கல்யாணப் பேச்சு ஆரம்பிக்கும் போது பட்டாம்பூச்சி பறக்கும். நிறைய ஆசைகள் எதிர்பார்ப்புகள் உருவாகும் . இதுபோல இதுபோல இருக்கணும். இப்படி இருந்தா மட்டும் தான் திருமணம் செய்வேன். பார்க்க லட்சணமா இருக்கணும், படிச்சிருக்கணும், நிறைய சம்பாதிக்கணும், சொந்த வீடு இருக்கணும், இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் வரும்.
ஆனால் தேடலின் போது ஒன்று இருந்தால் மற்றொன்று இருக்காது. எல்லாமே இருந்தாலும் புதுசா ஒரு பிரச்சனை வரும். ஆக எதிர்பார்ப்புகளை அதிகம் வைப்பவர்கள் திருப்தி அடையவே மாட்டார்கள். பொதுவா ஒரே ஒரு பெண் இருக்கிற வீட்டில் அவ்வளவு சீக்கிரம் திருப்தி அடைய மாட்டார்கள். காரணம் அவர்கள் தான் அதிகம் எதிர்பார்ப்புகளை வைப்பார்கள். முதல் பாயிண்ட் என்னவெனில்
1. ஒருத்தருக்கு 100% பொருத்தமான வரன் எங்கேயும் இருக்காது.. அப்படி முழுமையாக நமக்கு பிடித்த, நமது எதிர்பார்ப்புகளை எல்லாம் பூர்த்தி செய்கிற வரன் ஒன்று உலகத்திலேயே கிடையாது. ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது இதுதான் எதார்த்தம். படிப்பு இருந்தா அழகு இருக்காது , அழகு இருந்தா வசதி இருக்காது , எல்லாமே சேர்ந்து இருந்தால் அவங்களுக்கு உங்களை பிடிக்காது, தர மாட்டாங்க . வீணாக காலங்கள் தான் செல்லும் . முதல் நிலை எதிர்பார்ப்பு வைங்க, இரண்டாம் நிலை எதிர்பார்ப்பு வைங்க .. முதல் நிலை எதிர்பார்ப்பு கட்டாயம் இருக்க வேண்டும், இரண்டாம் நிலை எதிர்பார்ப்பு இருந்தால் மகிழ்ச்சி இல்லாவிட்டாலும் பிரச்சனை இல்லை. இப்படி வகைப்படுத்திக்கொண்டால் எளிதாக இருக்கும்.
அடுத்து திருமண கனவுகள் தொடங்கும் போது எல்லாத்துக்கும் மேல அவர்களை வைத்து நினைத்து உருகுவார்கள். அப்படி கிடையாது
2. நெருக்கமான உறவும் எளிதில் அறுந்து விடக்கூடிய தொடர்பு அற்ற உறவும் கணவன் மனைவி உறவு தான்.. பிள்ளைகள் சகோதர சகோதரிகள் எப்போதும் உண்டு. ஆனால் கணவனுக்கு மனைவியோ மனைவிக்கு கணவனும் எப்போதும் கிடையாது. திருமணமான புதிதில் பெற்றவர்களை விட அதிகமாக நேசிப்பார்கள். உடன் பிறந்தவர்களிடம் பேசுவதை விட அதிகமாக பேசுவார்கள். அதுவே ஒரு பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து வரை போகிறது என்றால் மறுமணம் என்று ஆகிவிட்டால் தூரத்து உறவில் கூட இவர்கள் வர மாட்டார்கள். கணவன் மனைவி உறவு அப்படி வித்தியாசமானது . அனைவரையும் விட நெருக்கமான உறவாகவும் இருப்பார்கள். சுத்தமாக தொடர்பே கிடையாது என்கிற அளவுக்கும் போவார்கள். அதனால் கணவன் வரப் போகிறார் மனைவி வரப் போகிறார் என்ற மகிழ்ச்சியில்.. கணவர் வந்துவிட்டார் மனைவி வந்து விட்டார் என்ற மகிழ்ச்சியில் உங்களது நிரந்தர உறவைத் தூரம் ஆக்கி விடாதீர்கள். இதை அறிந்து நீங்கள் திருமணத்திற்குள் செல்லுங்கள்
3. புரிதல் ஏற்படும் வரை குழந்தை வேண்டாம். இது உங்களுக்கு வித்தியாசமாக தெரியலாம். ஆனால் இதுதான் எதார்த்தம். திருமணம் ஆகி ஒரு ஒரு குழந்தையுடன் பல இடங்களில் விவாகரத்து ஆகிறது. இறுதியில் அந்த குழந்தை தகப்பனின் அரவணைப்பு இல்லாமல் வளரும். குழந்தையோடு இருக்கும் பெண்ணிற்கு மறுமணத்திற்கு வாய்ப்புகளும் குறையும். இனி விவாகரத்துக்கு வாய்ப்பு இல்லை என்று உறுதி செய்த பின் குழந்தையை பெற்றுக் கொள்ளுங்கள். இது சமூகத்துக்கும் நல்லது.
4. வரன் தேடலில் நிராகரிப்புகள் சகஜம் . நிறைய பார்க்க வருவார்கள் . ஒரே ஒருத்தர் தான் பிக்ஸ் ஆக போறாங்க .. அதனால நம்மளை வேண்டாம்னு சொல்லிட்டாங்களேன்னு நாம வொர்த் இல்லையோ ன்னு வருத்தம் ஆயிட கூடாது .. ஆட்களுக்கு தக்க எதிர்பார்ப்பு வேறவேற இருக்கும் . வாழ்க்கைல ஒரே ஒரு திருமணம் தான் எனும்போது தகுதிக்கு மீறி எதிர்பார்ப்பு அவர்கள் கொண்டிருந்தால் நாம் என்ன செய்ய முடியும் ? தவிர நம்மை நிராகரிக்க நாம் அல்லாத நிறைய காரணம் உண்டு . அதனால அதெல்லாம் நினைச்சி மைண்ட்ல ஏத்திக்காதீங்க .. நம்ம தகுதிக்கும் நிராகரிப்புக்கும் சம்பந்தம் இல்லை . அவர்களுக்கானவர் நாம் இல்லை அவ்வளோதான்.
5. உங்கள் ரகசியத்தை எந்த இடத்திலும் வெளியில சொல்லிராதிங்க.. இது நீங்க ஆரம்பத்திலேயே எடுக்க வேண்டிய உறுதியான முடிவு. காரணம் ஆரம்ப காலத்தில் ஒரு மயக்கத்தில் கணவன் கேட்கிறார் எதையும் மறைக்கக் கூடாது என்று மனைவியானவர் தனது பழைய கால ரகசியங்களை சொல்வார் . அந்த நேரம் அது ஈசியாக கடக்கப்படும். ஆனா அது பின்னாடி வேலை செய்யும். பிரச்சனையின் போது வெடிக்கும். அதை வைத்தே நீங்கள் விரும்பத்தகாதவராய் ஆக்கப்படுவீர்கள். பிறரின் முந்தைய கால காதல், ரகசியங்களை யாரும் யாரிடமும் கேட்கவும் வேண்டாம், சொல்லவும் வேண்டாம். புதிய வாழ்வை சிறப்பாகவும் நேர்மையாகவும் அமைத்துக் கொள்ளுங்கள் போதுமானது.
6. திருமணம் ஆவதற்கு முன் ஒரு ஆணின் தகுதி என்னவோ அதை பொறுத்துதான் அவர்களுக்கு தகுந்த துணை அமையும்..! ஆசை பெரும்பாலும் அனைவருக்குமே அதிகமாக தான் இருக்கும். ஆனால் கேட்டுப் போகும் போது கிடைக்காது . காரணம் அவர்கள் எதிர்பார்க்கிற அம்சம் நம்மிடம் இல்லை. அதனால் இந்த திருமணகட்டத்தில் உள்ளோர் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்..! தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள் ! எந்த ஒரு நல்ல துணைக்கும் நாம் தகுதியாக இருக்க வேண்டும்..!
ஒரு நேரத்தில் நமக்கு வயது இருக்காது..! அதற்க்கான வயது வருகின்ற நேரம் தகுதி இல்லாமல் போய் விடக்கூடாது.
7. மனைவியை/கணவனை தேர்ந்தெடுக்கும் போது அனைவருமே தங்களின் ஆசைக்கு தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் நல்ல குழந்தைக்காக தேர்ந்தெடுங்கள் . அந்த குழந்தைக்கு நல்ல சப்போர்ட் க்காக நல்ல குடும்பத்தில் இருந்து தேர்ந்தெடுங்கள் . அந்த குழந்தைக்கு நல்ல சூழல் அமைய நல்ல வாழும் இடத்தை தேர்ந்தெடுங்கள் . ஒரு எதிர்கால தகப்பனாக / தாயாக யோசிக்க வேண்டியது இது.
8. மனைவியானவர் கணவனுக்கு கட்டுப்படணும் என்று விரும்பினால் தேர்ந்தெடுக்கும்போதே கட்டுப்பட கூடிய அளவுள்ள கணவனை தேர்ந்தெடுக்கணும் . மனைவி தனக்கு கட்டுப்படணும்னு ஒவ்வொரு கணவனுக்கும் ஆசை இருக்கும். எனும்போது மனைவி தனக்கு கட்டுப்படக்கூடிய அளவு தகுதி உடையவராய் கணவன் இருக்கவேண்டும்.
ஒரு மேனேஜ்மென்ட் ஒழுங்கா நடக்க பொசிஷன்ல உள்ளவங்களுக்கு கீழ்ப்படிதல் அவசியம்.. என்னதான் நண்பனா இருந்தாலும் அது வாசலுக்கு வெளியே தான் இருக்க முடியும்.. இவன் தானே இவன் சொல்லுக்கு நாம ஏன் கட்டுப்படணும்னு நினைச்சா தொழில் படுத்திரும்.
9. அறிவு | அழகு | ஒழுக்கம் |
இது மூனும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றது
அதுல ஒன்னு இருந்தா இன்னொன்னும் இருக்கும்னு உறுதி கிடையாது .. அதிசயமா மூன்றுமே எங்கையாவது சிலருக்கு தான் பொருந்திவரும்.
10. வரன் தேடலில் நிராகரிப்புகள் சகஜம் . நிறைய பார்க்க வருவார்கள் . ஒரே ஒருத்தர் தான் பிக்ஸ் ஆக போறாங்க .. அதனால நம்மளை வேண்டாம்னு சொல்லிட்டாங்களேன்னு நாம வொர்த் இல்லையோ ன்னு வருத்தம் ஆயிட கூடாது .. ஆட்களுக்கு தக்க எதிர்பார்ப்பு வேறவேற இருக்கும் . வாழ்க்கைல ஒரே ஒரு திருமணம் தான் எனும்போது தகுதிக்கு மீறி எதிர்பார்ப்பு அவர்கள் கொண்டிருந்தால் நாம் என்ன செய்ய முடியும் ? தவிர நம்மை நிராகரிக்க நாம் அல்லாத நிறைய காரணம் உண்டு . அதனால அதெல்லாம் நினைச்சி மைண்ட்ல ஏத்திக்காதீங்க .. நம்ம தகுதிக்கும் நிராகரிப்புக்கும் சம்பந்தம் இல்லை . நமக்கானது அவர்கள் இல்லை அவ்வளோதான்
---------------------------------------------------------
அல்மஹ்ர் முஸ்லிம் மேட்ரிமோனி
மணமகளுக்கு முற்றிலும் கட்டணம் இல்லை
Whatsapp : 9789271238
---------------------------------------------------------