திருமணம் என்பது சமூககடமை
இதை நீ உனக்காக செய்யல ஊருக்காக செய்ற.. திருமணம் தனி மனித உரிமையா இல்லையா? விரும்புனா பண்ணப் போறாங்க விரும்பலைனா பண்ணாம இருக்க போறாங்க.
ரெண்டு விஷயம் .. ஒன்னு சாப்பிடுவது இன்னொன்னு குளிக்கிறது .. ரெண்டுமே நமக்காக செய்றது தான்.. சாப்பிடாம என்கிட்ட வராத ன்னு யாரும் சொல்ல மாட்டாங்க .. ஆனா பல்லு விளக்காம கிட்ட வராதே ன்னு சொல்வாங்க .. சாப்பிடுவது வேண்டுமானால் நமக்காக செய்யலாம் .. ஆனா குளிக்கிறது ஊருக்காக செய்வது .. இதுதான் வித்தியாசம் . திருமணமும் இதுபோல ஒன்று தான் . சமூகத்தோடு வாழ சில சம்பிரதாயங்களுக்கு கட்டுப்படணும் .
ரோட்டுல போவது நமது உரிமை.. ஆனால் சட்டம் சொல்கிற பக்கமாக தான் போக வேண்டி இருக்கு.. இல்ல இது என் இஷ்டம் என்று இஷ்டத்துக்கு போனா அப்டியே போயிட வேண்டியதுதான் .. என் கை என் உரிமை அடுத்தவன் பொருளை எடுத்திட முடியாது.. சமூகத்தோடு வாழும் போது சில சட்டங்களுக்கு நாம கட்டுப்படணும். அப்படின்னா தான் எல்லாரும் வாழ முடியும்.. அப்படியான ஒரு சமூக கடமை தான் திருமணம்.
திருமணம் ஒரு சமூக கடன்
கடன் எனில் திருப்பி செலுத்த வேண்டியது . எதை ? நாம ஏற்கனவே வாங்கியதை .. என்னத்த வாங்குனோம் ?.. நம்ம அப்பா அம்மா திருமணம் செஞ்சதால நாம பிறந்தோம் .. நம்ம அப்பா அம்மா பொறுப்பு எடுத்ததால் நாம வளர்ந்தோம் .. இந்த ரெண்டுல ஒன்னு இல்லாம போயிருந்தாலும் நாமும் இப்ப இருந்திருக்க மாட்டோம்.. நாம செய்ற ஒரு செயல் சரியா தப்பா தெரிஞ்சுக்க நம்ம மாதிரியே எல்லாரும் செஞ்சா எப்படி இருக்கும் என்று யோசிக்கணும்.. நமக்கே அது நல்லா இருக்காது அப்ப அது தப்புன்னு அர்த்தம்.. மனித உலகம் ஒரு சங்கிலி தொடர் .. அது இதுவரை தொடர்ந்து வந்திருக்கு இனியும் தொடரனும் .. அதுக்கு பொறுப்பு எடுக்கக் கூடிய அளவான திருமணம் அவசியம்.
பார்ட்னர்ஷிப்தான் பெஸ்ட்
சில விஷயங்களில் சோலோ விட பார்ட்னர்ஷிப் தான் நல்லது .. ஒரு ஹோட்டல் வச்சிருக்கென் வைங்க .. நானே தான் மாவு பிசைவேன் .. நானே தான் புரோட்டா போடுவேன் .. நானே தான் சால்னா கட்டுவேன் .. நானே தான் சைடிஸ் தயாரிப்பேன் .. நானே தான் பார்சல் பண்ணுவேன் . நானே தான் காசு வாங்குவேன் என்றால் மறுநாள் படுத்துருவேன் . முடியாது .. வேலையே பகிர்ந்து கொடுக்கும்போது தான் அந்த செயல் தொடரும் .. நாம அவைலபில் இல்லாட்டாலும் இன்னொருத்தர் அந்த வேலையே எடுத்து தொடர முடியும் .. நாம ஒத்தைல இருந்தா நம்மால முடியும்மட்டும் தான் வேலை நடக்கும் .. நம்ம வாழ்க்கையை பகிர்ந்து கொடுத்து நம்ம பாதையை இலகுவாக்குறது திருமணம் .. நாமே தான் சம்பாதிக்கணும் நாமே தான் வீட்டையும் கவனிக்கனும்னா அது எந்தளவு சிறப்பா இருக்கும் ? இருக்காது .. தொழில்ல பார்ட்னெர்ஷிப் போல பெர்சனல் லைப்ல ஒரு பார்னேர்ஷிப் தருவது திருமணம் .
கோபத்தில் இருந்து காக்கும் கேடயம்
தேவையற்ற கோபத்தினால் வரும் கஷ்டங்களில் இருந்து கோபமான செயல்களில் இருந்து நம்மை காக்கும் கேடயம்.. எனக்கு குடும்பம் பொண்டாட்டி மட்டும் இல்லைனா நான் குத்திட்டு ஜெயிலுக்கு போயிருவேன்.. குடும்பம் தான் என்ன தடுத்து நிறுத்துது.. எனக்கு இந்த வேலையை பிடிக்கல வேலையை விட்டுவிடுவேன் ஆனால் குடும்பம் என்னாகுமோ என்கிற கவலை அதனாலதான் இருக்கேன் .சொல்ல கேட்டிருப்போமா இல்லையா.. பல விஷயங்கள்ல நாம எடுக்க வேண்டிய ரிஸ்க் எடுக்காமல் இருப்பதிலிருந்து குடும்பம் தான் கண்ணு முன்னாடி நின்னு நம்மள காக்கும். பல ஆத்திரமான காரியத்தில் இருந்து மீள குடும்பம் தான் கண் முன்னாடி நிக்கும் நாம அடைய வேண்டிய பல வேதனைகளை விட்டும் நம்மள முன்னெச்சரிக்கையா காக்குறது திருமணம் அதனால் வந்த பொறுப்பு.
சமூகத்தில் மரியாதை
பொறுப்பு எடுப்பவர்களுக்கு எங்கேயுமே மதிப்பு இருக்கும்.. எடுத்த பொறுப்பை திறம்பட செய்த அதோட கண்ணியமே வேற.. திருமணம் என்பது பொறுப்பு எடுக்கிறது தான்.. இப்பவே அவரோட மதிப்புக்கூடும்.. திருமணத்துக்கு அழைப்பு வந்தால் தனி பத்திரிக்கை நமக்குன்னு வரும்.. குடும்ப சண்டையில பஞ்சாயத்து பேசலாம். ஒரு கருத்து சொன்னா நீ போ அங்கிட்டுன்னு சொல்லாம என்னன்னு காது கொடுத்து கேட்பாங்க.. நாளைக்கு இவர்களுக்கு குழந்தை பிறந்தால் அந்த நல்ல குழந்தையால் வருகிற மதிப்பும் இவர்களுக்கு வரும். இவர் இன்னார் குடும்பம்னு பெயர் சொல்லி பின்னாளில் கண்ணியப்படுத்துவாங்க . அந்த மரியாதை கொடுக்கிறது எப்ப தொடங்குது என்றால் திருமண வயசு தொடங்கும் பருவம்.. ஏதாவது ஃபங்ஷனுக்கு போனா சொந்தக்காரங்க எல்லாம் கேப்பாங்க.. உனக்கு எப்பப்பா கல்யாணம் .. எப்ப கல்யாண சாப்பாடு போட போற.. அதுதான் அந்த மரியாதையின் முதல் படி. என்னமோ நம்மள நம்பி தான் உலகமே சுழலுகிற மாதிரி அன்னாரம் அப்படி ஒரு கெத்து இருக்கும்.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என அவசரம்.. அப்படி எல்லாம் பவ்யம் காட்டுவாங்க.. வாலிப வயதில் மதிச்சு கேட்பாங்க கல்யாண எப்போ ன்னு.. அந்த அக்கறை எதனால் வருகிறது? திருமணம்ங்கிறதால தான் .. ஆனா அந்த அக்கறை ஒரு நேரத்துல மட்டும்தான் நம் மேல இருக்கும் அடுத்து அந்த அக்கறை அடுத்த ஜெனரேஷன் பக்கம் போயிடும்.. அதனால அது இருக்கிறப்பவே அதற்கான மதிப்பு கொடுக்கிறது தான் புத்திசாலித்தனம் காலம் கடந்திருச்சுனா திருமணம் என்ன டீ குடிச்சியானு கேட்க கூட அக்கறை உள்ள ஆள் இருக்காது.
உங்களுக்கே உங்களுக்காக ஒருவர் சொந்தம் ஆகிறார்
சொந்தம்னா என்ன? மாமா மச்சான் சித்தப்பா பெரியப்பா இதுவா? இல்ல.. அவர்களெல்லாம் உறவுகள் .. சொந்தமல்ல .. குழுக்கள்ல உங்களுக்கு ஒரு கார் விழுந்திருக்கு. பங்கு பாகத்தில் உங்களுக்கு ஒரு வீடு கிடைச்சிருக்கு.. இதுவும் திருமணம் போலவே திடீர்னு வருது.. ஆனா அது உங்களுக்கு சொந்தம் என்கிற எண்ணத்தால் தான் மகிழ்ச்சி வருது.. காரணம் யாரும் அதுல பங்கு போட முடியாது.. உரிமை கோர முடியாது .. அது உங்களுக்கே உங்களுக்கு.. அப்படி ஒரு கார் ஒரு வீடு கிடைச்சா எப்படி மகிழ்ச்சி அடைவோமோ அப்படி ஒரு மகிழ்ச்சிக்குரியது தான் நமக்கே நமக்காக அப்படி ஒரு ஆணையோ அல்லது ஒரு பெண்ணையோ இந்த சமூகம் நமக்கு தருவது.. ஊர் கூட்டி திருமணம் பண்ணுவாங்க எதுக்கு? சாட்சிக்கு.. இனி இவருக்கு இவர் சொந்தம் .. இனி யாரும் கேட்ட ஆட்ட வேண்டாம்.. சாப்பாடு போட்டு சாட்சி ரெடி பண்ற வேலை.. லிவிங் ரிலேஷன்ஷிப்ல இருப்பாங்க பாருங்க.. அவங்களுக்கு இந்த கான்செப்ட் பொருந்தாது .. சொந்தம் என்கிற உரிமையே அவர்களுக்கு வராது.. நாலு பேர் வந்து பஞ்சாயத்து பேசி தீர்த்து வைக்க எந்த முகாந்திரமும் கிடையாது.. இந்த உரிமையை தான் திருமணம் கொடுக்குது
சமகாலத்தில் பொறுப்புக்கு ஆள் ஏற்படுத்தி தருவது திருமணம்
குழந்தை பிறக்கிறப்பவே பொறுப்புக்கு தந்தையும் உதவிக்குத் தாயும் இரண்டு பேர் இருக்காங்க .. குழந்தைக்கு பசிக்கும் சாப்பாட்டுக்கு வெளியே வெளியே போய் சம்பாதிச்சு தான் சாப்பிடணும் என்கிற அவசியம் குழந்தைக்கு இல்லை.. தனக்கு உடம்பு சரியில்லாமல் போகும்போது மருத்துவமனைக்கு தானே செல்ல வேண்டும் என்கிற அவசியம் குழந்தைக்கு இல்லை. அதை இன்னொருத்தர் எடுத்து செய்வார்கள் .. அதுதான் பொறுப்பு எடுக்கிறது.. குழந்தையா இருக்கும்போதே கடவுள் நமக்காக பொறுப்பு எடுக்க ஆளையும் அனுப்பி இருக்கார்.. அப்படி ஆள் இல்லாத குழந்தை என்ன ஆகும்? அனாதையாகும் அதன் வாழ்வு மற்ற குழந்தைகள் வாழ்வு போல இருப்பதில்லை.. சிறுவயதில் தாய் தந்தை பொறுப்பெடுக்கிறார்கள்.. பிறகு நமக்கு வாலிப வயது அடையும் போது அவர்கள் முதுமையை அடைகிறார்கள்.. அந்தப் பொறுப்பை வேறு யார் கையிலும் கொடுக்கணும் என்பது விதி.. அதுதான் திருமணம்.. ஒரே நாளில் மேஜிக் நடக்கும். பொறுப்பு சிப்ட்டாகுது.. யோசிச்சு பாருங்க நமக்கு உடம்பு சரியில்லை நாமளே போய் மருத்துவம் பார்த்து நாமே போய் சம்பாதித்து தான் நான் சாப்பிட வேண்டும் என்று இருந்தால் தாங்குமா ? அதே இடத்தில் இன்னொருத்தர் அந்த வேலையை செய்தால் எப்படி? பொறுப்ப திருமணத்தை தவிர வேறு எதுவும் ஏற்படுத்தி தராது.. அந்த லிவிங் ரிலேஷன்ஷிப்ளையும் இது வராது.. கடமை உரிமை பொறுப்பு எல்லாமே திருமணத்தில் மட்டும் தான்.
எதிர்கால உதவிக்கு ஆள் ஏற்படுத்தித் தருவது திருமணம்
அதுதான் குழந்தைகள்.. நீங்க கல்யாணம் பண்ணுனாலும் பண்ணாட்டாலும் வயோதிகம் வரும் . அந்நேரம் கல்யாணம் பண்ணி குழந்தைகள் வளர்ந்து இருப்பவர்களுக்கு அவர்கள் பொறுப்பு ஏற்பார்கள் . சம்பாதிக்க தேவை இருக்காது .. உடல் சரி இல்லைனா ஹாஸ்பிடல் கூட்டி போவார்கள் .. மருமகள்கள் மருமகன்கள் உதவுவார்கள் .. பேரப்பிள்ளைகள் உதவுவார்கள் .. இதெல்லாம் காலாகாலத்துல கல்யாணம் பண்ணியவர்களுக்கு . அதே நேரம் கல்யாணம் பண்ணாம வாழ்வை கழித்தவர்க்ளுக்கு என்ன நடக்கும் ? கஷ்டங்களை சொல்லத்தேவை இல்லை .. தனக்கென உறவோட அருமை அப்பதான் தெரியும் .. அப்ப திருமண வாழ்வு மூலமாக மட்டும்தான் இந்த பயன்களை அடைய முடியும்.. குழந்தைகள்ட்ட தான் நீங்க உரிமையா கேட்க முடியும்.. 50 வயது நபர் திருமணம் ஆகாமல் இருந்தால் அவர் உரிமையாக கேட்பதற்கு நாதியே இருக்காது.. அண்ணன் பிள்ளைகள் அக்கா பிள்ளைகள் இவர்கட்ல கேட்கலாம் ஆனா அது பெயர் ரிக்வெஸ்ட் .. ஆர்டர் இல்ல.. பெத்த பிள்ளைகள்ட்ட தான் ஆர்டர் போடலாம் . ரிக்கோஸ்ட்ல கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம்.. மதிப்பும் கிடையாது அதுக்கு .. உரிமைதான் கெத்து அந்த கெத்த திருமணம்தான் கொண்டு வரும்..
உறவுகள் விரியும்
பிறந்ததிலிருந்து நாம பார்க்கிற உறவுகள் ஒரு லிமிட் தான் .. ஆனா திருமணத்துக்கு அப்புறம் அந்தக் குடும்பமும் நம்மோடு உறவாகும்.. மாமன் மச்சான் எல்லாம் புதுசா முளைப்பார்கள் .. உறவுகள் என்றால் தனி பலம்.. அவர்களுக்கு அறிமுகமானவர்கள் நமக்கு அறிமுகமாவார்கள்.. நாம எதிர்பார்க்கிறாத பாதையில் இருந்து எல்லாம் நமக்கு வாய்ப்புகள் வரக்கூடும்.. அவர்கள் சம்பாதித்த கண்ணியம் நமக்கும் கண்ணியம் சேர்க்கும்.. சந்தோசமா நிகழ்வுகள்ல கூட தனியா நின்றுலாம்.. ஆனா ஒரு கஷ்டத்துல தனியா நிக்கிற சூழல் வரக்கூடாது .. அந்த நேரம் கூட நிக்கிற உறவுகள் எல்லாமே ஒருத்தர் மூலமா ஒருத்தர் பண்ணுன திருமணத்தால் தான்.. திருமணம் புதிய உறவுகளை கொண்டு வரும்.. உறவுகள் வாழ்வின் அஸ்திவாரம்.. வாழ்வின் பலம்.. திடீர்னு பல அறிமுகங்கள் அனுபவங்கள் உள்ள நபர்கள் திருமணத்தின் மூலம் நமக்கு உறவுகள் ஆகும் போது வாழ்க்கையோட டர்னிங் பாயிண்டா அது இருக்கக்கூடும்.. அதனால வாழ்க்கையோட வழி தெரியாமல் தேமன்னு இருக்கிறவங்க கல்யாணம் பண்ணி பாருங்க
மானக்கேடு ஏற்படாமல் கண்ணியம் காக்கப்படும்
மிக முக்கியமானது. ஏன்னா குழந்தையாக இருக்கும் போது பொம்மைக்கு ஆசைப்பட்டு இருப்போம் சாக்லேட்டுக்கு ஆசைப்பட்டு இருப்போம் .. வாங்கி கொடுத்திருப்பாங்க .. 40 வயசுக்கு மேல வீடு வாங்கணும் சொத்து வாங்கணும் பணம் சேர்க்கணும் ஆசை வரும்.. அதுக்காக ஓடுவாங்க .. இடைப்பட்ட காலத்தில் வர்ற ஆசைதான் பருவகால ஆசை.. அதுக்கும் சரியான முறையில் பதில் சொல்லியாகணும் .. தவறு னா கேவலத்திலும் போய் முடிய வாய்ப்புண்டு.. எல்லாருமே அப்டினு சொல்ல முடியாது.. ஒழுக்கமாகவும் இருக்குற ஆட்கள் இருப்பார்கள் தான் . ஆனா எல்லாருமே ஒழுக்கமா இருப்பாங்கன்னு சொல்ல முடியாது ..தேவையை நிறைவேற்ற முறையற்ற வகையில் இல்லாமல் காத்து திருமணம் கண்ணியத்தை கொண்டு வருது.
குடும்ப பண்டிகை
பண்டிகை இல்லாத மதம், தனக்கென நாடே இல்லாத அகதி.. இதுதான் திருமணம் செய்யாதவர்களின் நிலை.. பண்டிகை என்றால் கொண்டாட்டம்.. திருமணம் செய்யாதவர்கள் அடுத்த வீட்டு பங்க்ஷன் ல்ல வேண்ணா ஒரு ஓரமா போய் இருக்கலாமே தவிர உரிமையாய் கொண்டாட எந்த பங்க்ஷனும் கிடையாது.. அடுத்தவர்கள் அவர்கள் பிள்ளைக்கு சந்தோசமா செய்யும் போது தான் நமக்கு விளங்கும்.. நானும் கால காலத்தில பண்ணி இருந்தா இப்படி எல்லாம் நமக்கு இருந்திருக்கும் என்று .. நாடே இல்லாதவர்களுக்கு அரவணைக்க ஆள் கிடையாது.. யாராச்சும் தாராளம் பன்னி அடைக்கலம் கொடுத்தா உண்டு.. திருமணம் செய்யாதவர்களின் நிலையும் அதுபோன்றதே
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் என்ன வித்தியாசம் ? நம்மள மாதிரியே தான் சாப்பிடுது தூக்கம் போடுது குட்டி போடுறது தன் கூட்டத்தோடேயே சண்டை போடுறது இதெல்லாம் இருந்தாலும் உனக்கும் விலங்களுக்கும் இடையில் இருக்கிற மிகப்பெரிய வித்தியாசம் திருமண உறவு தான்.. திருமண பந்தத்தை மனிதர்கள் மட்டும் தான் ஏற்படுத்திக்கிறாங்க . திருமணத்தோட அஸ்திவாரமே பொறுப்பு எடுக்குறது தான் . பொறுப்பு எடுக்குற தன்மை விலங்குகள்ட்ட கிடையாது . பாசத்தால் சில காலம் பார்த்துக்கிட்டாலும் பின்னாடி விரட்டி விட்டுடும் . ஆனா நாம அப்படி பண்றதில்லை .. கடைசிவரை இணைந்து பொறுப்பு எடுப்பதால் தான் வயதானாலும் பசிக்கு சாப்பாடு கிடைக்கிது .. இயலாத நேரத்துல மருத்துவ உதவிகள் கிடைக்கிது .. பிறருக்கு பயனே இல்லாட்டாலும் மரியாதை கிடைக்கிது .. இதெல்லாம் யாரோ பொறுப்பு எடுப்பதால் தான் . அந்த பொறுப்புகளோட அஸ்திவாரமே திருமணம் தான் .
உலக வாழ்க்கை என்பது துன்பதுக்கு நடுவுல இன்பத்தின் தேடல் தான்.. அந்த தேடலில் நமக்கான ஒரு துணை அவசியம் .. அதற்கான மகத்தான ஒரு வழி திருமணம் .. அதனால லேட் ஆயிருந்தாலும் பரவால்ல கட்டாயம் திருமணம் பண்ணிடுங்க . பல நன்மைகள் உண்டு .. கவர்ன்மென்ட் தர்ற பொங்கல் பரிசு , உரிமைத்தொகை எல்லாம் கல்யாணம் ஆனவர்களுக்கு தானே ? அதுவும் ஒரு நன்மை.
---------------------------------------------------------
அல்மஹ்ர் முஸ்லிம் மேட்ரிமோனி
மணமகளுக்கு முற்றிலும் கட்டணம் இல்லை
Whatsapp : 9789271238
---------------------------------------------------------