பகுதி 6 : வயது கடந்து விட்டது (90's kids க்கு) திருமணம் அமைய வழிகள்

 


கல்யாண வயசு கடந்தும் கல்யாணமாகாமல் இருக்கிறது அனேகமா 90 கிட்ஸ் ல இருந்து தான் தொடங்கக் கூடும். . காரணம் 90 கிட்ஸ் ல இருந்து தான் பரவலா குடும்பத்தில் படிப்பதும் தொடங்குகிறது.. ஏன்னா ஒரு காலம் இருந்தது படிப்பு கிடையாது.. படிச்சாலும் அஞ்சு ஆறு படிப்பாங்க ஏதாச்சும் ஒரு கடையில வேலைக்கு நிப்பாங்க .. குடும்பம் ஏழ்மை வறுமைன்னு மட்டும் தான் இருக்குமே தவிர திருமணம் தள்ளி போகாது.. இன்னும் குறைந்த வயதிலேயே கல்யாணம் பண்றதால அஞ்சு ஆறுனு ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகள் இருக்கும்.. கல்லூரி படிப்புன்னு பரவலா எப்ப தொடங்குச்சோ அதுக்கப்புறம் தான் வேலைக்கு போகணும் என்கிற நிலை வருமானமே அப்பதான் தொடங்குது செட்டில் ஆகணும் என்கிற கடமை குடும்பத்தில் சகோதரிகள் இருந்தா அவங்கள முதல்ல கட்டி குடுக்கணுமே என்கிற கடமை எல்லாம் முடிச்சுட்டு பார்க்கும் போது வயசு 30 கடந்துடுது

பெண்களை பொருத்தவரைக்கும் மேற்படிப்புனு போயி வரன் தேட ஆரம்பிக்கும் போது அவங்க வயசு பெருசா தெரியுது.. அதிலும் பெண்கள் டிகிரி வாங்கிட்டால் தன்னைவிட குறைவா படிச்சவங்களை ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம் பெரும்பாலும் இல்லை.. அதுலயும் காலம் போயிடுது.. ஆக வரன் தேங்குறது 90களில் தொடக்கத்தில் பிறந்தவர்களில் இருந்துதான் தொடங்குது. இப்படியானவர்களுக்கு எப்படி செஞ்சா வரன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்

இரண்டு வகை உண்டு .. நாள் போயிட்டே இருக்கு கேக்குறவங்களுக்கு பதில் சொல்ல முடியல கல்யாணம்னு ஒன்னு ஆனால் போதும் ன்னு இருக்குறவங்க ஒன்னு.. வயசு போனா என்ன எனக்கு இப்படி இப்படி தான் வேணும் அதுல சமரசமே செய்ய மாட்டேன் ன்னு இருக்குறவங்க..

இரண்டு வகையினருக்குமே வழிகள் உண்டு 

எதிர்பார்ப்புகளை தியாகம் செய்யணும்

 எதிர்பார்ப்புன்னா எக்ஸ்ட்ரா பிட்டிங் .. கலர், அழகு, படிப்பு, பணம், சொந்த வீடுனு இதெல்லாம் எக்ஸ்ட்ரா பிட்டிங்.. கிடைச்சா ஓகே முக்கியமா கல்யாண செலவை முழுசா நாங்க செய்றோம்னு சொன்னா அது பிளஸு ... ஃபிக்ஸ் ஆக வாய்ப்பு பிரகாசம் 

இதுல முக்கியமானது தன்னை விட தகுதியில் குறைந்த இடத்தில் பார்க்கனும் .. அவங்களுக்கு நீங்க பெருசா தெரிவீங்க.. இங்கு அழகு குணம் படிப்பு இதெல்லாம் சேர்ந்த மாதிரி கிடைக்க வாய்ப்பு உண்டு.. வேற எதுவும் கிடைக்காது 

உடல் பிட்னஸ் ல கவனம் செலுத்தணும்

மண்ட முடிவேனா நம்மல கேக்காம போய்கிட்டு இருக்கும்.. ஆனா உடம்பு நாம சொல்றதை கேட்கும் .. உடற்பயிற்சி செஞ்சு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது பார்க்க வயசு குறைந்த மாதிரி இருக்கும்.. சொன்னாதான் வயசு தெரியுங்கிற மாதிரி இருக்கும்.. சில பேர் இருப்பாங்க 25 வயசுலையே உடம்பு போட்டு 35 வயசு போல இருப்பாங்க .. சிலர் 40 வயசு ஆனாலும் 30 குள்ள இருக்கிற மாதிரி தான் தோற்றம் இருக்கும்.. காரணம் உடற்பயிற்சி .. நார்மலாவே செலக்ட் பண்றது தோற்றம் வச்சி தான் .. போட்டோ பார்த்து தான் பெரும்பாலும் பிக்ஸ் ஆக்குறாங்க .. பிறப்பிலான உருவத்த நாம ஒன்னும் செய்ய முடியாது.. ஆனா வடிவத்தை மாற்ற முடியும்.. முடியுமானவர்கள் செய்யலாம்.. அதுக்காகவாச்சும் பொண்ணு மாப்ள கிடைக்கும் இது இரண்டாவது

இரண்டாம் தார வரனை தேர்ந்தெடுக்கிறது

வயது கடந்தவர்களான உங்ககிட்ட இருக்க முக்கிய குவாலிபிகேஷனே ஃபர்ஸ்ட் மேரேஜ் என்பதுதான்.. அது செகண்ட் மேரேஜ் காரங்களுக்கு பெருசா தெரியும் .. ஒழுங்கா தேர்ந்தெடுக்காமல் கொஞ்ச நாள் மட்டுமே வாழ்ந்து டைவர்ஸ் ஆயிருக்கும்.. கொரோனா டைம்ல இறப்பு ஆயிருக்கும்.. குழந்தை இருக்காது.. இதுபோல உள்ளவர்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

பணம் சேர்த்து இருக்கணும்

 பணம் வந்தா பலருக்கும் கண்ணு தெரியாது வயசும் கண்ணுக்கு தெரியாது.. சினிமா உலகத்தில் சில ஜோடிகள் பார்க்கலாம்.. பொருத்தமே இருக்காது . காரணம் பணம் .. உலக வசதிகளில் நோகாம இருக்க யாருதான் விருப்பப்பட மாட்டார்கள்.. பணம் பத்தும் செய்யும் போது 11வதா கல்யாணம் செஞ்சு வைக்காதா.. நீங்க உங்களுக்கு கீழ போகத் தேவையில்லை .. தியாகம் பண்ண தேவையில்லை.. சில பேர் விரும்ப மாட்டாங்களே தவிர பல பேர் ஒத்துப்பாங்க.. அதிலிருந்து ஒருத்தரை தேர்ந்தெடுப்பது பெரிய காரியம் இல்லை.. அதனால பணக்காரனா இருப்பது இந்த விஷயத்துக்கு உதவும்.. சரி எல்லாராலும் பணம் சம்பாதித்து இருக்க முடியாது.. அப்படினா பணம் சம்பாதிக்க முடியும் என்கிற மாதிரி நம்பிக்கையை ஏற்படுத்தணும்.. ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி, கடை உருவாக்கி இருக்கலாம்.. ஆள் யாருன்னு கேட்டா அந்த கடைக்கு ஓனர் ன்னு சொல்லலாம்.. உங்களோட அந்த தொழில் மதிப்பு கூட பொண்ணு தர சொல்லும்..  

பெயர் சொல்ற மாதிரி புகழ் அடைஞ்சிருக்கணும்

 பணம் இல்ல கம்பெனி இல்ல கடை இல்லை .. இந்த youtube-லயே பாருங்க.. சேனல் ஆரம்பிச்சு ஏதாவது ஒரு கான்செப்ட் போட்டு பிரபலமா இருப்பாங்க.. ஏன் நாமலே இருக்கோம் இந்த வீடியோ போடுற நேரம் வர நமக்கு இன்னும் நிக்காஹ் ஆகல .. இதைப் பார்த்து நமக்கு வந்தா நமக்கு வேண்டாம்னா இருக்கு. இதே போல சோசியல் மீடியா ட்விட்டர் பேஸ்புக் ன்னு பிரபலமா இருப்பாங்க .. இந்தப் பிரபலம் கூட வாழ்க்கைத் துணை அமைய உதவும்..  

அரசு வேலை

 பல குடும்பத்துக்கு இந்த ஒரு தகுதியே போதும் .. காக்காசுனாலும் கவர்மெண்ட் காசு ன்னு அதுக்கு எப்பவும் மதிப்பு உண்டு .. எதையும் பொருட்படுத்தாமல் பொண்ணு தர பொண்ணு எடுக்க தயாராக இருப்பாங்க.. ஆக இவர்களுக்கும் வயசு பொருட்டு இல்லை

உன்னைப்போல் ஒருவன்

உங்களைப் போலவே லேட் ஆன ஒருத்தர தேடி எடுக்கணும்.. கண்டிப்பா இருப்பாங்க. என்ன நம்ம பார்வைக்கு வந்து இருக்க மாட்டாங்க .. தேடணும் 

ஏழை குடும்பத்தை நோக்கி போங்க

நானே ஏழை அப்படின்னா உங்களை விட ஏழையா தேடி போங்க .. வசதி இல்லாமல் கல்யாணம்னு ஒன்னு ஆனா போதும்னு நிறைய பேர் சமூகத்தில் இருக்காங்க.. அவங்களுக்கு உங்க கிட்ட நலவு தெரிஞ்சா கொண்டாடுவாங்க

சின்ன சின்ன உடற்குறைபாடு உள்ளவர்கள் 

நல்ல குவாலிபிகேஷன் இருந்தும் சின்ன சின்ன உடல் குறைபாடுகளை வைத்து சமூகத்தில் நிறைய தேங்கவிட்ருப்பாங்க.. அவங்கள நோக்கி போங்க .

அதிகமான மக்கள் தொடர்பு

அடுத்தவர்களோடு இலகுவா பழகி அதிகமான மக்கள் தொடர்போடு இருங்க .. இன்னும் இவங்க கல்யாணம் ஆகாம இருக்காங்களான்னு யார் மூலமாச்சும் மிராக்கிள் வந்து சேரும் .

இந்த பத்து வழிகள்ல வயசு கடந்தாலும் என் எதிர்பார்ப்பில் சமரசம் செய்ய மாட்டேன்னு நீங்க சொன்னாலும் அதற்கு வழி இருக்கு.. எனக்கு கல்யாணம் ஆனா போதும்னு இருந்தாலும் அதுக்கும் வழி இருக்கு . ஆக வயசு போயிட்டு வழுக்கத்தல ஆயிட்டு ன்னு எந்த கவலையும் வேண்டாம்.. இந்த ரூட்ல போனா கிளியர் ஆகிற வாய்ப்பு இருக்கு.விரைவில் திருமணம் நடக்க வாழ்த்துக்கள் ஷேர் செய்ங்க தேவை உடையவர்களுக்கு பயன்படகூடும்.

---------------------------------------------------------

அல்மஹ்ர் முஸ்லிம் மேட்ரிமோனி

மணமகளுக்கு முற்றிலும் கட்டணம் இல்லை

Whatsapp : 9789271238

--------------------------------------------------------