பகுதி 18 : உறவுகளில் திருமணம் செய்வதால் ஏற்படும் சாதக பாதகங்கள்



சொந்தத்தில் பெண் எடுக்குறதுல சிலருக்கு ஈடுபாடு உண்டு . அடிக்கடி பார்க்க, பழக வாய்ப்பு ஏற்படுவதால் காதல், விருப்பங்கள் ஏற்படும்.  

சொந்தத்துல பெண் எடுக்கிறதால பெண் கொடுக்கிறதால சில சாதகங்கள் உண்டு. சில பாதகங்களும் உண்டு. 

சாதகங்கள் : 

1. பெண் தேட மாப்பிள்ளை தேட பெருசா அலைய தேவையில்லை.. புரோக்கர்கள், மேட்ரிமோனிக்கு காசு கொடுக்க தேவையில்லை.. பெண் எப்படி மாப்பிள்ளை எப்படின்னு விசாரிக்க மெனைக்கிடத் தேவையில்லை . வெளியில் பார்த்தால் வரதட்சணை டிமாண்ட் பண்ணுவாங்க அது கூட பெருசா இருக்காது.. ஏன் என்றால் குடும்பத்தோட சூழல் தெரியும் . எந்த பிரச்சனையும் வராமல் கல்யாணம் நல்லபடியா முடியணும்னு எந்த பயமும் இல்லாமல் இயல்பாவே அங்கு ஒரு ஜாலியாவே நடக்கும். சொந்தத்தில் நடக்கிற திருமணம்

2. உறவுகள் அருந்து போகாமல் தொடரும் . கொஞ்சமா தூரம் போற மாதிரி பட்டும் படாமல் இருக்கிற மாதிரி தெரிஞ்சா அங்க ஒரு சம்பந்தம் பண்ணிட்டோம்னா நெருக்கமாயிடுவாங்க.. புதுசா ஒரு கம்பெனியை தொடங்கி அதை பிக்கப் பண்றதுதுக்கு எவ்வளவு காலம் எடுக்கும் கஷ்டமெடுக்கும்.. ஏற்கனவே இருந்த கம்பெனிய டெவலப் பண்றது அவ்வளவு கஷ்டமா இருக்காது . இதுதான் சொந்தத்தில் நடக்கிற திருமணம் . உறவுகள் மேற்கொண்டு நெருக்கமாகும்

3. சொத்து வெளியில் போகாது .. ரொம்ப பேர் சொந்தத்தில் முடிக்க ஒரு காரணமாகவும் இது இருக்கு. எனத் திருமணம் அதுக்கு பின்னாடி சொத்து பங்கு பாகப்பிரிவு வரும்.. கஷ்டப்பட்டு சம்பாதித்து சொத்து வெளியில போகவா ன்னே சில பேர் சொந்தத்தில் முடிப்பாங்க. சொத்துக்கள் காக்கப்படுகிறது .

4. மணமக்கள் இடையே புரிதல் ஏற்கனவே வந்திருக்கும்.. பெரிய பிளஸ் இது .. ஏற்கனவே தெரிஞ்சவங்க எப்படியானவங்கன்னு நமக்கும் தெரியும். வாழ்க்கையோட மிகப்பெரிய ரிஸ்க இது குறைக்குது .. ஏன்ன கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு மாதிரியும் பின்னாடி அவங்களோட ஒரிஜினல் வேற மாதிரியும் இருக்கிறது பார்க்க முடியும்.. சொந்தத்தில் கல்யாணம் பண்றதுல அதுக்கு வேலையில்லை.

5. பெண்ணைப் பெற்றவர்களின் பார்வையில் பெண்ணுடைய எதிர்காலத்துக்கு ஒரு பாதுகாப்பு இருக்கும். எல்லாமே சொந்தம் தானே னு.. இது அவங்களோட மிகப்பெரிய அமைதிக்கு வழி. எதுனாலும் பேசி சரி பண்ணிக்கலாம் . இது எப்படின்னா ஒரு சொந்தக்காரன் கல்யாணத்துல பந்தில உட்கார்ந்தது போல .. அங்க சில அனுகூலம் இருக்கும். இரண்டாவது சாப்பாடுக்கு குஸ்கா வைக்க தேவையில்லை .. உரிமையா பிளேட்டே வாங்கிடலாம். இல்லையா.. இது உறவுகளில் பெண் எடுப்பதில் பெண் கொடுப்பதில் உள்ள அனுகூலம். 

பாதகங்கள்  : 

1. மதிக்கிறாங்களா இல்லையானே தெரியாது . கல்யாணமே வாழ்க்கையோட இன்டர்வெல் தான். அதுக்கப்புறம் நம்ம லைஃப் வேற ட்ராக்ல போகணும் . அதுல நமக்கு முதலில் மரியாதை வரும் . ஆனால் சொந்தத்தில் எடுக்கிறதால மதிக்கிறாங்களா இல்லைானே வித்தியாசம் தெரியாது.. நீங்க மரியாதையை எதிர்பார்க்கலாம் ஆனா அவங்களுக்கு இவன் தானேனு இருக்கும்.. எவ்வளவு மதிக்கிறாங்கனு சீரியஸான டைம்ல தான் தெரியும். வெளி மாப்பிள்ளைகளுக்கு உள்ள மரியாதை சீரியசான தருணங்களிலும் போகாது. 

2. புதிய சொந்தங்கள் வராது.. பழைய சொந்தங்களே அப்படி சுத்திக்கிட்டு இருக்கும். சொந்தங்கள் வாழ்க்கையோட பெரிய பலம் . தலைக்கட்டு வச்சு சமூகத்தில் பெரிய மதிப்பே இருக்கு. அதுக்கு வாய்ப்பு இல்லாமல் போகுது  

3. இரண்டு குடும்பத்துக்குள்ள தகராறுனா அந்த பெண் தலை உருளும்.. சிலர் அந்த குடும்பத்தை பழிவாங்க இந்த பிள்ளையை விட்டு விட்டு அனுப்புவாங்க.. இல்ல முகம் கொடுப்பதை தவிர்ப்பாங்க . இது போல பிரச்சினைகள் உண்டு.. குடும்பத்துக்குள்ள எங்கேயோ யாருக்கோ சண்டைனா இங்க கணவன் மனைவிக்குள்ள தகராறு ஆகும் 

4. சொந்தத்தில் பெண் கொடுக்குறதுல எந்த அளவு சேப்டியோ அந்த அளவு சண்டையும் ஈஸியாக வரும்.. ஏன்ன விட்டுக் கொடுப்பதில் தான் உறவுகளோட பலம் இருக்கு .. இத போட்டு பேசவா வேண்டாமா னு தவிர்க்கிறதும் பல சண்டைகள் வராமல் இருக்க காரணம் .. ஆனா தெரிஞ்ச ஆட்களிடம் சின்ன சின்ன விஷயத்துக்கு கூட பேச்சு வளரும். அது என்ன செய்யும்னா இல்லாத சின்ன பிரச்சனையை கூட பெருசா ஊதிவிடும்.. கடைசில டைவர்ஸ் வர போச்சுன்னா திருமணத்துக்கு முன்னாடி இருந்த அந்த உறவே அத்துப் போயிடும். வெரி டேஞ்சர் .

5. உறவினர்களுக்குள் திருமணம் செய்தால், குழந்தைகளுக்கு மரபணு கோளாறுகள் (எ.கா., தலசீமியா, டவுன் சிண்ட்ரோம்) ஏற்படும் வாய்ப்பு 25-50% இருப்பதாக செய்தி .  

இது சொந்தத்துல பெண் கொடுப்பதால் பெண் எடுப்பதால் வர சாதக பாதகங்கள். 

---------------------------------------------------------

அல்மஹ்ர் முஸ்லிம் மேட்ரிமோனி

மணமகளுக்கு முற்றிலும் கட்டணம் இல்லை

Whatsapp : 9789271238

----------------------------------------------------------