சுகர் நோய் இருக்கிறவங்களுக்கு இனிப்பு மேல ஆசை இல்லாம இருக்காது... சாப்பிட தான் தோணும் .. ஆனா இனிப்பு அவங்களுக்கு செட்டாகாது.. பிரச்சனை ஆக்கிடும் .. மழையில குளிக்கிறதுக்கு யாருக்குத்தான் ஆசை இருக்காது... ஆனா காய்ச்சல் உள்ளவங்களுக்கு அது செட் ஆகாது .. குடிச்சு குடிச்சு உள்ள உள்ள ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாமே போயிருக்கும்.. ஆனால் குடிக்கிறது அவருக்கு வெறுப்பு கிடையாது .. அவர் உடலுக்கு இனி அது செட்டாகாது அது அவரை முடித்துவிடும்.. மாரடைப்பு அபாயம் உள்ளங்களுக்கு கொழுப்பான உணவுகள் மேல் பிரியம் இல்லாமல் இருக்காது.. ஆசைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மாரடைப்பு வந்துரும் ... இவ்வளவுதான் விஷயம் ..
பிடிச்சிருக்குகிறது என்பது ஒரு கொக்கியில் உள்ள புழு.. ஆனா செட் ஆகிறது என்பது அந்த கொக்கி . நீங்கள் அந்த கொக்கியை கவனிக்காமல் புழுவை மட்டும் பார்த்தால் சிக்கிக் கொள்வீர்கள். அப்படித்தான் பலரும் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். மீனுக்கு கொக்கி செட்டாகாதுன்னு தெரிந்திருந்தால் அது விருப்பத்திற்குரிய புழுவுக்கு முன்னுரிமை கொடுக்காது. மீனோட விருப்பத்தை வைத்து தான் மீனை பிடிக்கிறாங்க
எத்தனையோ பேர் காதலிச்சு கல்யாணம் பண்றாங்க .. வீட்டுல பார்த்து பிடிச்சு கல்யாணம் பண்றாங்க.. கல்யாணம்னாலே ஆசையா தானே பண்ணுவாங்க .. ஆனா அவ்வளவு ஆசைப்பட்டு பண்ணின கல்யாணம் பின்னாடி இவங்க வேண்டவே வேண்டாம்னு விவாகரத்தும் ஏன் நடக்குது .. காரணம் செட்டாகல.. அதுதான்.. பிடிச்சிருக்கிறது வேற செட் ஆகிறது வேற .. இங்க ஒரு பெண்ணை அல்லது ஒரு பையன போட்டோல பார்க்குறீங்க அல்லது நேர்ல பாக்குறீங்க அந்த நேரம் உங்களுக்கு பிடிக்குது என்பது மட்டும் தான் உண்மை.. ஆனா அவர் உங்களுக்கு செட்டாவாரா இல்லையா என்பது அப்ப தெரிய வாய்ப்பே கிடையாது.
விவாகரத்தில சிக்கிற ஆட்கள் பெரும்பாலும் போட்டோவை பார்த்த உடனே பிடிக்குது நேர்ல பார்த்த உடனே பிடிக்குது னு தன்னுடைய ஆசைக்கு திருமணம் செய்தவர்களாகத்தான் இருக்கும் .. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கும்.. எந்த மாதிரி இருந்தா நாம அட்ஜஸ்ட் பண்ணி வாழலாம் .. எந்த மாதிரி போனால் நாம் அட்ஜஸ்ட் பண்ணவே முடியாது ன்னு அவரவருக்கு தெரியும் .. அல்லது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெரியும் .. தன் பையனுக்கு தன் பிள்ளைக்கு இதுபோல இதுபோல இருந்தால் தான் செட் ஆகும் என்று..
அப்ப ரெண்டு விஷயத்தை எடுத்துக்கங்க முதல்ல செட் ஆகணும் .. அந்த செட் ஆகிற வரன்கள் சில பேர் இருப்பாங்க.. அவங்கள்ல ஒருத்தர் நமக்கு பிடிக்கணும். செட் ஆகுற கேரக்டர்ல சூழல்ல ஒரு நாலு பேர்.. அதுல நமக்கு பிடிச்ச மாதிரி யார் இருக்கிறார்கள் அப்டி தேர்ந்தெடுத்தால் உங்களின் மன வாழ்க்கை , உங்கள் பிள்ளைகளின் மன வாழ்க்கை மகிழ்ச்சிக்குரியதாக மாறும்.
வேலைக்கு செல்லும் பெண்கள்
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு செட் ஆகும் வரன்கள் எப்படி இருக்க வேண்டும் என்றால் பணத் தேவையுடைய குடும்பமாக இருக்க வேண்டும். அப்படினா தான் அங்கு போகிற பெண்ணுக்கு மதிப்பு இருக்கும்.. பணம் ஏற்கனவே இருக்குன்னா அங்க வேலைக்கு செல்ல வேண்டிய தேவை இல்லாமல் போகும். அது கருத்து வேறுபாடை கொண்டு வரும்.
வேலைக்குப் போகிற பெண்கள் குடும்பம் நிறைந்த கூட்டுகுடும்பமா தேர்ந்தெடுக்கணும் . காரணம் நீங்க வேலைக்கு போய்ட்டு நீங்களே வந்து வீட்டு வேலைகளை பார்த்துட்டு இருந்தா வேலைக்காகாது ... நாளப்பின்ன குழந்தைகள் பிறக்கும்போது பொறுப்பா கவனிக்கிறதுக்கு குடும்பம் வேணும் .. பத்திரமா விட்டுட்டு வேலைய பார்க்கலாம்.
பையனோடது கூட்டுக்குடும்பம் இல்லை .. தாய் இனியும் வீட்டு வேலை பாக்குற அளவு இல்லை என்றால் வேலைக்கு போகிற பெண் செட் ஆகாது . தேர்ந்தெடுப்பதை விட்டும் தவிர்க்கணும்.
நெத்தி கேரக்டர்
நெத்திக்கு நெத்தி செட் ஆகாது.. பார்க்க நல்லா இருப்பாங்க படிச்சி இருப்பாங்க நல்ல குடும்பமா இருக்கும் கட்டிவச்சுருவாங்க.. ஆனா ரெண்டு பேரும் நெத்தியா இருப்பாங்க. தான் சொல்றது தான் சரின்னு. ரெண்டு பேருக்கும் ஒத்து வராது.
அரசு வேலை
அரசு வேலை செய்பவர் இன்னொரு அரசு வேலை செய்பவரை எதிர்பார்பார். இது தகுதிக்கு தகுதி என்கிற ரீதியில் வேணா மேட்ச் ஆகுமே தவிர குடும்பம் நடத்த எந்த அளவு செட் ஆகும்னு தெரியாது.. ஏன்னா அரசு வேலை என்பது விரும்பிய இடத்தில் இருக்காது . ரெண்டு பேரும் வேற வேற மாவட்டமாக இருந்தால் அதுவே தொடர்ந்தால் குடும்ப வாழ்வு இனிக்காது.
கடைக்குட்டி பெண்
வீட்டு வேலையும் செய்யணும்னு பையன் தரப்பிலிருந்து விரும்பினால் கடைசி பெண் செட்டாகாது ஏன்னா கடைக்குட்டிகள் பெரும்பாலும் வீட்டு வேலை செய்து பழக்கம் இருக்காது என்பது ஒரு நம்பிக்கை.. . தேவை என்றால் கேட்டு உறுதிப்படுத்திக்கலாம்
கடைக்குட்டி ஒரு வீட்டுக்கு மூத்த மருமகளா அனுப்புறது அந்த பெண்ணுக்கு கொஞ்சம் சிரமம். காரணம் மூத்த மருமகள் என்பவர் பங்கிடப்படாத வேலையை முழுவதுமாக பொறுப்பு எடுக்கக் கூடியவர். இரண்டாவது மருமகள் வரும்போதுதான் வேலைகள் பங்கிடப்படும். அதனால் இதுவரை வேலை செய்து பழக்கம் இல்லாத ஒரு நபர் திடீரென அனைத்து வேலைகளுக்கும் பொறுப்பாகுவது அவருக்கு கஷ்டமாகும்.
சோசியல் மீடியா
இது ஒரு சோசியல் மீடியா காலகட்டம் .. facebook whatsapp ட்விட்டர் இன்ஸ்டாகிராம் என நிறைய உண்டு.. இதில் ஆக்டிவா பல பெண்கள் உண்டு .. ஆனா அதை விரும்பாத ஆண்களும் நிறைய உண்டு .. ஆனா இதெல்லாம் கல்யாண பேச்சு வார்த்தையின் போது பெருசா தெரியாது. பின்னாடி தெரிய வரும்போது பிரச்சினையாகும் .. ஆக இப்படி விரும்பாதவர்களுக்கு அப்படியானவர் செட்டாகாது
வெளிநாட்டு மாப்பிள்ளை
நீங்க வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் உங்களுக்கு கூட்டு குடும்பம் ஏத்துக்கிற பெண் தான் செட் ஆகும். தனி வீடு பாதுகாப்பானது இல்ல
குடும்பத்தில் மூத்த பெண்
அதே மாதிரி குடும்பத்தில் மூத்த பெண்ணை கல்யாணம் பண்ணுபவர்கள் அந்த வீட்டு நிகழ்வுகளுக்கும் பொறுப்பெடுக்கிற மாதிரி இருக்கும். முன்னிலையில் நிற்கிற மாதிரி இருக்கும் . சோ அடுத்தவங்க விஷயத்திலும் பொறுப்பு எடுக்கக் கூடியவர்கள் மூத்த பெண்ணை திருமணம் செய்வது நல்லது.
கூட்டுப்புழு
குடும்பத்தை விட்டு இதுவரை பிரியாத ஒரு பெண்ணை அடுத்த மாவட்டத்துக்கு கொடுப்பதும் பாதிப்பை ஏற்படுத்தும். முதல் முறை பிரிவு அதுவும் நீண்ட கால பிரிவாக இருக்கும்போது ரசிக்காது.
மாடர்ன் பெண்
இதுவரை சுதந்திரமாக வாழ்ந்த ஒரு பெண்ணை பழக்கவழக்கங்கள் கட்டுப்பாடு கொண்ட ஒரு குடும்பத்தில் திருமணம் செய்து கொடுப்பதும் அவருக்கு செட் ஆகாது.
வசதிகள் அதிகமான நகரங்களில் வாழ்ந்த ஒரு பெண்ணை வசதி குறைவான பகுதியில் திருமணம் செய்து கொடுப்பதும் அசவுகரியத்தை ஏற்படுத்தகூடும்.
இவ்வாறு ஒவ்வொருவருக்கும் அவரவர் குணத்திற்கு ஏற்ப சூழலுக்கு ஏற்ப அவரவருக்கு செட்டாகும் வரன்கள் என்ன என்பதை கண்டறிந்து அதன்படி தனக்கு பிடித்தவரை திருமணம் செய்தால் வாழ்வு சிறப்பாக இருக்கவாய்ப்பு ஆகும்.
---------------------------------------------------------
அல்மஹ்ர் முஸ்லிம் மேட்ரிமோனி
மணமகளுக்கு முற்றிலும் கட்டணம் இல்லை
Whatsapp : 9789271238
----------------------------------------------------------