பகுதி 17 : வெளிநாடு தான் பிழைக்க வழி என்றால் இப்படி பண்ணுங்க


நடிகர் நடிகைகளில் சில பேர் உண்டு .. ஒரு காலத்தில் நிறைய வாய்ப்புகள் வரும் பணம் வரும். ஆடம்பரமா பகட்டா இருப்பாங்க.. திடீர்னு காணாம போயிருவாங்க .. வாய்ப்புகள் எதுவும் இருக்காது . கடைசில பாத்தா கஞ்சிக்கே கஷ்டப்பட்டு இருப்பாங்க.. சினிமா துறையில் இப்படி நிறைய பேரை பார்க்கலாம் .. காரணம் என்னன்னா பணம் வரும்போதே அதை எதிர்காலத்துக்காக பயன்படுத்தணும் என்கிற எண்ணம் இல்லாதது. ஏடிஎம் மிஷின்ல இருந்து ஏதோ ஒன்னு பால்ட்டாகி பணம் வரிசையா வெளில வந்துகிட்டே இருந்தா எப்படி இருக்கும்.. பணத்தை எங்க தூக்கி எறியலான்னு தான் இருக்கும்.. அதான் பணம் வந்துகிட்டு இருக்கு இல்ல பயன்படுத்துவோம்னு நிகழ்காலத்த ஆடம்பரமா செலவு செய்வாங்க.. திடீர்னு பணம் வர்றது நிக்கும் போது உலகம் புரிய ஆரம்பிக்கும். ஏதாவது ஒரு சேனல் பேட்டி எடுப்பாங்க தத்துவமா சொல்லிட்டு இருப்பாங்க.. 

இதே தான் வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் நிலையும்... அவர்கள் வெளிநாட்டில் இருக்கும் வரை அவர்களுக்கு மாதம் மாதம் கம்பெனியில் பணம் வருவது உறுதி.. அந்த பணத்தை என்ன செய்வாங்க பிள்ளைகள் படிப்புக்கு செலவழிப்பாங்க.. பெண் பிள்ளையா இருந்தா நகைகள் எடுக்க பயன்படுத்துவாங்க .. கல்யாணம் செஞ்சு வைப்பாங்க .. வீடு முக்கியம்ல்ல அதனால வீடு கட்டுவாங்க .. இது எல்லாமே முக்கியம் தான் ஆனால் பாத்தீங்கன்னா இது எதுவுமே அவர்கள் எதிர்காலத்தில் வந்து வீட்டில் அமர்ந்து சம்பாத்தியம் வரும் அளவுக்கு செயல் கிடையாது .. பிள்ளைகளைப் படிக்க வச்சா அவன் படித்து அவன் சம்பாதிப்பான்.. ஆனா அதுக்கு எவ்வளவு வருடங்கள் எடுக்கும் .. அந்த வருஷம் முழுக்க அவர் வெளிநாட்டில் இருக்கணும் .. அதுக்கப்புறம் சம்பாதிச்சு தாய் தந்தை வச்சு காப்பாற்றினால் உண்டு.. ஆனா எத்தனை பேர் வச்சு காப்பாத்துறாங்க ? அப்படி அமையாத நிலையில் தந்தை கடைசி வரை வெளிநாட்டிலேயே இருப்பார்கள்.. தன்னோட அடிப்படை குடும்ப வாழ்வை இழந்து ஆரம்பத்தில் குழந்தை குடும்பத்திற்காக இருந்தார் பிறகு தனக்காக இருப்பார். ஒருவரோட வாழ்வு அப்படியே அஸ்தமனம் ஆகிறது 

யாரெல்லாம் வெளிநாடு போவார்கள் அப்படின்னா உள்நாட்டில் பிழைக்க வாய்ப்பு இல்லாதவர்கள்.. வாய்ப்பு இருக்கும் ஆனால் வருமானத்துக்கு அதிகமான தேவைகள் இருப்பவர்கள் .. இங்க வேலை பார்க்கிறது அங்க போய் பார்த்தா பணம் அதிகமாக கிடைக்கும் என்று விரைவாக பணம் ஈட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் .. இவர்கள் வெளிநாடு செல்வதை தேர்ந்தெடுப்பார்கள்.. இவர்களில் திருமணம் ஆகாத இளைஞனாகவும் இருப்பார்கள் .. திருமணம் ஆகி குடும்ப பொறுப்பில் உள்ளவர்களும் இருப்பார்கள் ..

வெளிநாட்டு வாழ்வை வெரும் அன்றைய தேவைக்காக பயன்படுத்தாமல் எதிர்காலத்துக்காவும் பயன்படுத்த வேண்டும் . நம்மளோட சொந்த நாட்டு குடும்ப வாழ்வையும் இழக்கக்கூடாது.. வெளிநாடு கதி என்று இல்லாமல் அதை பயன்படுத்த வேண்டும்.

என்ன செய்யலாம்னா.. வருசத்துக்கு ஒருமுறை ஒரு மாசம் லீவுல வந்துடுங்க. குடும்பத்தை விட்டு ரொம்ப காலம் பிரியுற மாதிரி இருக்காது. சிலபேர் ரெண்டு வருஷம் மூணு வருஷம் இருந்துட்டு மொத்தமா மூணு மாசம் லீவுக்கு வருவாங்க... இப்படி செய்யாதீங்க .. அந்த மூணு மாசம் லீவு முடியும்போது மறுபடியும் ஒரு மூணு வருஷமானு இருக்கும்.. ஒரு வருஷம் போதும் பிரிவு .. இப்பல்லாம் காலங்கள் வேகமாக போகுது.. முன்னாடி எல்லாம் தெருவுக்கு ஒரு வீட்டுல டெலிப்போன் இருக்கும்.. அதுக்கு போன் பண்ணுவாங்க இவங்க ஓடி போய் பேசுவாங்க.. இப்ப வீடியோ கால் வர வந்துட்டு.. காலங்களும் ரொம்ப சுருங்கிருச்சு .. அதனால ஒரு வருஷத்துக்கு ஒருமுறை வந்து போனால் குடும்ப உறவுகள்ல ரொம்ப தூரம் இருக்காது. 

எத்தனை வருஷம் வேண்ணாலும் அங்க இருந்து சம்பாதிங்க. சம்பாதிக்கிறத உங்களின் கடன், வீட்டுதேவைகள் போக மிச்சம் வருவதை இங்கு ஒரு தொழிலில் முதலீடு செய்யுங்கள். ( நம்பகமான நட்பு, உறவு மூலம் ).. இதுதான் கொஞ்சம் ரிஸ்க் ஆனது .. நம்பிக்கைக்கு உரியவரை தேர்ந்தெடுத்து நம்ம பணத்தை அவங்க கிட்ட கொடுக்க வேண்டி வரும். அவங்க இங்க இருந்து பிசினஸ் பாத்துக்குவாங்க.. 

 ஒரு தொழில் என்றால் அது பிக்கப்பாக காலம் எடுக்கும். அந்த காலத்தில் நீங்கள் அங்கிருந்து சம்பாதிப்பீர்கள். இப்ப நீங்க உங்க குடும்பத் தேவைக்கும் காசு கொடுப்பீங்க .. உங்களுடைய எதிர்காலத்துக்கும் நீங்கள் இங்க விதை போடுவீங்க  

மாசம் மாசம் கொஞ்சம் கொஞ்சம் வருமானம் வந்தாலும் போதும் அதுக்கு வருடங்கள் போகும்போது அதிகரிக்கும்.. ஒரு காலகட்டம் வரும் உங்களின் தொழிலில் மாதாந்திர வருமானம் உங்களின் அந்த வெளிநாட்டு சம்பளத்தை விட அதிகமாகும் . வருடங்களை தொழில்ல கொடுத்திருக்கும் போது அது தொடர்ந்து உறுதியான வருமானமாகவும் இருக்கும் ... அப்போது நீங்கள் அந்த வெளிநாட்டு வருமானத்தை விட்டு விட்டு இங்கு வந்து செட்டில் ஆகி விடுங்கள்

 பல பேர் செய்ற தப்பு வெளிநாட்டிலிருந்து சம்பாதிப்பதைக் கொண்டு இங்கு இடம் வாங்கி வீடு கட்டுவார்கள்.. வீடுங்கிறது பெரிய முதலீடு மூடக்கம். அத நீங்க வெளிநாட்டில் சம்பாதித்த சம்பாத்தியத்தை கொண்டு இங்கு செய்துவிட வேண்டாம்.. உங்கள் 

தொழில் உங்களுக்கு தரும். நீங்க உங்க வெளிநாட்டு சம்பளத்தை பலரும் வீடு கட்ட என்று போடும்போது தான் வருடக்கணக்கில் வெளிநாட்டில் இருக்கிற மாதிரி ஆகுது.

இப்படி நீங்க வெளிநாட்டுக்கு போங்க சம்பாதிங்க ஆனா அத பயன்படுத்துங்க. இங்கேயும் குடும்பத்தோடு தொடர்பில் இருப்பீங்க.. உங்களுடைய எதிர்காலமும் இங்கே விதைக்கப்பட்டிருக்கும்.

வெளிநாட்டுல வேலை செய்றவங்க பண்ற இன்னொரு தப்பு ... அங்க வேலை பாக்குறது பிடிக்கல இதுவரை சேர்த்து வைத்த பணத்தை வைத்து சொந்தமாக ஏதாவது ஊரிலேயே பிசினஸ் பண்ணுவோம் என்று கிளம்பி வர்றது.. தொழில்ல அனுபவமே இருக்காது .. முதலீடு பூரா அதுல போயிருக்கும் .. மாசம் மாசம் வீட்டு செலவுக்கு வேற பணம் வேணும் .. அனுபவம் இல்லாததால பிஸ்னச தொடர்ந்து ரன் பண்ண முடியாது .. எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சுட்டு திரும்பவும் வெளிநாட்டுக்கு பயணப்படுவாங்க.. நிறைய பேர் பண்ற தப்பு இதுதான் .. இப்படியும் வெளிநாட்டில் நிரந்தரமாக இருக்கிறது

---------------------------------------------------------

அல்மஹ்ர் முஸ்லிம் மேட்ரிமோனி

மணமகளுக்கு முற்றிலும் கட்டணம் இல்லை

Whatsapp : 9789271238

----------------------------------------------------------