பொதுவா இளம் வயது பெண்களிடம் எந்த மாதிரி கணவன் எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்கப்பட்டால் என்னை கேரிங்கா பாத்துக்கணும் என்று சொல்ல கேட்கலாம். அழகான ஆண்கள்தான் வேண்டும் என்று எதிர்பார்த்தால் நாட்டுல பாதி பேருக்கு திருமணம் நடக்காது. வசதியான மாப்பிள்ளை தான் வேண்டும் என்று எதிர்பார்த்தால் அதிலும் பாதி பேருக்கு நடக்காது. கணவனே இப்படி இருந்தால் எதிர்கால சந்ததி எப்படி இருக்கும் என்று சிந்தித்தால் நாட்டில் பெரும்பாலான பேருக்கு திருமணம் நடக்காது. அப்படி என்றால் திருமணத்தைப் பொறுத்தளவில் அழகாக வேண்டும் வெள்ளையாக வேண்டும் என்று ஒரு ஆண் யோசிப்பதை போன்று பெண் யோசிப்பதில்லை . அவர் தனக்கான பாதுகாப்பை எதிர்பார்க்கிறார் . அந்தப் பாதுகாப்பு தான் நல்ல படிப்பாகவும் , சம்பாதிக்கும் நல்ல வேலையாகவும் , சொந்த வீடாகவும் எதிர்பார்ப்பாக மாறுகிறது .
இது எல்லாத்தையும் விட ஒரு பெண் முக்கியமாக தன் கணவனிடம் எதிர்பார்ப்பது தன்னை கவனம் எடுத்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான். காரணம் பிறந்த வீட்டிலிருந்து இவர்தான் வெளியிடத்திற்கு வருகிறார். அங்கு தனக்கான மரியாதை கண்ணியம் உரிமைகள் ஆதரவுகள் விரும்புவது இயல்பு . அதை அறிந்து ஒரு ஆண் நிறைவேற்றினால் எந்த சூழலிலும் உங்களை விட்டு பிரிய நினைக்க மாட்டார். உங்களை கொண்டாடுவார் . என்னவெல்லாம் அந்தக் கேரிங் கேட்டகிரியில் வரும் என்றால்..
1. அவரது என்ன ஓட்டங்களை பகிர்ந்து கொள்ள கூடிய அளவு சுதந்திரம். அனைவருமே மகிழ்ச்சி பகிர்ந்து கொள்வார்கள் . ஆனால் ஒரு பிரச்சனைக்குரிய விஷயத்தை அப்படி சுதந்திரமாக சொல்ல முடியாது . சொல்லலாமா வேண்டாமா என்கிற ஒரு வித பயம் இருக்கும். இதை சொன்னால் மேற்கொண்டு பிரச்சனை ஆகிவிடுமோ? ஏற்கனவே இருப்பவருக்கு தடை உண்டாகி விடுமோ ? என்கிற அச்ச உணர்வு இல்லாத அளவு மனைவியிடத்தில் இருத்தல் வேண்டும் . எந்தப் பிரச்சினையும் தீர்வு தருவார் இதைக் கொண்டு ஒரு பிரச்சனையை முன்னெடுக்க மாட்டார் என்கிற உறுதி உங்கள் மீது வரவேண்டும்.
2. மனைவி சொல்ல வருவதற்கு காது கொடுக்க வேண்டும். சொல்லவிடாமல் முடக்கவும் கூடாது , சொல்ல வருவதை கேட்காமல் புறக்கணிக்கவும் கூடாது . என்னவென கேட்டு விட்டு பிறகு ஆதரவோ எதிர்ப்போ காட்டலாம். இது அந்த விஷயத்தைப் பொறுத்தது . ஆனால் அவர் சொல்ல வருவதை நீங்கள் கேட்பது அவருக்கான மரியாதையை பொருத்தது.
3. அவரின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு , ஆலோசனைகளுக்கு ,முயற்சிகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் . குறைத்து மதிப்பிட்டு பேசக்கூடாது.
4. வெளியில் போயிட்டு வரும்போது மனைவியிடம் நீ சாப்டியா என்ற ஒரு வார்த்தை. அது அவர் மீதான அக்கறையை காட்டும்.
5. கொஞ்சம் சோர்வா இருந்தாலும் என்னாச்சு உடம்புக்கு, டாக்டர் கிட்ட போவோமா ன்னு கேட்பதும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் உடனே மருத்துவமனை அழைத்து செல்வதும் வேண்டும்.
6. மனைவிக்கு விருப்பமான நேரம் அவரிடம் செல்வதும் .. மனைவிக்கு விருப்பமில்லாத நேரத்தில் தூரம் போறதும் நீங்கள் அவரை நிந்திக்காததை வெளிப்படுத்தும்.
7. வெளியில் அனுப்பும் போது தனியாக அனுப்பாமல் இருப்பது.. அவர் மீதான உங்களது பாதுகாப்பை உறுதி செய்யும்.
8. வெளியில யார்கிட்டயும் விட்டுக் கொடுக்காமல் இருப்பது.. சில பேர் பொதுவெளியில் மனைவியைப் பிறர் பேசுவதை வேடிக்கை பார்ப்பார்கள். அது தாயோ, சகோதரிகளோ.. இன்னும் தவறான தகவல்களை சொன்னால் கேட்டுக் கொள்வார்கள். அவ்வாறு இல்லாமல் கடினமான நேரங்களில் உறவுகளிடமும் பிரச்சனை வராமல் மனைவி பக்கம் நிற்பது.
9. கண்டிக்கும் சூழல் வந்தால் தனிமையில் கண்டிப்பது.. பலரும் மனைவியை பொதுவில் பிறர் பார்க்க திட்டுவார்கள் கண்டிப்பார்கள். தவறு செய்திருந்தாலும் தனிமையில் அழைத்து கண்டிப்பது. நமது கடையில் வேலை பார்ப்பவர்களுக்கு கூட அவர்களின் தவறில் அவரின் கண்ணியம் கெடாமல் திருத்த வேண்டும். மனைவிக்கு கொடுக்காமல் இருக்க முடியுமா ?
10. எந்தப் பிரச்சனையிலும் குறையை வெளிப்படுத்தாமல் இருப்பது.. சமையலில் தவறுகள் வரும்.. இன்னபிற நடைமுறைகள் பழக்க வழக்கங்களில் தவறுகள் வரும். தவறுகள் அனைவருக்கும் இயல்பு. தவறுகளையே சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கக் கூடாது. அது அவரின் மன ரீதியான பாதிப்பை உண்டாக்கும்.
11. பிறரோடு ஒப்பிடாமல் இருப்பது .. ஒப்பீடு யாருக்குமே வலிக்கத்தான் செய்யும். ஐந்து விரலும் சமமில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் சிறந்ததாக இருப்பார்கள்.. பிறருடன் ஒப்பீடு உங்களை அவரைவிட்டும் தூரமாக்கும்.
12. பொருளுக்கு, பணத்துக்கு ஏதாவது இழப்பு ஏற்படுத்தி சிறு சிறு பிழைகள் செய்து பயந்து இருக்கிற நேரத்துல அதெல்லாம் ஒன்னும் இல்லன்னு ஒரு ஆறுதல். உங்களை நினைத்தாலே அவருக்கு நிம்மதி பிறக்கும்.
13. மாமியார் மருமகள் பிரச்சனை, நாத்தனார் பிரச்சனை குடும்பத்தில் நிறைய வரும்.. அதுபோல நேரத்தில் நீதமாக இருத்தல்.. நாம சரியா இருந்தா அவர் நீதியா பேசுறது நமக்கு சாதகமாக இருக்கும் ன்னு எல்லாருமே சரியாய் இருப்பாங்க
14. வாக்குவாதம் வரும் சமயம் கூட கண்ணியம் குறையாமல், ஏக வசனத்தில் அழைக்காமல் ஒழுங்குடன் அவருடன் தர்க்கிப்பது.
15. அவர் உடலுக்கு முடியாமல் இருக்கும் சமயம் வீட்டு வேலைகளை குறைப்பது, வீட்டு வேலைகளில் உதவுவது, சாப்பாடு வெளியில ஆர்டர் பண்ணிக்கலாம்னு சொல்வது என அவரின் சுமையை குறைப்பது.
16. பல்வேறு வேலைப்பளுகளுக்கு இடையில் அவருக்காக ஒரு சிறிய தனிமையை ஒதுக்கி கொடுப்பது. அன்றைய தின நிகழ்வுகளை அவரிடம் கேட்பது.
17. அவரது தனிப்பட்ட தேவைக்கு யாரிடம் கேட்காத அளவுக்கு அவருக்கு சிறிதளவு பாக்கெட் மணி கொடுத்து வருவது. அவர் வேலை செய்பவராக இருந்தால் அவரது சம்பளம் விவாகரங்களில் அவர் விரும்பாத நிலையில் தலையிடாமல் இருப்பது. அவரது சேமிப்புகளிலும் தலையிடாமல் இருப்பது
18. மனைவியின் உறவுகளுக்கு மதிப்பளிப்பது .. அவரின் தகப்பனை மரியாதை இல்லாமல் பேசுவது, அவரது உறவுகளை அண்ட விடாமல் வைப்பது இதெல்லாம் கூடாது.
19. எந்தப் பிரச்சனைகளிலும் அவரது ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது.. ரியல் ஜென்டில்மென்
20. சின்ன சின்ன விஷயங்களிலும் நல்ல விஷயங்களை பாராட்டுவது.. இது இவரை ஊக்கப்படுத்தி மேற்கொண்டு சிறப்பாக செயல்பட வைக்கும்.அவரின் அந்த வெற்றிக்கு நீங்களும் காரணமாவீர்கள்.
இவ்வாறு அவரின் உடலுக்கு பாதுகாப்பு , மானத்துக்கு பாதுகாப்பு , மன நிம்மதிக்கு பாதுகாப்பு , மரியாதைக்கு பாதுகாப்பு என அனைத்து வகையிலும் அவருடைய பாதுகாப்பை நீங்கள் உறுதி செய்வது தான் உண்மையான கேரிங் !
---------------------------------------------------------
அல்மஹ்ர் முஸ்லிம் மேட்ரிமோனி
மணமகளுக்கு முற்றிலும் கட்டணம் இல்லை
Whatsapp : 9789271238
------------------------------------------------------------