பகுதி 19 : திருமணம் செய்து வைக்க கூடாத மூன்று பேர்!


"இந்த மூன்று பேருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டாம்" என்ற இக்கட்டுரை, திருமணத்தின் முன் கவனிக்க வேண்டிய சில முக்கியமான பண்புகள் அல்லது சூழ்நிலைகளை எடுத்துக்காட்டவே . இது எவரையும் தாழ்வு செய்யும் நோக்கில் அல்ல. 

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் போது, "யாரைத் தேர்ந்தெடுப்பது" என்பதை விட "எதைத் தவிர்க்க வேண்டும்" என்பதும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு விவாதிக்கப்படும் மூன்று வகையான நபர்களின் பண்புகள், திருமண வாழ்வில் எதிர்கால சவால்களை உருவாக்கக்கூடியவை.  இது ஒரு பொது அறிவுரை மட்டுமே

1. யார் கல்யாணம் வேண்டாம்ங்குறாங்களோ அவங்களுக்கு அவர்களாக மனசு மாறும் வரை கல்யாணம் பண்ணி வைக்காதீங்க.. எவ்வளவுதான் எடுத்து சொல்லியும் ஒருத்தர் வேண்டாம்னு சொன்னா அதுக்கு என்ன காரணம் என்று அவங்களுக்கு மட்டும் தான் தெரியும்.. வெளியில் சொல்ல வெட்கப்படலாம்.. அல்லது வெளியில் வேறு ஏதாவது காரணம் கூறலாம்.. அப்படியானவர்களுக்கு வம்படியாக திருமணம் செய்து வைத்தால் அது ஒரு விருப்பம் இல்லாத படிப்பு படித்ததை போல.. விருப்பமில்லாத ஒரு வேலையை செய்வது போல .. அங்க பர்பாமென்ஸ் இருக்காது .. இங்க திருமண வாழ்க்கையில் இஷ்டப்பட்டு வாழ முடியாது 

ஒரு சின்ன ஒரு பிரச்சனை வந்தாலுமே அதை சாக்க வச்சு திருமண வாழ்க்கைய விட்டு வெளியேற தான் பார்ப்பார்கள்.. அது இவரது வாழ்க்கை மட்டுமல்ல யாருக்கு திருமணம் செய்து வைத்தார்களோ அந்த இன்னொருவரின் வாழ்க்கையையும் கெடுத்தது போல் ஆகும். சீரியல்ல நடக்கிற கல்யாணம் சுவாரசியத்துக்காக விருப்பம் இல்லாமல் பண்ற மாதிரி காட்டுவாங்க .. ஆனா நிஜ வாழ்க்கை சீரியல் இல்லையே .. பார்க்க சகிக்காது..

2. யாரு திருமண வாழ்க்கைக்கு உடல் அளவில் தகுதி இல்லையோ அவர்களுக்கு திருமணம் செஞ்சு வைக்காதீங்க. உங்களோட பாசத்தை காட்டுவதற்காக இன்னொருத்தர் வாழ்க்கையை வீணாக்குறீங்க.. ஒருவர் காலையில காலை சாப்பாடு சாப்பிடுகிறோர் .. மதியம் இறந்து விடுகிறார் .. யாராச்சும் அந்த நேரத்துக்கு சாப்பாடு டைம் ஆயிருச்சுன்னு டெட் பாடிக்கு ஊட்டி விட்டுட்டு இருப்பாங்களா? என்ன சாப்பாடு எடுக்க கூடிய அவசியம் அங்க இல்லை. அதேபோல் இல்லற வாழ்வுக்கு தகுதி இல்லாத உடல் அளவில் பலவீனமானவர்கள் திருமண வயதில் இருந்தாலும் திருமணம் அவசியமும் கிடையாது. உங்க சந்தோஷத்துக்காக எதுக்கு இன்னொரு நல்லா இருக்கிற ஒருத்தரோட வாழ்க்கையை வீணாக்குறீங்க? உங்களின் நல்லா இருக்கிற மற்ற பிள்ளைக்கு அதுபோல இல்லற வாழ்வுக்கு தகுதி இல்லாத ஒருவரை திருமணம் செய்து வைப்பீர்களா ? அப்படியான ஒருவருக்கு திருமணம் செய்து வைப்பது தள்ளாத வயதில் உள்ளவரை வேலைக்கு அனுப்புவது மாதிரி . 

3.  திருமண வயது இருக்கும் நல்ல உடல்நலனும் இருக்கு. மனநலம் சரியில்லை . இவர்களுக்கும் திருமணம் செய்து வைக்க கூடாது. கல்யாணம் ஆனா சரியாயிடும்னு சிலர் மறைச்சு கட்டி வச்சிருவாங்க . பின்னால தெரிஞ்சி பிரியுற சூழல் வரும் . எதுக்கு அத செஞ்சு வைக்கணும் ? முதல் தாரத்தை இரண்டாம் தாரமா ஆகிவிட்டது தான் மிச்சம். 

எல்லாருமே பிளஸ் டூ படிச்சிருந்தாலும் கல்லூரியில அதுக்குன்னு தகுதி இருந்தா தான் சேர்க்குறாங்க .. எல்லாருமே கல்லூரி படிச்சிருந்தாலும் வேலைக்கு அதுக்குன்னு தகுதி இருந்தா தான் சேர்கிறார்கள்.. கல்யாணம் பண்றதுக்கும் தகுதியை பார்க்கத்தான் வேண்டும் .

சுருக்கமா சொல்லணும்னா திருமண வாழ்க்கையை மனதாலும் உடலாலும் அனுபவிக்க முடியாத நிலையில் இருப்பவர்கள் . இவர்களுக்கு திருமணம் அவசியம் இல்லை.. இவர்களுக்கு செஞ்சு வச்சு இன்னொருத்தர் வாழ்க்கையை கெடுத்துட வேண்டாமே!

 இப்போ ஒரு கேள்வி வரலாம். அப்படின்னா போதைகளுக்கு பழக்கமானவன் , பெண்பித்தன் இதுபோல நபர்களுக்கு செய்து வைக்கலாமா ? இவர்களுக்கு தடை இல்லையா? என்று ..

பதிவு தெளிவானது. யார் மனதளவிலும் உடலளவிலும் திருமண வாழ்க்கையை  அனுபவிக்க முடியாதவர்களோ அவர்களுக்கு அவர்கள் அதிலிருந்து மீளும் வரை அவர்களுக்கு திருமணம் அவசியம் இல்லை. கெட்ட பழக்கங்கள் உள்ளவர்கள் மனதாலும் உடலாலும் திருமண வாழ்வை அனுபவிக்க முடியாதவர்கள் அல்ல . அது நிரந்தரமாக இருக்கும் அம்சமும் அல்ல . ஒரு நேரத்தில் அதிலிருந்து வெளியேறவும் முடியும் .  ஆனால் அவர்கள் முன்னுரிமை கொடுக்க தகுந்தவர்கள் அல்ல . அவர்களுக்கு பெண் கொடுக்கலாமா வேண்டாமா என்பது பெண் குடும்பத்தை பொறுத்தது . 

---------------------------------------------------------

அல்மஹ்ர் முஸ்லிம் மேட்ரிமோனி

மணமகளுக்கு முற்றிலும் கட்டணம் இல்லை

Whatsapp : 9789271238

----------------------------------------------------------