சந்தேகப்படாமல் எப்படி வாழ்வது.. உடல் சார்ந்த விஷயங்களை நாம கட்டுப்படுத்த முடியும்.. உடல் எடை போட்டுருச்சு குறைக்கலாம் .. சுகர் ஏறிருச்சு குறைக்கலாம்.. இப்படி உடல் சார்ந்த நோய்கள் வெளியில் தெரியும். நம் கட்டுப்படுத்த முடியும் .. ஆனா உள்ளம் சார்ந்த நோய் உண்டு.. வெளியில் தெரியாது. அது உள்ளே இருந்தே நம்மை அரித்துவிடும். அதுல சில உண்டு பொறாமை வன்மம் நாம கவனிக்காமல் விட்டோம் என்றால் கட்டுப்படுத்த முடியாது.. சந்தேகம் நம்மை மீறிய ஒரு மனநோய்.. அதனால் அடுத்தவருக்கு எப்படி சந்தேகம் வராமல் நாம் வாழ்வது என்பதில் அர்த்தம் இல்லை .. ஏன்னா எப்படி இருந்தாலும் சந்தேகப்படும் உள்ளம் சந்தேகப்படும்.. சந்தேகப்படும் உள்ளம்தான் சேதாரமாகும் . அதனால நாம நம்ம மனச சந்தேகத்தில் இருந்து பாதுகாத்துக் கொண்டோம் என்றால் நாம நிம்மதியா இருக்கலாம். அவரவர் நிம்மதியாக இருக்கலாம் .. இதுக்கு சில வழிகள் உண்டு. அதுல முதலாவது
1. அடுத்தவர் குறையை தேடாதீர்கள்.. தேடுனா தான் கிடைக்கும் .. எல்லார்கிட்டயுமே வெளியில சொல்ல முடியாத அளவு குறைகள் உண்டு.. செய்த தவறுகள் உண்டு.. இது வெளியில் தெரிஞ்சா நம்மோட பிம்பம் என்ன ஆகும் என்கிற அளவு இருக்கும்.. நம்மோட குறையும் அடுத்தவருக்கு தெரிய வேண்டாம் .. யாரோட குறையும் நமக்கு தெரிய வேண்டாம்.. தெரிஞ்சுகிறது ஈஸி ஆனா அது உள்ளம் மறக்காது .. அது நிம்மதிய அழிக்கிறதுல வந்து நிக்கும்.. சில பேர் குறை கண்டுபிடிக்கிறது ஸ்பெஷலிஸ்ட்.. அது என்னமோ பெரிய சிபிசிஐடி போல தோணும்.. உங்க கூட இருக்கிறவங்களையே நீங்க வெறுக்கிறது அவங்களோட குறையை நீங்க தெரிஞ்சுக்கிட்டா தான் உண்டு.. நம்மோடு தொடர்பில் இருப்பவர்கள் அவங்கள பற்றி ஒரு பிம்பம் நம்ம உள்ளத்தில் இருக்கும் அதை அப்படியே இருந்து விடட்டும். அதனால எக்காரணம் கொண்டும் அடுத்தவரோட குறைகளை தேடாதீர்கள்.. இது அவங்களுக்காக இல்ல நமக்காக தான்.
2. மனுஷன் குறை உள்ளவன் தான் அப்படிங்கறத நம்பனும் … இங்க யாருமே 100% தூய்மை கிடையாது . அளவு வேணா முன்ன பின்ன இருக்குமே தவிர குறைகள் தவறுகள் எல்லோரிடமும் இருக்கும். ரொம்ப பெரிய தவறுகள் இருக்காது அப்படின்னு வேண்ணா எதிர்பார்க்கலாமே தவிர தப்பே செய்யாத பரிசுத்த ஆன்மானு இங்க யாரும் கிடையாது . ஏன்ன அப்படி நம்பினால் தான் பின்னாடி சில குறைகள் தெரிய வரும்போது ஏமாற்றமாகும் . இதுவே மனுஷன் குறையுள்ளவன் தான் அப்படிங்கறது ஏத்துக்கிட்டா பின்னால ஒருவேளை தெரிய வந்தால் கூட ஈஸியா ஹேண்டில் பண்ணலாம்.
3. யாரைப் பற்றியும் நல்லதாகவே நினைங்க.. இல்ல அவர் அந்த அர்த்தத்தில் பேசி இருக்க மாட்டார் .. அவர் அப்படி செஞ்சிருக்க மாட்டார்.. தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கலாம்.. இது பின்னாடி உண்மை தெரிய வரும்போது கூட பெரிய பாதிப்பு ஏற்படுத்தாது.
4. சந்தேகத்தை விட ஏமாற தயாராக இருங்கள்.. ஏன்ன சந்தேகம் எதுக்கு எச்சரிக்கையாக இருக்கிறதுக்கு.. அப்படி ஒரு எச்சரிக்கையே வேண்டாம் .. என்ன பல சந்தேகங்கள் வீணா தான் இருக்கும் .. தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் .. அது கொடுக்கிற பாதிப்பு கூட பெருசா இருக்காது .. ஆனா இந்த வீணான சந்தேகம் அதைவிட பெருசா இருக்கும் .. சந்தேகம் நல்லவனையும் கெட்டவனா காட்டும். ஆனா ஒரு கெட்டவங்கிட்ட மட்டும் தான் நாம் ஏமாற முடியும்.. சந்தேகத்தில நீங்க குற்றவாளி ஆவீங்க .. ஏமாந்தா எதிர்த்தரப்பில் உள்ளவர்தான் குற்றவாளி ஆவார்.
அதனால சந்தேகப்பட்டு உள்ளத்தை கனமாக்கிக் கொள்வதற்கு பதிலாக உள்ளத்தை லேசா வெச்சுகிட்டு ஏமாளியா இருக்கிறது பெட்டர் .
5. ஒருத்தரோட கேரக்டர அவரோட முந்தைய செயல்பாடு வச்சு அளவிடனும்.. ஒரு சீன வச்சு அளவிடக்கூடாது . பல பேர் பண்ற தப்பு இங்கதான் .. அவர் யாரு என்ன அப்படிங்கறது மறந்துடுவாங்க .. நடந்த அந்த ஒரு நிகழ்வு மட்டும் வச்சு பேசுவாங்க.. ஒருத்தரோட மொத்த வாழ்க்கையை வச்சு அவரை மதிப்பிட்டாலே பல சந்தேகங்கள் இல்லாமல் போகும்.
6.எல்லோருக்கும் எல்லா நேரமும் சரியா அமைஞ்சுராது .. வார்த்தைகள் தவறும்.. கோபத்தில் செயல்கள் மாறும்.. ஆனா அது அவங்க கிடையாது . அந்த ஒரு கணநேரம் பண்ணுகிற தப்பு எல்லாருக்குமே நடக்கும். அத வச்சுக்கிட்டு உள்ளத்தில் இருக்கிறது தான் வெளியில வரும்னு நினைக்க கூடாது.. அந்த நேரத்தில் நினைவுக்கு வருவதும் வெளியில் வரும். ஒருவரின் நினைவில் இருப்பதெல்லாம் வஞ்சகம் அல்ல. அதனால இவங்க நம்மள பத்தி தப்பான எண்ணம் உள்ளுக்குள்ள இருந்தது அதுதான் சண்டையில வெளில வந்திருக்கு அப்படின்னு சந்தேகப்படத் தேவையில்லை . ஒரு வாக்குவாதம் பிரச்சனைனு வந்துட்டா அந்த இடத்தில் யாரும் ஜெயிக்கிறாங்க அப்படின்னு தான் பார்ப்பாங்க. அதுக்கு மாத்தி மாத்தி பாயிண்ட் எடுத்து போடுவாங்க. அது பெரும்பாலும் உள்ளத்தில் இருந்து வருவதல்ல.
7. சந்தேகத்தால் எதையும் மாத்த முடியாது.. ஒரு தவறு தெளிவா தெரிகிறது . அதை சரி பண்ண முடியும் .. அதிலிருந்து விலக முடியும். ஆனா சந்தேகம்னா என்ன? இப்படியா அப்படியா ஒருவேளை இருக்குமோ என்பதுதான்.. இத வச்சி என்ன செய்ய முடியும் .. பஞ்சாயத்தில் கூட வழக்கு நிக்காது .. உறுதியாக உள்ளது கண்டிப்பா ஒரு நாள் வெளியில வரும்.. அது வரும்போது பார்த்துக் கொள்ளலாம்.
8. ஒருத்தன் கெட்டதாவே சொன்னாலும் அவன் நல்ல விதமா தான் சொல்லி இருப்பான்னு நினைக்கணும்.. சில பேர் குத்தி காட்டி பேசுவாங்க .. உள்ளத்தில் வன்மத்தை வைத்துக்கொண்டு பேசுவாங்க .. அப்படியானங்களை சரி இவன் நல்லதா தான் சொல்லி இருப்பான்னு டீல் பண்ணா நமக்கும் வருத்தம் இருக்காது அவங்களுக்கும் அது தோல்வி ஆயிடும்.
9. துணிந்து கேட்டுவிட வேண்டும் .. சில விஷயங்கள் காதுக்கு வந்துரும்.. நம்மால் அதை ஜீரணிக்க முடியாது.. அத வச்சுக்கிட்டே இருக்க கூடாது. நேரடியா பக்குவமான முறையில் கேட்டு விட வேண்டும். உண்டா இல்லையா என்று ரிசல்ட் அப்பவே தெரிஞ்சுரும். பக்குவமான முறையில் கேட்கணும்.. கேட்கிறதே அதை உறுதி பண்ணிக்கிட்டு கேக்குற மாதிரி கேட்டா அதுவே ஒரு பிரச்சனை ஆயிடும்
10. உறுதியாக தெரிஞ்சதை மட்டும் தான் பேசணும் என்கிற கொள்கை. உலகத்தில் இந்த ஒரு கொள்கை எல்லாரிடம் இருந்தாலே பல பிரச்சனை இல்லாமல் போகும்.. உறுதியா தெரியாதது தான் அதிகமா பேசுவாங்க.. வாட்ஸ் அப்ல வந்தது .. பேச்சுவாக்கில் வந்தது.. இதையெல்லாம் பொருட்டா எடுத்து பேசுவாங்க. சந்தேகம் உறுதி இல்லாதது .. உறுதியானதை மட்டும் தான் பேசுவேன் என்பது சந்தேகத்தை விட்டும் தூரமாக்குவது
11. எதையுமே ஆதாரத்தைக் கேட்டு பழகுங்க.. நல்ல செய்தி ஒருத்தர பத்தி வந்தால் அது வேற .. ஒருவர் பற்றி தவறான செய்தி வந்தால் ஆதாரத்தை கேளுங்கள். ஆதாரம் இருந்தால் தான் நம்புவேன் இருங்க .. சந்தேகத்துக்கே அங்க இடம் இல்ல .. ஆதாரம் இல்லாத அவதூறுகள் பரவவும் செய்யாது
12. சொல்றவன் யாருன்னு பாருங்க.. அந்த செய்தியோட நம்பகத்தன்மை பற்றிய தீர்மானத்துக்கு வந்தரலாம்.. சொல்றது அயோக்கியனா இருந்தா நம்பாதீங்க.. அயோக்கியன் பேசறதை எல்லாம் நம்புனா அப்புறம் நல்லவன் எதுக்கு பேசணும்?
13. யார சொல்றான்னு பாருங்க.. சொல்லப்படுபவர்களுக்கும் சொல்றவங்களுக்கும் இடையில் ஏதாவது தகராறு இருக்கான்னு யோசிங்க.. பல பேர் தன்னோட சொந்த வன்மத்தை தீர்க்க பரப்பி விடுவாங்க
14. எந்த விஷயத்திலும் டக்குனு ஒரு முடிவுக்கு வந்திராதீங்க.. டைம் கொடுங்க.. அவசரம் ஆபத்தில் தள்ளும்.
15. யாரையும் முன் முடிவோடு அணுக வேண்டாம் .. சிலர் அறிமுகமான தருணங்கள் நமக்கு ஒவ்வாததாக இருக்கலாம் .. ஆனா அவர் அப்படியானவராய் இருக்க மாட்டார்.. சில பேர் பாத்தே கெஸ் பண்ணுவாங்க இவர் இப்படித்தான் இருப்பார் என்று.. அப்படி செய்ய வேண்டாம் இது உங்களை சந்தேகத்தில் தான் கொண்டு போய் தள்ளும்
இது எல்லாமே மனிதரின் தனிப்பட்ட குறைகள் மீதான சந்தேகதுக்கு தான்.. அதுல பிரதானம் மனைவி கணவனை சந்தேகப்படுவது கணவன் மனைவியை சந்தேகப்படுவது.. இதுபோன்ற சந்தேகங்களுக்கு இந்த வழிமுறைகளை பின்பற்றினால் ஒரு சந்தேகம் இல்லாத உள்ளத்தை அடையலாம். வாழ்க்கை நிம்மதியாவும் இருக்கலாம்.
---------------------------------------------------------
அல்மஹ்ர் முஸ்லிம் மேட்ரிமோனி
மணமகளுக்கு முற்றிலும் கட்டணம் இல்லை
Whatsapp : 9789271238
----------------------------------------------------------