பகுதி 13 : திருமணம் மூலம் கிடைக்கும் சூப்பர் பவர்கள்


படத்துல எட்டு கால் பூச்சி கடிச்சி ஸ்பைடர் மேன் உருவாகுற மாதிரி.. திருமணம் செய்தால் சில சூப்பர் பவர் வரும் .. படத்துல காட்டுறது கூட கற்பனை .. ஆனால் இந்தப் பவர் நிஜமானது .. ஆனால் பலருக்கும் இது தெரியாததால் அதை யூஸ் பண்ணாமலே போய்டுவாங்க.. அவைகள் என்னவெனில், 

ரெஸ்பெக்ட் ஒரு பெரிய பவர்.. திருமணத்துக்கு முன்னாடி இளைஞராய் இருந்தபோது இருந்த மரியாதையும்.. திருமணத்துக்கு பிறகு இருக்கும் மரியாதையும் வேறு .. இத பலரும் கேர் பண்ணாமலே இருந்திருப்பாங்க ஆனா இப்போ உக்காந்து யோசிச்சு பாத்தீங்கன்னா தெரியும்.. .. திருமணம் மூலம் கிடைக்கும். அந்த ரெஸ்பெக்ட் எங்க தொடங்கும்னா அந்த ஆணையும் மதித்து தன் பெண்ணைப் பார்த்துக் கொள்வார் என்று ஒரு பெண்ணின் தகப்பனார் தன் பெண்ணை கொடுப்பதில் இருந்து தொடங்கும்.. அப்புறம் அந்த ரெஸ்பெக்ட் எப்படி வளரும் ரேஷன் கார்டுல குடும்பத் தலைவன்னு சொல்ற அளவு.. 

இந்த மதிப்பை நீங்க யூஸ் பண்ணி பார்க்க விரும்பினால் ஒரு சண்டை நடக்கிற இடத்தில் போய் பஞ்சாயத்து பேசுங்க.. நீங்கள் திருமணமானவராக இருந்தால் உங்கள் பேச்சு எடுபடும்.. பஞ்சாயத்துங்கிறதே பேசுற ஆள வச்சி தான் .. இல்லனா எவ்வளவு அறிவா பேசினாலும் ஆள பார்த்து உனக்கு ஒன்னும் தெரியாதுன்றுவாங்க .. அந்த ரெஸ்பெக்ட் மேரேஜ் தரும்.. அந்த மரியாதையை அப்படியே டெவலப் பண்ணி வாழ்க்கையோட முன்னேற்றத்துக்கு கொண்டு போகலாம் .

பணம் இரண்டாவது பெரும் பவர்.. நீங்க ஒண்டிக்கட்டையா இருக்கும் போது உங்களுக்கான பணத்தேவை ஒரு அளவு தான் இருக்கும்.. அதுவே நீங்கள் திருமணம் செய்யும் போது உங்களுக்கான பணத்தை பெருகும்.. அதுக்காக நீங்க ஓடுவீங்க, பணம் சேர்ப்பீங்க .. நீங்க உங்க குடும்பத்துக்காக தான் ஓடுறீங்க .. வீடு கட்டுறீங்க நகை வாங்குறீங்க இடம் வாங்குறீங்க.. எல்லாமே உங்க குடும்பத்துக்காக தான் .. ஆனால் வெளிப்பார்வையில் நீங்கள் பணம் உள்ளவர் .. பணம் இருந்தால் வர்ற மரியாதையை சொல்லி தெரிய வேண்டியது இல்லை.. அந்தப் பணத்துக்காக ஓட வைத்தது திருமணம். அது தரும் பவர் பணம்

புதிய உறவுகள் மூன்றாவது பவர்.. மலை ஏற போனாலும் மச்சினன் தயவு வேணும்னு ஒரு பழமொழி உண்டு.. மலையேற போறது ஒரு ரிஸ்க்கான வேலை உயிர் கூட போகும்.. அந்த நேரம் நம்ம உயிரை காப்பாற்ற கூடிய அவசியம் மச்சினனுக்கு தான் உண்டு.. காரணம் தன் சகோதரியின் தாலி .. இந்த இடத்துல மலையேற போனாலும் நண்பன் தயவு வேண்டும்.. மலை ஏற போனாலும் சகோதரன் தயவு வேண்டும் இப்படி சொல்லல .. மச்சின்கிறது புதிய உறவு அந்த புதிய உறவு உங்க உயிர் மேல அக்கறைப்படும்.. இந்தப் பவர் எங்கிருந்து வந்தது என்றால் திருமணத்தால் 

நாம பிறந்து வளர்ந்ததிலிருந்து நமக்கான உறவுகள் ஒரு லிமிட்டு தான்.. அந்த அளவு சரி பாதி உறவுகள் திருமணத்தின் மூலம் புதுசாக வரும்.. அந்தப் பெண்ணுக்கு அந்த குடும்பத்துக்கு யார் யார் சொந்தமோ இனி அவர்கள் உங்களுக்கும் சொந்தம்.. அவர்களின் மூலம் என்னென்ன முடியுமோ அதெல்லாம் உங்களுக்கான பவர். ஆகப் புதிய உறவுகள் ஒரு சூப்பர் பவர். 

கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் ஒரு பவர் .. ஏன் என்றால் ஆணோட குடும்ப தேவைகளை மனைவி செய்வார்.. கணவன் பொருளாதார தேவைகளையும் பார்த்துட்டு குடும்பத்தையும் பார்க்க முடியுமா?. மனைவியை பொறுத்த அளவில் கணவன் பொறுப்பெடுப்பார்.. இதனால் வரை தகப்பன் எடுத்த பொறுப்பை கணவன் இனி எடுக்கிறார் . வாழ்வின் சரிபாதியே ஒரு பவராக வருகிறது. 

ஐந்தாவது இது எதிர்காலத்தில் வரப்போகும் சூப்பர் பவர்.. எல்லாருமே ஒரு கட்டத்துக்கு மேல 60 வயசு கடக்கும் போது தளர்ந்து போவாங்க.. தன் தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் கஷ்டப்படுவாங்க.. 

ஆனால் அந்தத் தருணத்தில் நமக்கான ஒரு இளைய ஒரு பவர் ஜெனரேட் ஆகும்.. அதுதான் குழந்தைகள்.. திருமணமாகி குழந்தைகள் பெற்றவர்களுக்கு தான் அந்த பவர்.. அதுவும் சரியான முறையில் நீங்கள் குழந்தை வளர்த்த அதோட பவரை தளர்ந்த காலத்தில் பார்ப்பிங்க..

 அதனால் இந்த ஐந்தும் திருமணத்தின் மூலம் கிடைக்கும் பவர்கள்.. இதை சரியா யூஸ் பண்ணினால் திருமணம் உங்க வாழ்க்கையில் மிகப்பெரிய பிளஸ்ஸா அமையும். 

---------------------------------------------------------

அல்மஹ்ர் முஸ்லிம் மேட்ரிமோனி

மணமகளுக்கு முற்றிலும் கட்டணம் இல்லை

Whatsapp : 9789271238

----------------------------------------------------------