பகுதி 14 : வரன் தேடலில் செய்யும் 10 தவறுகள்


எல்லாருமே வெளியில கடையில டீ குடித்திருப்போம்.. எல்லா கடையிலுமே மாஸ்டர் தொழில் தெரிஞ்சி டீ போடுவதில்லை. வாங்கி குடிச்சிட்டு தெரியாத்தனமா வந்துட்டோம்னு நினைப்போம்.. இழப்பு என்ன டீ காசு பத்து ரூபாய் . அந்தக் கடைக்கு போகாதன்னு சொல்ல ஆள் இல்லாததால நேரடியா அந்த அனுபவத்தை உணர்றதால வர்ற இழப்பு அது.. இதே போல தான் திருமணம். அனுபவம் அடைகிற அளவு எல்லா குடும்பத்திலும் திருமணம் நிறைய முறை வராது.. ஆனா செய்யுறத முதல் முயற்சிலையே சரியா செஞ்ச ஆகணும்... அதைத் தவற விடும் போது வர்ற இழப்பு தான் பொருந்தாத வரனோடு மனக்கஷ்டத்தோடு வாழ்க்கையை நடத்துவது, பொருளாதார இழப்பு ஏற்படுவது, விவாகரத்து , மன உளைச்சல், வாழ்க்கையின் மீதான விரக்தி, இரண்டாம் தாரம் என்கிற தகுதி இறக்கம். அங்க டீக்கு பத்து ரூபாய் தான் போகுது. இங்க வாழ்க்கையே போகுது.. இந்த அடிப்படையில எங்கெல்லாம் தப்பு விட்றதால வாழ்க்கை சிக்கல் ல போய் முடியுது.. அதையெல்லாம் தெரிஞ்சு சரி செஞ்சுட்டா நல்ல ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கலாம் 

முதல்ல பார்க்க அழகாய் இருக்கிறதும் நமக்கு பிடிக்கிறது எல்லாம் நமக்கான வரனா? எல்லா நிலத்துலையும் விவசாயம் பண்ணிட முடியாது . விளைச்சலுக்கு ஏற்ற மண் ரகம் உண்டு . எல்லா ரத்தமும் எல்லாருக்கும் ஏத்திட முடியாது . அதுலயும் க்ரூப் உண்டு . அதேபோல வரன் தேடுறப்ப பார்க்க அழகா இருக்குறதும் நமக்கு பிடிக்கிறது எல்லாம் நமக்கான வரன் அல்ல . வாழ்க்கை அதையும் தாண்டியது.. தெரிஞ்சிக்கோங்க முதல் தவறு. 

காலத்தை தவறவிடுதல்

ஏதாச்சும் ஃபங்ஷன்ல கலந்து இருக்கும் போது பெரிய ஆட்கள் கேப்பாங்க அடுத்து எப்பப்பா உனக்கு அப்படின்னு.. அத கேட்கும் போது சந்தோஷமா இருக்கும்.. இப்ப என்ன அவசரம் கொஞ்சம் காலம் போகட்டும் ன்னு சொல்ல ஒரு மதிப்பா இருக்கும் ... ஆனா அந்தக் காலம் போகும்போது அடுத்து அந்த கேள்விய கேட்க கூட நாதி இருக்காது.. அந்தக் கேள்வியை அடுத்த ஜெனரேஷன் நோக்கி கொண்டு போய் விடுவாங்க.. அப்பதான் அந்த வெறுமை தெரியும் காலத்தை தவற விட்டுட்டோம்னு.

வரன் என்பது தனி ஒரு உலகம் .. அந்த உலகத்துல ஒவ்வொரு வருசமும் மாசமும் போட்டி வரன்கள் வந்துகிட்டே இருப்பாங்க . பருவ வயதை அடைவது ஒன்று திருமண வயதை அடைவது ஒன்று .. பருவ வயது அடைந்த பின் திருமண வயது வரும் . பெண்ணா இருந்தால் 18 .. ஆணாக இருந்தால் 23 ன்னு வச்சிப்போம் .. நீங்க அப்பவே அந்த உலகத்துல நுழைந்தால் உங்களுக்கான வாய்ப்புகள் பிரகாசம் .. ஏன்னா அந்த உலகத்துல நீங்க தான் Fresh .. சில பேர் நினைப்பாங்க இன்னும் கொஞ்ச காலம் போகட்டும் இன்னும் கொஞ்சம் காலம் போகட்டும்னு அர்த்தம் இல்லாம திருமணத்தை ஒத்தி வச்சுட்டு இருப்பாங்க . இவங்க அந்த உலகத்துக்குள்ள வரும்போது இவர்களை விட இளம் வயதினர் ஏற்கனவே உள்ளே வந்து இருப்பதால் தேர்ந்தெடுக்க நினைக்கிறவர்கள் வயதில் குறைந்தவர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஆயிடும் . வயது அதிகமானவர்கள் தேங்கிக்கிட்டே இருப்பார்கள் . அதனால காலா காலத்துல செய்ய வேண்டியதுல கல்யாணம் முக்கியமானது . நமக்கு தகுதியான வரனை நாம செலக்ட் செய்யலாம் .. காலம் தாழ்த்தும் போது நமக்கு தகுதியான வரன் நம்மை தேர்ந்தெடுக்க யோசிக்கிற நிலை ஆயிடும் . இதனால வரன் அமையாது என்று இல்லை . நமக்கேற்ற வரன் நாம விரும்புற வரன் அமைய முடியாம போக வாய்ப்பு ஏற்படும் . அதனால காலத்தை தவர விடாமல் அந்தந்த நேரத்துலையே களத்துக்கு வந்துடனும் .. இது முதலாவது

அந்த நேரத்தில் தொடங்குவது

முதல்ல லேட் ஆக்குவார்களா இது அதுக்கு ஆப்போசிட் .. ஒரு மாசத்துல என் பையனுக்கு பொண்ணு வேணும் . பாரின்ல இருக்காரு . வந்து ரெண்டு மாசம் இருந்துட்டு போவாரு .. அதுக்குள்ள முடிச்சிடனும் . ன்னு ஒரு இலக்கு பிக்ஸ் பண்ணி தொடங்குவாங்க . அதாவது அவர்களுக்கு எப்போ தேவையோ அப்போ வரன் தேட தொடங்குவாங்க .. இது தவறானது .. ஏன்னா நாள் இல்லை யாரையாச்சும் முடிக்கணும்னு தான் பார்ப்பார்களே தவிர சிறந்தது தேடவோ அதுக்கான அவகாசத்துக்கோ வாய்ப்பு இல்லை . குறைஞ்ச பட்சம் ஒரு வருசத்துக்கு முன்னாடி இருந்தே தொடங்கணும் . அடுத்த வருஷம் பொண்ணுக்கு கல்யாணம் பண்ற மாதிரி இருக்கு . இப்பவே மாப்ள பார்க்க தொடங்குவோம்னு தொடங்கணும் .. பையனுக்கு அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணுவோம் என்றால் இப்போதே தொடங்கணும் .வரன் பார்குறதுல அவகாசம் ரொம்ப முக்கியம் . நமக்கு ஏற்றது உடனே கிடைச்சிடாது .

எதிர்பார்ப்பை அதிகமா வைக்கிறது

சரியான எதிர்பார்ப்பு இருக்க வேண்டியதன் ஆனா இது அவசியமற்றதா இருக்குறது .. அளவுக்கு மீறி .. இதனால என்னாகும்னா வர்றதை எல்லாம் ரிஜெக்ட் பண்ணி ரிஜெக்ட் பண்ணி கடைசி ஆரம்பத்துல வந்த அந்த வரனையாச்சும் முடிச்சிருக்கலாமே ன்னு நினைக்கிற அளவு வந்து நிக்கும் . ரிஜெக்ட் பண்றதெல்லாம் நம்ம எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுற மாதிரி அமைஞ்சா அது வேற . ஆனா இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் . என்கிற காமடி காட்சி போலத்தான் முதல்ல வந்த பெட்டரான வரனை எல்லாம் அதிக எதிர்பார்ப்பாள ரிஜெக்ட் பண்ணிட்டு கடைசி விற்கப்படும் ங்குற போர்டு மாத்திரம் இருப்பது போல என்ன செய்வாங்க காலம் போயிட்டு இருக்குனு அப்ப அந்த அதிகப்படியான எதிர்பார்ப்புகளை தியாகம் செய்வாங்க . இதை முதல்லயே யோசிச்சி இருந்தா வரணும் போயிருக்காது காலமும் போயிருக்காது . அதனால அதிகமான எதிர்பார்ப்புகள் விசயத்துல கவனமா இருக்கணும்

தனக்கு எப்படியானவர் தேவை என்பதே தெரியாது இருத்தல்

இதுதான் அடிப்படையே ஆனா செய்யுறதில்லை . சம்பந்தப்பட்ட மணமகனிடமோ அல்லது மணமகளிடமோ உனக்கு எப்படிப்பட்ட துணை வேணும்னு கருத்து கேட்பதே இல்லை .. பெரியவங்க நாங்க பார்த்து செய்து வைக்கிறது தான்ன்னு அவர்களோ அல்லது பெரியவங்க நீங்க பார்த்து எது செஞ்சாலும் சரிதான்னு இவர்களோ ... இதெல்லாம் தவறானது . பெரியவர்கள் தன் பிள்ளைக்கு இது சரியா வரும்னு பார்த்து தேடி தருவது தான் அவர்கள் பொறுப்பு . அதை தேர்ந்தெடுக்குறது நிராகரிக்கிறது வரனின் பொறுப்பு . ஏன்னா இவருக்கு தான் தெரியும் தனக்கு எந்த மாதிரி இருந்தா செட் ஆகும்னு . ஏன்னா வாழப்போறது இவருதான் .. அதனால எனக்கு இப்டி இப்படி இருந்தா நல்லாருக்கும்னு சொல்லுங்க .. இப்படி இப்படி இருந்தா எனக்கு வேண்டாம்னு சொல்லுங்க . அதுக்கு ஏற்ற மாதிரி தேர்ந்தெடுத்து கொடுக்க வசதியா இருக்கும் . 

வரன் தன்னை காட்டுறதுல செய்கிற தவறு 

சொல்வார்கள் இல்லையா முதல் கோணல் முற்றிலும் கோணல் . பர்ஸ்ட் இம்ப்ரெஸ்ஸன் . பார்தததுமே ஓகே ன்னு சொல்ற அளவு வேண்டாம் .. பரிசீலனை பண்ற அளவாச்சும் உங்க புகைப்படம் எடுத்து கொடுக்கணும் . நிறைய பேர் செய்கிற தப்பு இதுல தான் . உங்களை நோக்கி அவர்கள் விருப்பங்களை அழைக்கிற உங்கள் ப்ரேசெண்டேஷன் தான் புகைப்படம் . அதுக்குன்னு கொஞ்சமாச்சும் மெனைக்கேடுங்க .. 5 செகண்ட் பார்ப்பார்களா ? புகைப்படத்தை வச்சே வேணும் வேண்டாம்னு முடிவுக்கு வந்துடுவாங்க .. வரன் அமையுறதை கெடுத்து விடுறதுல மிக முக்கிய பங்கு உங்க பிரசெண்டேஷன் ல இருக்கு .. சில பேருட்ட போட்டோ கேட்டால் அவங்க ஸ்டூடியோ போயி போட்டோ பிரிண்ட் எடுத்து வச்சிருப்பங்க இல்லையா .. அதை வீட்டுக்குள்ள வச்சி மொபைல் கொண்டு ஒரு போட்டோ எடுத்து அனுப்புவார்கள் . மிக மோசமா வரனை எடுத்து காட்டுவது அதெல்லாம் . அதுக்குன்னு பகட்டா எடுத்து அனுப்ப தேவை இல்லை .. ஸ்டூடியோ போயி போட்டோ பிரிண்ட் எடுக்கும்போது அதோட டிஜிட்டல் காப்பியையும் வாங்கிடுங்க . யாரும் கேட்டால் வாட்சப்பில் அதை அனுப்புங்க . ஸ்டூடியோ கூட வேண்டாம் மொபைல் போட்டோவே கூட நல்ல ஒரு லொகேஷன் ல வெளிச்சத்துல நல்ல ஆடை உடுத்தி நேர்த்தியாக எடுத்து அனுப்புங்க . சிறப்பா இருக்கும்

தூரத்துல வரனை தேர்ந்தெடுக்குறது

சொல்வாங்க இல்லையா தூரத்துல பொண்ணு எடுத்தால் உன் வாழ்க்கை பயணத்துலையே முடிஞ்சிடும்னு .. பெண்ணை பெற்றவர்களுக்கும் அதுதான் .. அமைஞ்சா போதும்னு வேற மாவட்டத்துக்கு முடிச்சி கொடுக்குறது .. பிள்ளையை பார்குறதுக்கே டிராவல் பிளான் போடணும் .. நல்லதுக்காச்சும் பிளான் பண்ண நேரம் இருக்கும் . கெட்ட நிகழ்வுக்கு உடனே போயாகணும் . கஷ்டம் . குடும்பத்துல பிரச்னை என்ன ஏதுன்னு உடனே போயி பார்க்க முடியுமா ? கஷ்டம் .. முடிந்த அளவு அருகிலேயே வரன்களை தேர்ந்தெடுங்கள் . ஒரே ஊருக்குள் , பக்கத்து ஊர் , ஒரே மாவட்டம் , பக்கத்து மாவட்டம் என .. ஒரு குடும்பத்தில் திருமணம் என்பது புதிய உறவுகளை உருவாக்குவது . புதிய உறவுகள் அருகில் இருந்தால் தான் அடிக்கடி சந்திக்க முடியும் உறவு பலப்படும் . அவசரத்துக்கு சென்று வர முடியும் . பழக்கவழக்கங்கள் ஒத்துப்போக வசதியாகும் . நமது குடும்பத்தில் இருந்து செல்பவர்களும் அருகில் இருந்தால் தான் நமக்கும் மகிழ்ச்சி . நாலு பிள்ளைகள் இருப்பார்கள் குடும்பத்தில் . நாலு பேரும் குடும்பமாக அருகில் அமையும் போது அடுத்த தலைமுறை வலுப்படும் . குடும்ப கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் . நமது நிர்பந்தம் நமக்கான தகுதியான வரன் தொலைவில் தான் என்றால் அது வேறு . நமது முயற்சி அருகில் இருக்குமாறு பார்க்க வேண்டும் .

சரியா விசாரிக்காமல் முடிப்பது

இதுக்கு நிர்பந்தம் காரணமா இருக்கலாம் .. நிறைய வந்து தட்டிகிட்டே போகுது என்கிற அயர்ச்சி .. நல்லவராதான் இருப்பார் ன்னு மனசை நாமளே சாந்தப்படுத்திக்கிறது .. எதிர்ல உள்ளவர்களுக்கு சாதகமான ஆட்கள்ட்ட மட்டுமே கேட்குறது . அவங்க வேற என்ன சொல்வார்கள் ? யாருக்கு நல்லது நாடுவார்கள் ? இதுல இதெல்லாம் விசாரிக்கணும்னு தெரியாமலே விசாரிக்கிறது . இதெல்லாம் விசாரணைல இருக்கணும்னு அடுத்து சொல்வேன் .

கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது

வரன் பார்க்குறப்பவே ஒவொருவரும் சில விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பார்ப்பாங்க .. அழகா இருக்கணும் , வெள்ளையா இருக்கணும் , ஒல்லியா இருக்கணும் , படிச்சிருக்கணும் , பணம் இருக்கணும் , சொந்த வீடு இருக்கணும் , இன்னும் கூட பிறந்தவர்கள் இல்லாமல் இருந்தால் நல்லது .. இப்படி .. ஆனா இது எல்லாத்தையும் விட முக்கியமானது கேரக்டர் தான் . அழகு கலர் பணம் படிப்பு எல்லாம் பார்த்து கல்யாணம் ஆயிடுச்சி .. பிரச்னை வராமல் இருக்குதா ? அப்படி பிரச்சனை வரும்போது என்ன அழகா இருக்காரு என்ன கலரா இருக்காரு எவ்வளோ பணம் வச்சிருக்காரு அப்டினு நினைச்சி அந்த பிரச்னையை கைவிட தோணுதா ? இல்ல .. பெரும்பாலும் திருமணத்துக்கு பிறகு பிரச்னை வருவது கேரக்டர் பொறுத்து தான் .. அந்த நேரம் நாம முன்னாடி முன்னுரிமை கொடுத்த எதுவுமே பெருசா தெரியாது . அப்படினா கேரக்டரை முன்னிறுத்தி தான் வரனை தேர்ந்தெடுக்கணும் . நல்ல குணம் உள்ளவர்கள் அழகா இருந்தா போனஸ் , படிச்சிருந்தா போனஸ் , பணம் இருந்தா போனஸ் .. வாழ்க்கை நல்லா இருக்கும் .

போட்டோ மட்டுமே வைத்து பிக்ஸ் ஆகிவிடுவது

மனசு இருக்கே அது இஷ்டப்படி நாம போனா நம்மை இக்கட்டுல கொண்டு போயிதான் விடும் . போட்டோவை பார்த்து மேற்கொண்டு பரிசீலிக்கலாம் என்கிற அளவு தான் மனசை வச்சிக்கணுமே தவிர கனவு கண்டுட கூடாது . கனவு என்ன செய்யும் அதுதான் வேணும்னு முரண்டு பிடிக்க சொல்லும் .. கடைசில முட்டிகிட்டு நிக்க சொல்லும் .. கன்பார்ம் ஆகுறவரை மனசால பிக்ஸ் ஆயிடவே கூடாது .. பெண்கள் கூட இப்படி ஆகுறதில்லை .. பசங்க தான் . இதனால என்னாகும் வரப்போகிற மனைவிகிட்ட முழு ஈடுபாடு காட்ட இயலாமல் போக வாய்ப்பு . அது வாழ்க்கைக்கு கேடு .

பரிந்துரையை முழுசாக நம்புறது

ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாம்னு ஒரு ஏற்கமுடியாத ஒரு சொற்றொடர் பரவலா பரவி இருக்கு . அதுக்கு அர்த்தம் வேறு கொடுத்தாலும் நிலைமை இதுதான் ... எங்கயாவது பொண்ணு இருந்தா சொல்லுங்க ... பய்யன் இருந்தா சொல்லுங்கன்னு தனக்கு வேண்டப்பட்ட ஆட்கள்ட்ட நம்பிக்கையா பெத்தவர்கள் சொல்வார்கள் .. இவர் ரெண்டுல ஏதாச்சும் ஒருபக்கம் நல்லவிதமா சொல்லி முடிச்சி வைப்பார் . இவரோட நோக்கம் கொஞ்சம் மோசமா இருக்குற இடத்துக்கு நல்ல வாழ்க்கை அமையட்டுமே ன்னு .. ஆனா அதுக்கு அவர்கள் தான் கிடைத்தார்களா ? இப்டி நல்லது நாடி சோலியை முடிச்சி விட்ட நிகழ்வுகள் நிறைய .. என்ன காரணம்னா ரெக்கமண்ட் பண்றவரை மட்டுமே நம்பி முடிவு எடுக்குறது . அதை செய்யவே கூடாது . நாலைப்பின்ன பிரச்சனைக்கு அவரை பொறுப்பு சாட்ட முடியாது . நல்லது செஞ்சது தப்பான்னுட்டு போயிடுவாங்க. 

ஆக இத்தகைய தவறுகளை கண்டறிந்து சரி செய்து கொண்டால் மிகச் சிறந்த வரன் சீக்கிரமே கிடைக்க ஒரு வாய்ப்பு ஆகும்.

---------------------------------------------------------

அல்மஹ்ர் முஸ்லிம் மேட்ரிமோனி

மணமகளுக்கு முற்றிலும் கட்டணம் இல்லை

Whatsapp : 9789271238

----------------------------------------------------------