மேட்ரிமோனி
மணமகளுக்கு முற்றிலும் கட்டணம் இல்லை
Whatsapp : 9789271238
----------------------------------------------------------