பகுதி 4 : திருமணம் தாமதிக்காமல் செய்வதால் ஏற்படும் பயன்கள்

 


ஆரம்பத்தில் செய்வதற்க்கு தான் மதிப்பு

கிரிக்கட்ல ஆரம்ப ஓவர்ல அடிச்சாலும் ரன் தான் .. 40 ஓவர் கட்டையை போட்டுட்டு கடைசி பத்து ஓவர் அடிச்சாலும் அதே ரன் தான் .. அங்க தேவை கடைசி மொத்தம் என்ன ரன்னோ அதுதான் . ஆனால் வாழ்க்கை அப்படி கிடையாது .. இங்க ஆரம்பத்துல செய்யறதுக்கு ஒரு மதிப்பு கடைசியா லேட்டா செய்றதுக்கு ஒரு மதிப்புன்னு இருக்கு.. அதே கிரிக்கட்டை மொதோ பாத்து ஓவர் அடிக்கிற ரன் மதிப்பு வேற .. ஒரு ரன் எடுத்தால் பத்து ரன் .  கடைசி  பத்து ஓவர்கள்ல அடிக்கிற ரன்களுக்கு மதிப்பு வேற.. ஒரு ரன் எடுத்தா அரை ரன் ... இப்ப எந்த ஓவர்ல அடிச்சி ஆடுவாங்க ? ஆரம்ப ஓவர்கள்ல ..  ஆனால் வாழ்க்கையில் ஆரம்பத்தில் செய்கிறதுக்கு தான் மதிப்பு அதிகம்னு  தெரிஞ்சும் நம்ம லேட் பண்றோம்.. அதுவும் திருமணம் ஆரம்பத்துல செஞ்சாதான்  மதிப்பானது . அதை கடைசி பத்து ஓவர் வரை இழுத்திட்டு போனீங்கன்னா மதிப்பு குறையும் .


ண்ணாம் கிளாஸ் பையன்  100 திருக்குறளை மனப்பாடமா சொன்னா பாராட்டி பரிசு கொடுப்பாங்க .. செய்தியில் கூட வரும் .. அதை 12 கிளாஸ் பையன் அதே மாதிரி செஞ்சா எட்டி கூட பாக்க மாட்டாங்க.. செய்யறதுல வித்தியாசம் இல்ல அது எந்த இடத்தில் செய்கிறோம் அப்படிங்கறதுதான் முக்கியம்


ஒன்று செய்து தான் ஆக வேண்டும் என்றால் விரைவில் செய்ய வேண்டும்


அதுதான் நியதி..  வீட்டுப்பாடம் செஞ்சுதான் ஆகணும்னா அது ஆரம்பத்திலேயே செஞ்சிடனும் சனிக்கிழமை முடிச்சுடனும்  ஞாயிறு கிழமை வரை இழுக்க கூடாது..   செய்யறத சீக்கிரமே செய்யுறதுல என்ன ஒரு பெனிஃபிட்னா ஏதாவது ஒரு தடங்கல் இடையில வந்ததுன்னா அதை சரி செய்வதற்கு  கால அவகாசம் கிடைக்கும்..   ஏர்போர்ட்டில் இத்தனை மணிக்கு உள்ளே இருக்கணும்னு ஒரு கணக்கு.. சரியா அந்த நேரத்தை கணக்கு பண்ணி போன வழியில் டிராபிக் இருந்தால் சங்கடமாயிடும் .. சீக்கிரமே போயிட்டா  ட்ராபிக் இருந்தாலும் வண்டி பழுதானாலும்  அந்த நேரத்தை மேனேஜ் பண்ண முடியும்.. திருமணத்தைப் பொறுத்த வர நீங்க முயற்சியை சீக்கிரம் செஞ்சாதான் அமைகிறது கொஞ்சம் காலம் எடுத்து அமையும் .. முயற்சிக்கே காலம் எடுத்தா கிடைக்கிறது இன்னும் லேட்டாகும்.. ஆக செஞ்சுதான் ஆக வேண்டியத சீக்கிரம் செய்யணும்

எங்க லேட் ஆகும் போது மதிப்பு போகுமோ அங்க கிடைக்கிறத ஏத்துக்கிற மாதிரி ஆகும்

ல்யாணத்துக்கு சாப்பாட்டுக்கு போறீங்க.. லேட் ஆயிருச்சு .. முதல் பந்தில வந்த சாப்பாடு போல கடைசி பந்துக்கு வராது.. கவனிக்க ஆள் இருக்க மாட்டாங்க.. கிடைக்கிறது அங்க ஏத்துக்க வேண்டி வரும் .  ட்ரெயின் டிக்கட் புக்கிங் பண்றீங்க .. ஆரம்பத்திலேயே பண்ணும் போது நாம ஆசைப்படுற சீட்டு கிடைக்கும்.. குடும்பத்தோடு போனால் ஒரே கம்பார்ட்மெண்ட்ல பக்கத்து பக்கத்து சீட்டு வாங்கலாம்..  அதுவே கடைசில போய் நின்னா கிடைக்கிற சீட்டு ஏத்துக்க வேண்டி வரும். வேற வேற கம்பார்ட்மெண்ட்ல ஒத்த ஒத்த சீட்டு இருக்கும். சரி அதுவாய் இருந்துதேனு வாங்கிட்டு வர வேண்டி வரும். இதே தான் ஆரம்பத்தில் திருமணம் செய்யும் போது விரும்பிய வரனை கேட்கலாம் .. இதே லேட் ஆகும் போது கிடைக்கிறது ஏத்துக்க வேண்டியது வரும்.

21 ல இருந்து 40 வரை வாழ்க்கைல முக்கியமான காலகட்டம்


உலக வாழ்க்கை ஆவெரேஜா 60 வருஷம்  ...  அதுல மூணுல ஒரு பகுதி முதல் 20 வருஷம் பள்ளி கல்லூரிக்கு போயிடுது .. அதுக்கு அடுத்த 20 வருஷம் அதாவது நம்ம உடலின் இளமையின் முடிவும் முதுமையின் தொடக்கமும்  40 வயசு ..  40 க்கு மேல் பொதுவா உடல் பலகீனம் அடைகிறது .. முதுமை ஆகுது .. உடலை கவனிக்கிறவங்க கண்டுக்காதவங்க பொறுத்து மாறுதல் அடையும் . ஆனா பொதுவானது 40 க்கு மேல முதுமை .. இந்த இரண்டாம் பகுதி 21 ல  இருந்து 40 .. வாழ்க்கைல முக்கியமான காலகட்டம் . நீங்க சாதிக்க நினைக்கிற எல்லாத்தையும் இதுல செய்ய முடியும் .. 40 வயசுக்கு மேல என்னென்ன தேவையோ அது இந்த காலகட்டத்தில் முடித்தாகணும்.. என்ன தேவை பணம் தேவை  வீடு தேவை  சொத்து தேவை  தொழில்க்கான அடித்தளத்தை ஏற்படுத்தணும்.. இப்படி  என்ன தேவையோ அதற்காக இந்த வயசுல  ஓட முடியும் . இதை சரியா செஞ்சா  40 க்கு மேல் ரிலாக்ஸ் ஆகிட முடியும் .. அதுக்கப்புறம் பெரிய ஓட்டம் தேவையில்லை..   இந்த பகுதியில் செய்ய வேண்டிய வேளைகளில் முக்கியமானது தான் திருமணம் .40 க்கு மேல் உங்களுக்கு தேவையானதுக்கு பண்ற இன்வெஸ்ட்மென்ட் இந்த காலகட்டம் .. இன்வெஸ்ட்மெண்ட்லையே பெரிய இன்வெஸ்ட்மென்ட் என்னது ? குடும்பம் உறவுகள் பிள்ளைகள் .. அதற்கான விதை ஆரம்பத்துலயே போட்டால் அடுத்த 20 வருசத்துல ஒரு மரமாகி நிற்கும் . பிள்ளைகள் வளர்ந்து நிப்பாங்க . 50 க்கு மேல் உதவியா இருக்கும் . ஆக திருமணத்தை ஆரம்பக்கத்துலையே முடிச்சிட்டா இதுக்கு வாய்ப்பா இருக்கும் .


வயசு கூடும் போது பொறுப்புகள் கூடும்

காரணம் உங்களை சுற்றி இருப்பவர்கள் பலகீனம் அடைவார்கள்.. உங்களுக்கு 25 வயசு ஆகும்போது உங்கள் பெற்றோர்கள் 50 வயதை தொட்டியிருப்பார்கள்..  உங்களுக்கு 35 வயது அடையும் போது அவர்கள் 60 அடைந்திருப்பார்கள்.. நீங்கள் அவர்களுக்கு முழுவதும் பொறுப்பெடுக்க வேண்டிய தருணம் அது.. இலகுவான நேரத்துல எல்லாம் விட்டுட்டு  அந்நேரம் உங்களுக்குன்னு ஒரு வாழ்வை தொடங்குவது சுமையை சற்று கூட்டும். அது கணக்கீடு செய்தால் முன்னாடியே திருமணம் செய்வது சிறந்தது


35 வரை தான் ரிலாக்ஸ்

  

பொதுவா 35 வயசு வரையான காலகட்டம்தான் ரிலாக்ஸன காலகட்டம்.. பெரிய பொறுப்புகள் எதுவும் அந்நேரம் பொதுவாய் இருக்காது.. அதன்பின் நீங்க பொறுப்புக்கு முகம் கொடுக்கணும்.. அதனால முடிஞ்ச அளவு எவ்வளவு சீக்கிரம் நீங்க கல்யாணம் பண்றீங்களோ அந்த அளவு அந்த காலகட்டத்தை நீங்க என்ஜாய் பண்ணலாம்


குழந்தைகள் விரைவில் கிடைக்கும்


நீங்க சீக்கிரமே கல்யாணம் பண்ணுவதன் மூலம் உங்களுக்கு சீக்கிரமே குழந்தை வரும்.. உங்களுக்கு  வயது ஆகும்போது குழந்தை வாலிப வயது அடைந்து விடும்.. திருமணம் லேட்டாகும் போது வருகிற குழந்தை இவருக்கு வயது ஆகும்போது பள்ளி தான் படிச்சிட்டு இருக்கும்.. நமக்கு வயசு ஆகும் போது நமக்கு பொறுப்பு எடுக்க தான் குழந்தைகள்.. அது சீக்கிரமே கல்யாணம் பண்ணுனாத்தான் அந்த லெவல் ஈக்குவலா இருக்கும்.

பணம் சம்பாதிக்க ஊக்கமருந்து திருமணம் 

வாழ்க்கையில முன்னேறனும்னா  சீக்கிரம் திருமணம் பண்ணிரனும்.. ஏனென்றால் பொறுப்பு கொடுக்கிறது திருமணம் .. இரண்டு நண்பர்கள் வச்சுப்போம் .. ஒருத்தனுக்கு 25 வயசுல கல்யாணம் ஆயிருச்சு.. இன்னொருத்தனுக்கு ஆகல .. இப்ப ரெண்டு பேருக்கும் வயசு 35 ஆகுது .. ரெண்டு பேர்ல யாரு வாழ்க்கை தரத்தில் உயர்ந்திருப்பாங்கன்னு நினைக்கிறீங்க? கல்யாணம் பண்ணாமல் இருக்கிற ஆளுக்கு எந்த பொறுப்பும் கிடையாது கடமையும் கிடையாது பொருளாதார இலக்கும் கிடையாது.. மாசம் ஓரளவு வருமானம் கிடைச்சாலும் போதும்னு இருந்துருவாங்க.. ஆனா கல்யாணம் ஆனவருக்கு குடும்ப சாப்பாடு, குழந்தை படிப்பு  மருத்துவம் வீட்டுச் செலவு தனி வீடு கட்ட கனவு இப்படி தேவை உள்ள இலக்கை நோக்கி ஓடுவார்கள்.. அது அந்நேரம் கஷ்டமா தெரிஞ்சாலும்  பின்னாடி திரும்பி பார்க்கும்போது வந்த இடம் உயரமாய் இருக்கிறது தெரியும் .. பொறுப்பு இல்லாமல் இருந்தால் ஒருவேளை சாப்பாடு கிடைச்சா போதும்னு இருந்தூடுவோம்.. அதுவே குடும்பம் குழந்தை வரும்போது நம்ம ஓட்டம் வேற மாதிரி இருக்கும்..  இதுதான் நிதர்சனம் ... நாம சோம்பேறித்தனமா இருந்தாலும் நம்மை ஊக்கப்படுத்தும் வினையூக்கி திருமணம்.. அத காலா  காலத்துல அடைஞ்சிட்டோம்னா நம்ம தரம் உயரும்.. முன்னேற ஆசைப்படுறவங்களுக்கு அருமையான ஒரு ஊக்கமருந்து திருமணம்.

குடும்ப கட்டமைப்புக்கு உதவி  

குடும்பத்தை கட்டமைப்பது ஆரம்பத்தில் கடினமான ஒரு பணி.. குறைந்த வயதிலேயே திருமணம் செய்யும் போது  அந்த வயசுல  குடும்பத்தார்கள் நமக்கு உதவிக்கு இருப்பாங்க..  குறைவான வருமானம் இருந்தாலும் குடும்பத்தார்கள் சமாளிச்சுப்பாங்க.. குழந்தை வளர்ப்புக்கு ஆள் இருக்கும்.. காலம் போகப் போகத்தான் அவரவர்களுக்கு குழந்தை வளரும்போது  விலகுவார்கள்.. ஆக உறவுகள் இணைஞ்சு இருக்கிற நேரத்துல நம்மோட சுமையை பகிர்ந்து கொடுக்கிற வாய்ப்பு ஆரம்ப கட்டத்திலேயே திருமணம் செய்வதால்  உண்டாகும்.. இது மிகப்பெரிய லாபம்.

திருமணம் ஒரு இயற்கைக்கடன்  

திருமணம் என்பது ஒரு இயற்கை தேவை.. எது காலைக்கடன் மாதிரி .. காலைக்கடனை நான் சாயந்தரம் கட்டிக்கிறேன் ன்னு உக்கார முடியுமா ? அந்த நேரத்துல செட்டில்மென்ட் பண்ணியாகணும் . அப்படினாதான் அடுத்தடுத்த வேலையை கவனமா பார்க்க முடியும் .. இல்லைனா அதே நினைப்பாதான் இருக்கணும் . அதனால நான் வாழ்க்கையில் செட்டில் ஆயிட்டு தான் செய்வேன் சாதிச்சிட்டு தான் செய்வேன் குடும்ப பாரத்தை நீக்கிட்டு தான் செய்வேன் அப்படின்னு சொல்ற விஷயம் இல்ல .. கட்டாய தேவை ஒன்று தாமதமானால் தவறான வழிக்கு கொண்டு செல்லக்கூட வாய்ப்பு ஆகிட கூடும்


ஆக இதெல்லாம் திருமண வயதை அடைந்து லேட் பண்ணாமல்  திருமணம் சீக்கிரம் செய்வதால் உண்டாகும் பயன்கள் ஆகும்.

---------------------------------------------------------

அல்மஹ்ர் முஸ்லிம் மேட்ரிமோனி

மணமகளுக்கு முற்றிலும் கட்டணம் இல்லை

Whatsapp : 9789271238

--------------------------------------------------------