திருமணம் என்பது ஒரு குடும்பத்தில் நிகழும் மிகவும் முக்கியமான மற்றும் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்று. இது வெறும் இரு நபர்களின் இணைவு மட்டுமல்ல, இரு குடும்பங்களை ஒருங்கிணைக்கும் புனிதமான பந்தமாகவும் பார்க்கப்படுகிறது. பிள்ளைகளுக்கு திருமண வயது வந்தவுடன், பெற்றோர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து, திருமணப் பேச்சைத் தொடங்குகிறார்கள். இது ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாக இருந்தாலும், இந்தப் பயணம் எளிதானது அல்ல; பல சவால்களையும் முடிவுகளையும் உள்ளடக்கியது. முதலில், ஒரு கவர்ச்சிகரமான பயோடேட்டாவை தயாரிப்பது முக்கியமான படியாகும், பின்னர், சரியான வரனை தேடும் பணி தொடங்குகிறது, இதில் உறவினர்கள், தரகர்கள் மற்றும் மேட்ரிமோனி தளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வரன் தேர்வு முடிந்தவுடன், திருமண ஏற்பாடுகளை திட்டமிடுவது அடுத்த பெரிய பணியாக உள்ளது. இவை அனைத்தையும் சிறப்பாக செய்து, மகிழ்ச்சியான மற்றும் நீடித்த குடும்ப வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டியது பெற்றோர்களின் முக்கிய பொறுப்பாக உள்ளது. ஒரு வெற்றிகரமான திருமணம், இரு நபர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, இரு குடும்பத்தின் மகிழ்ச்சியையும் கொண்டதாக இருக்கிறது.
திருமணம்: மகிழ்ச்சியின் தொடக்கம்
திருமணம் என்றாலே மகிழ்ச்சி தான். இன்னும் மகிழ்ச்சி மட்டும் தான். அதில் சம்பந்தப்படும் ஒவ்வொருவருக்கும் தங்களுக்குரிய மகிழ்ச்சியை அது கொடுக்கும்.
1. மணமகன் மற்றும் மணமகளுக்கு: ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கம், திருமணம் சார்ந்த கனவுகள் நிறைவேறும் நாள். தனக்காக ஒரு ஜீவன் தன்னுடன் இணைகிற மகிழ்ச்சி.
2. பெற்றோருக்கு: தங்கள் பிள்ளைக்கு துணை கிடைத்த மகிழ்ச்சி. இனி பிள்ளையின் வாழ்க்கை பொறுப்பு பற்றி கவலையில்லை. பிள்ளைக்கு பொறுப்பெடுக்க ஒருவர் வருகிறார். குடும்பத்தில் புதியதாக ஒருவர் இணைகிறார். குடும்பத்தின் வாரிசுகள் வர இருக்கிற மகிழ்ச்சி.
3. உறவினர்களுக்கு: பல ஊர்களில் பிரிந்து கிடக்கும் சொந்தங்கள் ஒரு நாள் ஒன்று கூடி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு. அது ஒரு கல்லூரியின் ரியூனியன் போல. எங்கோ ஒரு சொந்தத்தில் ஒருவருக்கு நடக்கும் திருமணத்தால் தன்னுடைய உறவுகளை மகிழ்ச்சியுடன் சந்திக்கும் வாய்ப்பு திருமணத்தால் மட்டுமே சாத்தியம்.
4. அழைப்பிதழ் பெறுபவர்களுக்கு : தெரிந்தவர்கள், அறிமுகமானவர்களுக்கு கொடுக்கிற திருமண அழைப்பிதழ் அதை பெறுபவர்களின் மனதில் ஒரு சிறிய மகிழ்ச்சி பிறக்கிறது. அன்றைய தினம் ஒரு நேரம் சுவையான சாப்பாடு கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு!
5. திருமணம் சார்ந்து தொழில் செய்பவர்களுக்கு :
திருமணம் என்பது மணமக்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, அதைச் சுற்றியுள்ள தொழில் சார்ந்தவர்களுக்கும் பொருளாதார மகிழ்ச்சியை அளிக்கும் ஒரு சிறப்பான நிகழ்வாகும். தரகர்களுக்கு அவர்களின் முயற்சிக்கு ஏற்ப கமிஷன் கிடைப்பதன் மூலம் அவர்களின் பங்களிப்பு பலனளிக்கிறது. அதேபோல், மண்டப உரிமையாளர்களுக்கு அவர்களின் இடத்தை பயன்படுத்துவதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது. சமையல் கலைஞர்கள் பலவகையான உணவுகளை தயாரித்து, விருந்தினர்களை மகிழ்விக்கும் பணியில் ஈடுபடுவதன் மூலம் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருமானம் ஈட்டுகிறார்கள். அலங்கார பணியாளர்கள் திருமண மேடையை அழகுபடுத்தி, புஷ்பங்களாலும் விளக்குகளாலும் மிளிரச் செய்வதன் மூலம் தங்கள் கைவண்ணத்திற்கு பலனை பெறுகிறார்கள். இப்படி, திருமணம் ஒரு பக்கம் மகிழ்ச்சியை பரப்பினாலும், மறுபக்கம் பலருக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் பொருளாதார சுழற்சியையும் உருவாக்குகிறது.
இப்படி, திருமணம் சுற்றியுள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. ஒரு வாழைமரம் அதன் அனைத்து பகுதிகளும் பயன்படும் என்று சொல்வார்கள். அதற்குப் பின் திருமணம் தான் அதை சார்ந்த அனைவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. ஆனால், இந்த மகிழ்ச்சி திருமணத்தோடு முடிந்துவிடாமல், வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும்.
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை ஏன் சிலருக்கு மட்டுமே அமைகிறது?
திருமணம் பொதுவாக மகிழ்ச்சியாகத் தொடங்கினாலும், அது எல்லோருக்கும் அதே மகிழ்ச்சியுடன் தொடர்வதில்லை. ஏன்? பல காரணங்கள் உள்ளன:
1. அனுபவமின்மை:
திருமணம் என்பது ஒரு முக்கிய முடிவு. ஆனால், பெற்றோர்களுக்கு இதில் அனுபவம் பெற போதுமான வாய்ப்பு இருப்பதில்லை. ஒரு குடும்பத்தில் சராசரியாக 1-2 பிள்ளைகளே இருக்கிறார்கள். ஒரு சமையலை கூட பலமுறை செய்து பழகினால் தான் சரியாக வரும். ஆனால், திருமணத்தில் முதல் முயற்சியிலேயே சரியான முடிவை எடுக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது.
2. வரன் தேர்வில் குறைவான வாய்ப்புகள்:
பிள்ளைக்கு வரன் பார்க்கத் தொடங்கியதும், தெரிந்தவர்கள் மற்றும் தரகர்கள் மூலம் சில வரன்களை அறிமுகப்படுத்துகிறார்கள். ஆனால், 2-3 வரன்களைப் பார்த்த பிறகு, "இதை விட வேறு என்ன கிடைக்கும்?" என்று அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால், சரியான துணையைத் தேர்ந்தெடுக்க போதுமான வாய்ப்பு கிடைப்பதில்லை.
3. நவீன சிந்தனையும் அவசரமும்:
இன்றைய காலத்தில் மக்களின் மனநிலை மாறிவிட்டது. எல்லாவற்றையும் விரைவாக அடைய வேண்டும் என்ற அவசரம் ஆதிக்கம் செலுத்துகிறது:
- 50 ஓவர் கிரிக்கெட்டை 20 ஓவர்களாக மாற்றிவிட்டோம்.
- YouTube-ல் ஒரு நிமிட ரீல்ஸ் மூலம் எல்லாவற்றையும் அறிய முயல்கிறோம்.
- திரைப்படங்கள் வெளிவந்த ஒரு வாரத்தில் பழையதாகி விடுகின்றன.
இதே அவசர மனநிலையை திருமணத்திலும் பயன்படுத்துகிறோம். "பிடித்திருக்கிறது, உடனே திருமணம் செய்து கொள்ளலாம்" என்று அவசரமாக முடிவெடுக்கிறோம். இதன் விளைவு? விவாகரத்துகள் அதிகரிக்கின்றன.
விவாகரத்தின் விளைவுகள்:
- ஒரு பெரிய இழப்பு : விவாகரத்து என்பது ஒரு தோல்வி. ஒரு 10 ரூபாய் டீயை தவறான கடையில் வாங்கினால், அந்த இழப்பு 10 ரூபாய் மட்டுமே. ஆனால், திருமணத்தில் தவறான முடிவை எடுத்தால், அதன் விளைவு மிகப் பெரியது. வாழ்க்கையே
- மதிப்பு குறையும்: ஒரு பெண்ணுக்கு 21 வயதில் ஒரு வரன் வந்து, அது மறுக்கப்பட்டு, வேறு ஒருவரைத் திருமணம் செய்து 6 மாதத்தில் விவாகரத்து ஆனால், அவரது மதிப்பு முன்பு இருந்தது போல் இருக்குமா? முதலில் விரும்பிய நபருக்கு மீண்டும் பேச முடியுமா?
- சமூக அந்தஸ்து பாதிப்பு: ஒரு நாள் திருமணம் ஆனாலும், அது ஒரு அந்தஸ்தை உருவாக்கி விடுகிறது. ஒரு வருடம் வாழ்ந்து, ஒரு குழந்தை இருந்தால், அந்தப் பாதிப்பு இன்னும் பெரிதாகிறது.
பிரச்சனைகளின் காரணம் தவறான தேர்வு:
பிரச்சினைகளின் மூலம் பலர் திருமணத்தில் தவறான முடிவை எடுக்கிறார்கள், ஏனெனில்:
- வெளிப்புற அம்சங்களை மட்டும் பார்ப்பது: அழகு, பணம், படிப்பு, அந்தஸ்து போன்றவற்றை மட்டுமே அளவுகோலாக வைத்து திருமணம் செய்கிறார்கள்.
- ஆழமாக புரிந்து கொள்ளாமல் இருப்பது: ஒருவரை பிடித்திருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக திருமணம் செய்கிறார்கள்.ஆனால், பிரச்சினைகள் வரும்போது, "இவர் அழகாக இருக்கிறார், பணக்காரர், படித்தவர்" என்று யோசித்து பிரச்சினைகள் தீர்வதில்லை. பிரச்சினைகள் பெரிதாகவே தோன்றுகின்றன.
சிறந்த வரன் தேர்வு: மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடித்தளம்:
சிறந்த வரன் தேர்வு செய்வது, சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்தாலும் பெரிய பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். மேலும், திருமணத்திற்குப் பிறகு பெற்றோர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தாது. சிலர் திருமணத்திற்குப் பிறகு பிரச்சினைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு திரும்பி வந்து, மீண்டும் சுமையை அவர்களுக்கு அளிக்கிறார்கள். இதைத் தவிர்க்க, வரன் தேர்வில் சில முக்கிய விஷயங்களை கவனிக்க வேண்டும்.
வரன் தேர்வில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் :
வரன் தேர்வு என்பது ஒரு திருமணத்தின் அடித்தளத்தை அமைப்பதற்கு மிகவும் முக்கியமான படியாகும். இதை கவனமாக செய்யாவிட்டால், எதிர்காலத்தில் பல சிக்கல்கள் ஏற்படலாம். எனவே, சில முக்கிய அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
- பொருத்தம்: முதலில், இருவருக்கும் இடையே கலாச்சாரம், மதிப்புகள் மற்றும் வாழ்க்கை நோக்கங்களில் பொருத்தம் இருக்கிறதா என்பதை ஆழமாக சரிபார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒருவர் பாரம்பரிய வாழ்க்கையை விரும்பினால், மற்றவர் நவீன வாழ்க்கை முறையை விரும்பினால், பின்னாளில் முரண்பாடுகள் ஏற்படலாம். இதனால், இருவரின் எதிர்பார்ப்புகளையும் முன்கூட்டியே புரிந்து கொள்வது அவசியம்.
- புரிதல்: இரு குடும்பங்களும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். திருமணம் என்பது இரு நபர்களை மட்டுமல்ல, இரு குடும்பங்களையும் இணைக்கும் பயணம். எனவே, இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் மரியாதை அளித்து, புரிதலுடன் நடந்து கொள்ள வேண்டும்.
- நிதி பாதுகாப்பு: பணம் மட்டுமே முக்கியமல்ல என்றாலும், நிதி ஸ்திரத்தன்மை ஒரு வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு அவசியமாகும். வருங்கால துணையின் நிதி நிலைமை, சேமிப்பு பழக்கம் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை அறிந்து கொள்வது முக்கியம்.
- தனிப்பட்ட பழக்கவழக்கங்கள்: ஒருவரின் தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கலாம். புகைப்பிடித்தல், மது அருந்துதல், மனநிலை மாறுபாடுகள் அல்லது பிற பழக்கங்கள் இருந்தால், அவற்றை முன்கூட்டியே அறிந்து கொள்வது பின்னர் ஏற்படும் மோதல்களை தவிர்க்க உதவும்.
- குடும்ப பின்னணி: இரு குடும்பங்களின் பின்னணியையும் ஆழமாக அறிந்து, அவை பொருத்தமாக இருக்கிறதா என சரிபார்க்க வேண்டும். குடும்ப மதிப்புகள், பழக்கவழக்கங்கள் மற்றும் சமூக நிலை ஆகியவற்றை ஒப்பிட்டு பார்ப்பது, எதிர்காலத்தில் புரிதல் மற்றும் ஒற்றுமையை உறுதி செய்யும்.
இவற்றை கவனமாக பரிசீலித்து வரன் தேர்வு செய்வது, ஒரு மகிழ்ச்சியான மற்றும் நீடித்த திருமண வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும்.
திருமணம் A to Z: முழுமையான வழிகாட்டி
எங்கள் இணையதளமான marriageA2Z.com மற்றும் அல்மஹ்ர் முஸ்லிம் மேட்ரிமோனி உங்களுக்கு சிறந்த வரன் தேர்வு முதல் திருமண ஏற்பாடுகள் வரை அனைத்து வழிகாட்டுதல்களையும் வழங்குகிறது. இதில்:
- பயோடேட்டா தயாரிப்பு: ஒரு கவர்ச்சிகரமான பயோடேட்டாவை எப்படி உருவாக்குவது?
- வரன் தேடுதல்: தரகர்கள், மேட்ரிமோனி தளங்கள் மூலம் சிறந்த வரனை எப்படி தேடுவது?
- திருமண ஏற்பாடுகள்: பட்ஜெட், மண்டபம், அலங்காரம், உணவு ஏற்பாடு போன்றவற்றை எப்படி திட்டமிடுவது?
- வெற்றிகரமான வாழ்க்கைக்கான குறிப்புகள்: திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும்?
எங்கள் சிறப்பு அம்சங்கள்:
- மணமகளுக்கு முற்றிலும் இலவசம்: அல்மஹ்ர் முஸ்லிம் மேட்ரிமோனியில் மணமகளுக்கு எந்த கட்டணமும் இல்லை.
- தொடர்பு எளிது: WhatsApp மூலம் எங்களை அணுகலாம் - 9789271238.
இப்போதே பகிருங்கள்!
உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இந்த இணையதளத்தை பகிருங்கள். திருமணம் சார்ந்த அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பெறுங்கள். MarriageA2Z.com மற்றும் அல்மஹ்ர் முஸ்லிம் மேட்ரிமோனி உங்களுக்கு சிறந்த திருமண அனுபவத்தை உறுதி செய்யும். இன்ஷாஅல்லாஹ்!
------------------------------------------------------
அல்மஹ்ர் முஸ்லிம் மேட்ரிமோனி
மணமகளுக்கு முற்றிலும் கட்டணம் இல்லை
Whatsapp : 9789271238
--------------------------------------------------------