பகுதி 12 : இந்த ஐந்தும் திருமணம் ஆன பின்னாடி தான் தெரிய வரும்


இந்த ஐந்துமே ரகசியமானது.. திருமணத்துக்கு முன்னாடி இதை பெருசா கேர் பண்ணவும் மாட்டாங்க.. ஆனா பெரிய பிரச்சனை விவாகரத்து ஆகுற அளவுக்கு பிரச்சனை இது கொண்டு வரும்  

1. நெத்தி கேரக்டர்.. பேசுறது ஏறுக்குமாறா பேசுவாங்க .. அவங்களுக்கு ஏத்த மாதிரி மத்தவங்க பேசணும் . புடிச்சதுல பிடிவாதம் பிடிப்பாங்க .. தான் சொன்னது தான் சரின்னு நிப்பாங்க .. தன்னோட தப்ப ஒத்துக்க மாட்டாங்க .. இப்படியான கேரக்டர் மணமகனுக்கோ மணமகளுக்கோ இருக்கிறது திருமணத்துக்கு முன்னாடி தெரியாது.. என்ன வரன் பார்க்க வர்ற அந்த குறுகிய நேரத்துல இதெல்லாம் வெளியில வராது .. அது பழகுற வாய்ப்பு வந்த பின்னாடி தான் தெரியும். சேர்ந்து வாழ்றது கஷ்டமாகும் .

2. சோசியல் மீடியாவில் அடிக்ட் ஆகி கிடக்கிறது .. இது இதுவும் பழகின பிற்பாடு அவங்களோடு தனியாய் இருக்கும் போது தான் தெரியும். ஒரு பிறந்த குழந்தை கையில மொபைல் கொடுத்து அது ரீல்ஸ் பார்க்கத் தொடங்கினா அதுக்கு நூறு வயசு ஆனாலும் அந்தக் குழந்தை வயசாகி வாழ்க்கை முடிஞ்சிடும் தவிர ரீல்ஸ் முடியாது.. அந்த அளவு கொட்டி கிடக்கு.. வீட்டுக்கு நான்கு பேர் வராங்க மொபைலை பார்த்துகிட்டு இருந்தா எப்படி இருக்கும்.. குழந்தைகள் ன்னா பிரச்சனை இல்ல வளந்த ஆட்களே அப்படி இருந்தால் .. உலகம் சந்திக்கிற புதுப் பிரச்சனை இது . சோசியல் மீடியாக்களுக்கு அடிமையாகி இருக்கிறது.. அது சும்மா பாக்குறது வேற அதுக்கு அடிமையாக இருக்கிறது வேற.. 

3. கட்டிக்கிட்டு போன வீட்ல வேலைகள் அதிகமா இருக்கும்னு போன அப்புறம் தான் தெரியும்.. எல்லாரும் பொதுவா குடும்பத்தை பற்றி ஆட்களை பத்தி தான் விசாரிப்பாங்களே தவிர வீட்டு வேலையை பற்றி கேர் பண்ண மாட்டாங்க.. அதுக்கு ஏற்றார் போல் அந்த வேலைகள் யார் மீது எவ்வளவு வரும்னு யாருக்கும் தெரியாது.. அது அனுபவப்படும் போது மட்டும்தான் தெரியவரும்.. சிலருக்கு அதை சமாளிக்க முடியும் சிலருக்கு அதை சமாளிக்க முடியாது.. இப்ப பெரும்பாலும் பிள்ளைகள் படிச்சு வர்றதால வீட்டு வேலைகளுக்கு எந்த அளவு இஷ்டப்படுறாங்கன்னு தெரியல .. பல விவாகரத்துகளுக்கு வீட்டு வேலைகள் அதிகமாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கிறது

4. சந்தேக புத்தி , மெட்டி ஒலி வீலா புருஷன் போல.. கல்யாணம் ஆகுற வரை நல்லா நடிப்பாங்க.. ரொம்ப தாராளமாக காட்டி இருப்பாங்க .. ஆனா கல்யாணம் ஆன பின்னாடி வேற வழியே இனி கிடையாதுனு ஆன பின்னாடி தான் வெளுத்து வாங்குவாங்க.. தாங்க முடியாது. சந்தேக புத்தி

5. ஒருத்தர் உண்மையிலேயே எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று திருமணத்துக்கு அப்புறம் தான் தெரிய வரும்.. பயோடேட்டாவில் மாத வருமானம் இவ்வளவுனு இஷ்டத்துக்கு போடலாம்.. எவ்வளவு மாசம் வருதுன்னு கேட்டா ஒரு கண்ணியமான வருமானம் சொல்லலாம்.. ஆனா அது பிராக்டிகலா வாழும் போது தான் பட்டவர்த்தனமாகும் .. பொருளாதாரம் சம்பந்தமான பிரச்சனை அதுக்கப்புறம் தான் வரும்

 அதனால் இந்த அஞ்சும் திருமணம் ஆன பின்னாடி தான் அனுபவம் பட முடியும்.. இது எல்லாத்தையுமே திருமணத்துக்கு முன்னாடி பெரும்பாலும் கேர் பண்றது இல்ல. ஆனா திருமணத்துக்கு பின்னாடி வாழ்க்கைவே முடிச்சு விடுற வல்லமை இதுக்கு உண்டு.

---------------------------------------------------------

அல்மஹ்ர் முஸ்லிம் மேட்ரிமோனி

மணமகளுக்கு முற்றிலும் கட்டணம் இல்லை

Whatsapp : 9789271238

----------------------------------------------------------