பெரும்பாலும் இரண்டாம்தார வரனை முதல்தார திருமணம் செய்ய இருப்பவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் தயார் இல்லை.. ஆனால் அதுல சில அணுகூலங்கள் இருக்கு அதை விரும்புறவங்க விரும்பினால் செய்யலாம்.
மறுமண வரன் மீதான பார்வை பொதுவா ஒரே ஒரு கண்ணோட்டத்துல மட்டும் தான் குறைவு இருக்குற மாதிரி தெரியும்.. அந்த ஒரு விஷயத்தை விசாலமான கண்ணோட்டத்தோட பார்த்தால் மற்ற பலன்கள் தெரியும்.
மறுமண வரன் ஏன் உருவாகுது? .. ஒன்னு விவாகரத்தாகணும் .. பொருத்தம் இல்லாத வரனை தேர்ந்தெடுத்து தப்பு பண்ணி இருப்பாங்க.. இரண்டாவது, நல்லா வாழ்க்கை போயிட்டு இருக்கும்.. இடையில விதியின் வசத்தால் கொரோனா மாதிரியான பேரழிவினாலோ விபத்தினாலோ நோயினாலோ மரணம் ஏற்பட்டு மறுமணம் லிஸ்ட்ல வருவாங்க.
விவாகரத்து கூட இருவரில் யாராவது ஒருவர் சரியில்லாமல் இருக்கலாம்.. ஆனால் மரணம் ஏற்பட்டு துணையை இழந்து அதன் மூலம் வருகிற மறுமண வரன்.. ரெண்டும் சமம் அல்ல .. தேர்ந்தெடுக்க இருவரில் முன்னுரிமை உள்ளவர்கள் துணையை இழந்தவர்கள்..
இவர்களைத் தேர்ந்தெடுப்பதால் சமூகத்தில மதிப்பு உயரும்.. ஏன் என்றால் திருமணமாகாத ஒருவரை திருமணம் செய்ய பலபேர் வருவாங்க.. இவரை திருமணம் செய்தால் அது ஒரு கைம்பெண்னுக்கு வாழ்க்கை கொடுக்கிறது போலவும் ஆகும்.
குடும்பத்தை பராமரிப்பதற்குரிய நெழிவு சுழிவில் ஏற்கனவே சில காலம் அனுபவம் இருக்கிறதால இங்க அது ஒர்க் அவுட் ஆகும்.. பாடம் எடுக்க தேவையே இல்லை..
வாழ்க்கைக்கு மதிப்பு கொடுக்க வாய்ப்பு.. ஊர் கூட்டி திருமணம் செய்து அதை வேண்டாம் என்று விடுவது என்பது மிகப்பெரிய ஒரு பிராசஸ்.. பல கேள்விகளுக்கு, மனஉளைச்சலுக்கு ஆளாக வேண்டி வரும்.. முதல் ஒன்னை இழந்தவங்க அடுத்த ஒன்னை சரியா வச்சுப்பாங்க.. காரணம் இழப்போட அனுபவம் அவங்க கிட்ட இருக்கும்.. திரும்பவும் அதுபோல இழக்க தயாராக இருக்க மாட்டாங்க.. திருமணத்தின் முக்கியத்துவத்தை அனுபவப்பூர்வமாக அறிந்து வருபவர்கள் இவர்கள்
இரண்டாம் தார வரனை தேர்ந்தெடுத்தால் உங்க தகுதிக்கு மேலேயே கிடைக்கும்.. இப்ப டிகிரி படிச்ச 21 வயசுல ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகுது. ஆறு மாசத்துல டைவர்ஸ் ஆயிட்டு .. குழந்தை இல்ல.. ஆனாலும் ஆறு மாசத்துக்கு முன்ன இருந்த இவருடைய எதிர்பார்ப்ப இப்ப வைக்க முடியுமா? கிடைக்கும்னு உறுதியா சொல்ல முடியுமா? . ஏன்னா இவர்களுக்கு ஈக்குவலானவர்கள் பெரும்பாலும் அவர்களை தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லை.. அப்ப இவர்கள் கீழ இறங்கி தான் வரணும்.. கீழே உள்ளவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு.. சில பேர் இப்படியும் செட்டில் ஆயிருவாங்க
பிரச்சனைகளையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஏற்கனவே அறிந்திருப்பதால் புதிய குடும்பத்தில் வரும் பிரச்சனைகளை சமாளிக்க அவர்களுக்கு இலகுவாக இருக்கும். இன்னும் பிரச்சினையே வளர விடாமல் தடுக்கவும் அவர்களுக்கு முன் யோசனை இருக்கும்.
குடும்பத்தில் பண வரவு செலவுகளில் முந்தையத் திருமண வாழ்வில் இருந்து பெற்ற அனுபவம் அடுத்த வாழ்வில் உதவும். வீண் செலவுகளை முன்கூட்டியே தடுக்க முடியும். ஒரு வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் என்ன தேவை இல்லாத பொருட்கள் என்ன இவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
முந்தைய திருமணத்தின் மூலம் இவருக்கான அறிமுகங்கள், சமூகத் தொடர்புகள் , உறவுகள், இவர் பெற்ற வாய்ப்புகள் அடுத்த திருமண வாழ்வுக்கு உதவக் கூடும்.
குடும்ப ஒற்றுமை, அது கலைவதால் ஏற்படும் பாதகங்கள் வேறு யாரையும் விட இரண்டாம் தர வரனுக்கு தான் அதிகம் பரீட்சையம் ஆகி இருக்கும். புதிய வாழ்வில் அத்தகைய பிரச்சனையை திறம்பட கையாளவும் வாய்ப்பு
குழந்தை வளர்க்கும் அனுபவம், பெரியவர்கள் நோயுற்றால் அவர்களை கவனிக்கும் முறைகள் ஏற்கனவே இவர்கள் அனுபவம் அடைந்திருப்பார்கள். புதிய வாழ்வில் அது மிகவும் கை கொடுக்கும்.
ஏற்கனவே துன்பத்தில் இருந்து வந்திருப்பதால் அடுத்தவர்களின் துன்பங்களை இவர்கள் புரிந்து கொள்ள முடியும். ஏற்கனவே அதிலிருந்து மீண்டு எழுந்து இருப்பதால் எந்தப் பிரச்சினையில் இருந்தும் மீண்டும் எழக்கூடிய மனவலிமை இவர்களிடம் இருக்கும்.
திருமணம் பற்றிய எதார்த்தத்தை இவர்கள் உணர்ந்திருப்பார்கள். காரணம் திருமணம் மூலம் பலரும் மனக்கோட்டை கட்டுவார்கள். அந்தக் கோட்டை எதார்த்தம் இல்லை என்று உணரும் போது ஏமாற்றம் அடைவார்கள் . ஆனா இவர்களுக்கு அந்த கவலை இல்லை. கற்பனைக்கும் நிஜத்திற்கும் உரிய வித்தியாசம் இவர்கள் அறிய வாய்ப்பு.
சில இடங்களில் சின்ன சின்ன பிரச்சனைகளுக்கும் பெற்றோர் வீட்டுக்கு செல்வதும், பஞ்சாயத்து வைப்பது மாதிரியும் இருக்கும். அனுபவம் அடைந்தவர்கள் அதை கடந்து செல்வார்கள். வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது.
முதல் திருமணம் செய்பவர்கள் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையில் நுழைவார்கள். ஆனால் இந்த வாழ்க்கையை எந்த காரணத்திலும் விட்டு விடாமல் பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை இரண்டாம் தார வரனுக்குத்தான் அமையும். அதை நோக்கிய வாழ்க்கை அமைத்துக் கொள்வார்கள். தேவையற்ற அனைத்தும் தவிர்க்கப்படும்.
வேலைக்கு செல்பவராக இருந்தால் வேலையையும் குடும்பத்தையும் சமநிலைப்படுத்தும் தன்மையில் இவர் ஏற்கனவே பயிற்சி பெற்றவராக இருப்பார். புதிய வாழ்வில் எந்த குழப்பமும் ஏற்பட வாய்ப்பில்லை.
பிரச்சனை வருவதற்கு சாத்தியமான மாமியார், நாத்தனார் உறவுகளை எப்படி கையாள வேண்டும் என்று முன் அனுபவம் இருப்பதால் இவர்களால் சமாளிக்க முடியும். பிரச்சனை வராத அளவு தவிர்க்க வாய்ப்புண்டு.
விவாகரத்து அதைப் பெறுவதற்கு உரிய சட்ட சிக்கல், அதனால் சமூகத்தில் ஏற்படும் வலி, மீண்டும் வாழ்க்கை அமைவதற்கான போராட்டம் இவை அனைத்தையும் ஏற்கனவே அறிந்திருப்பதால் மீண்டும் அது போன்றதொரு நிலைக்கு செல்ல வாய்ப்பு குறைவு.
ஆக இத்தகைய அம்சங்கள் இரண்டாம் தார வரனில் உண்டு. விரும்பியவர்கள் தேர்ந்தெடுக்கலாம்.
---------------------------------------------------------
அல்மஹ்ர் முஸ்லிம் மேட்ரிமோனி
மணமகளுக்கு முற்றிலும் கட்டணம் இல்லை
Whatsapp : 9789271238
----------------------------------------------------------