பகுதி 7 : பெண் வீட்டார் பார்வையில் நீங்கள் ஹீரோவாக தெரிய 10 தகுதிகள்

 


ஒன்னு பணக்காரனா இருக்கணும் .. யாருட்டயும் கையேந்த தேவை இல்லை. இல்லைனா ஒன்னுமே இல்லாம இருக்கணும். பார்க்குற ஆட்கள்கிட்டலாம் கையேந்திடலாம். இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைல இருக்குறது கஷ்டம் .. இதேபோல தான் திருமண விஷயத்திலும். ஒன்னு அழகான தோற்றத்தோடு , தகப்பன் சேர்த்து வச்ச பணத்தோடு இருக்கணும் .. இதை விரும்புறதுக்கு நிறைய பேர் இருக்காங்க .. விரும்பி வருவாங்க .. இல்லையா எப்படி இருந்தாலும் பரவாயில்ல சரி ங்குற அளவு இருக்கணும் .. இவர்களுக்கும் அமையும் .. ஆனா இடைப்பட்ட நிலையில பொருளாதாரம் பெருசா இல்லாம ஓரளவு படிப்பு வச்சுட்டு எதிர்பார்ப்பையும் வச்சிக்கிட்டு ஆசைகளோடு இருப்பார்கள். இவர்களுக்கு இவர்கள் விருப்பப்படி அமைவதுதான் காலம் தாழ்த்தும். 

இவர்கள் இந்த பத்து தகுதியை அடைய முயற்சி செய்தால் நல்ல வாழ்க்கை துணை அமையும் .. ஏன்ன பெரும்பாலும் சராசரி குடும்பம் தன் மகளுக்கு விரும்புவது இந்த தகுதியை தான்... இந்தத் தகுதிகளை முன்னிறுத்துங்க .. அவங்களுக்கு மாப்பிள்ளை எனும் கூட்டத்துல நீங்க தான் கதாநாயகன் .. 

1. கெட்ட பழக்கங்கள் இல்லாமல் இருக்க வேண்டும் 

மற்ற எல்லாமே ஓகே ஆனா பையனுக்கு கெட்ட பழக்கங்கள் உண்டு என்கிற தகவல் வந்தாலே போதும் பல பேர் நிறுத்தி விடுவார்கள். அதனால் பீடி சிகரெட் தண்ணி இன்ன பிற இதன் சொந்தங்கள் என குறிப்பிட்டு யாரும் சொல்ற அளவு இதுபோல எதுவும் இருக்க கூடாது.. இது இருக்கிறதா கேள்விப்பட்டாலே பொண்ணு கொடுக்க தயங்குவார்கள். அப்ப இது இல்லை என்றால் பெண் தர முன்னால வருவாங்க.. இதுதான் லாஜிக். 

2. பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் இருத்தல்

பெண்ணை பெற்றவர்கள் தன் பெண் கஷ்டப்பட நினைக்க மாட்டாங்க.. அதனால்தான் தான் வாடகையில் இருந்தாலும் சொந்த வீடு இருக்கிறதா என்று கேட்பார்கள். பிள்ளை போகிற இடத்திலாவது நிலையாக ஒரே இடத்தில் இருக்கட்டுமே என்று. அதுக்குன்னு முன்னாடியே பணம் சம்பாதிச்சு சொத்து சேர்த்து வச்சிருக்கணும்னு இல்ல.. இவனால சம்பாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை கொடுக்கிற மாதிரி இருக்கணும்.. கையில தொழில் இருக்கு எதிர்காலம் இருக்கும்.. வெளிநாடு போன சம்பாதிக்க முடியும்.. ஒரு ஸ்டார்ட் அப் கடை இப்பதான் தொடங்கி இருக்கொம்.. இப்படி ஏதாச்சு ஒரு எதிர்கால நம்பிக்கையை கொடுக்கிற மாதிரி இருக்கணும்.. யாரும் 25 வயசுல பெருசா பணம் சம்பாதிச்சு வச்சிருக்க மாட்டாங்க.. நம்பிக்கைதான் முன்னெடுக்கும். 

3. இவரை கல்யாணம் செய்தால் மதிப்பு இருக்கும் என்ற அளவில் இருத்தல்

இது கொஞ்சம் ரிஸ்க்கான தகுதி தான்.. காரணம் இது சமூக மரியாதை சம்பந்தப்பட்டது. நல்ல செயல்களால் எல்லா பக்கமும் நல்ல பெயர் இருக்கும்.. யார் அவரா தங்கமானவரா ஆச்சே ன்னு ரிவ்யூ கொடுப்பாங்க. யாரும் குறை சொல்ல மாட்டாங்க.. மதிப்புள்ளவர் மாப்பிள்ளையா அமைய யாரு தான் விரும்ப மாட்டாங்க. ஒரு வாசனையான இடத்திற்கு சென்று வந்தால் நம் மீதும் அந்த வாசம் இருக்கும். ஒரு சிகரெட் அடிக்கிறவன் நம்ம பக்கத்துல நின்றால் நம்மீதும் அந்த வாடை வரும். அதனால யாரோட பக்கத்தில் இருக்கிறோம் என்கிறதும் நமது மதிப்புக்கு முக்கியம். மதிப்பு உள்ளவரே வாழ்க்கைத் துணையாக கிடைத்தால் அந்த மதிப்பு எப்படி இருக்கும்? அதனால்தான் விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்களை அரசியல்வாதிகளை விரும்பி திருமணம் செய்வார்கள். அதனால் சமூகத்தில் மதிப்பு இருந்தால் பெண் தர போட்டி போடுவார்கள்

4. நீதி செலுத்துபவராக இருத்தல்

அதாவது நியாயத்தின் பக்கம் நிக்கணும் .. பல வீட்ல பிரச்சனையே கணவரானவர் அம்மா சார்பாக தான் பேசுகிறார் என்பது தான்.. பல விவாகரத்துக்கும் இது காரணமாகிறது. தப்பு யார் செஞ்சாலும் தப்பு தான் என்கிற தன்மை உள்ளவராக இருந்தால் எல்லாருமே மதிப்பாங்க. விசாரிக்கும்போது இவர் நியாயமா பேசுவார் .. கூட இருக்கிறவரே தப்பு பண்ணாலும் அவரை கண்டிப்பார்ங்குற அளவு விமர்சனம் வரணும் . இடத்துக்கு தகுந்த மாதிரி பேசுவான்.. கூட இருக்கிறவங்க தவறு செஞ்சா கண்டுக்காம இருப்பான்.. இன்னும் அதற்கு முட்டுககொடுப்பான் என்பதெல்லாம் நல்ல ரிவ்யூ இல்ல 

5. ஒழுக்கம் உள்ளவராக இருத்தல்

 இது ரொம்ப ரொம்ப முக்கியமானது.. நல்ல நடத்தை.. திருமணத்துக்கு அப்புறம் அந்த வாழ்க்கையை கொண்டு போறதுல முக்கிய பங்கு உண்டு.. எந்த கெட்ட பெயரிலும் சிக்காமல் இருக்கணும்.. அதேபோல பிடிக்கிறதுக்கு முதலில் ஒழுக்கத்தை தான் முன்னிலைப்படுத்துவார்கள். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒழுக்கமான பிள்ளை என்று சொல்லப்பட்டால் அவர்களுக்கு தனி மதிப்பு உண்டு . இன்ன பிற எதுவும் இல்லாட்டாலும் ஒழுக்கத்திற்காகவே பலர் திருமணம் செய்வார்கள். இன்ன பிற தகுதிகள் மகிழ்ச்சி சம்பந்தப்பட்டது. ஆனால் ஒழுக்கம் என்பது நிம்மதி சம்பந்தப்பட்டது. பல கோடி சொத்து இருந்து அழகாக இருந்தாலும் ஒழுக்கம் தவறினால் அந்த வாழ்வு தொடராது. ஒழுக்க விஷயத்தில் உள்ள ஒரு வித்தியாசமான அம்சம் என்னவென்றால் குடும்பத்தில் வேறு யாரும் ஒழுக்கம் இல்லாமல் இருந்தாலும் அது இவர்களைப் பாதிக்கும். நாம மதிப்போடு இருப்பதற்கு ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை தாண்டி நமது குடும்பமும் மதிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். இதில் இன்னொரு அம்சம் சேர்த்து வைத்த நற்பெயர்கள் மலையளவு இருந்தாலும் இந்த ஒரு விஷயம் அதை தூசி ஆக்கி விடும். ஆக ஒழுக்க விஷயத்தின் மிகவும் கட்டுப்பாடாக இருந்தால் மட்டுமே மதிப்பு கிடைக்கும். 

6. பொறுமை உள்ளவராக இருத்தல் 

குணங்களில் பொறுமை மிகச்சிறந்த குணம் . காரணம் பொறுமையை இழப்பதால் தான் மிக மோசமான சம்பவங்கள் நடைபெறும். கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடு உட்காருவான். ஒரே ஒரு கணம் இழக்கிற பொறுமை அவர்கள் வாழ்நாள் முழுவதும் அழ வைக்கும். கோபத்துக்கு அந்த நேரத்தில் பயம் இருக்குமே தவிர எங்கேயுமே மதிப்பு இருக்காது. கோபம் உண்டாவது பொறுமை இழந்த காரணத்தினால். அதேபோல அவசரப்பட்டு தவறான முடிவுகள் எடுப்பதும் பொறுமை இல்லாத காரணத்தினால் தான். எந்த விஷயத்தையும் பொறுமையாக அணுகுவது தலைமைத்துவத்தின் வெளிப்பாடு. தலைவனுக்கு பெண் தர யார் தான் விரும்ப மாட்டார்? அதனால் திருமணத்திற்கு தயாராக இருந்தீர்கள் என்றால் கோப விஷயத்திலும் கவனமாக இருங்கள். 

7. பிரச்சனையை எதிர்கொள்ள கூடியவராக இருக்க வேண்டும் 

வாழ்க்கையில் பிரச்சனைகள் தவிர்க்க முடியாதவை. அவற்றைத் துணிவோடு எதிர்கொள்வதே வெற்றிக்கான விதை. பிரச்சனைகளை அஞ்சி விலகுவது மனிதரை பலவீனப்படுத்தும் . ஆனால், அவற்றை நேருக்கு நேர் பார்த்து தீர்வுகளைத் தேடுவது ஆளுமையை வலுப்படுத்தும் . சவால்களை சந்திக்கும் போது தான் நமது சிந்தனைத் திறன், பொறுமை, தன்னம்பிக்கை வளர்கின்றன. ஒவ்வொரு முறையும் பிரச்சனையைத் தாங்கும் திறன், மனிதரை வாழ்க்கைப் போராட்டத்தில் வீரனாக்கும். அந்தப் பிரச்சினைகளை விட்டு ஓடும் போது நமக்கு மதிப்பு இருக்கிறது இல்லை . கடன் வாங்கி விட்டு ஊரை காலி செய்பவர்களுக்கு என்ன மதிப்பு இருக்கும்? குடும்ப பாரம் தாங்காமல் வீட்டை விட்டு ஓடுபவர்களுக்கு என்ன மதிப்பு இருக்கும்? பிரச்சனையை எதிர்கொள்வது தனி வீரம். வீரனை யாருமே விரும்புவார்கள். குடும்ப வாழ்வு பலவேறு பிரச்சனைகளுக்குரியது. அந்தப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தனி வீரம் இருந்தால் மவுசுதான். 

8) ஜாலி கேரக்டராக இருத்தல் 

மனதின் பிரகாசமான ஒளியே ஜாலியான கேரக்டரின் அடையாளம். முகத்தில் மலரும் புன்னகை, சூழ்ந்துள்ளவர்களின் இதயங்களை கவரும் மாயாஜாலம். சிரித்த முகத்துடன் இருப்பார் ஜாலியான பண்பு என்பது வெறும் கேலியல்ல; அது துன்பங்களை மறக்கவைக்கும் மருந்து, சவால்களை எளிதாக்கும் மந்திரம். ஒருவரின் நேர்மறை எண்ணங்கள், நம்பிக்கை, மற்றும் சிறு சிறு மகிழ்ச்சிகளைப் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் அவரை அனைவருக்கும் விருப்பமான நபராக்குகிறது. "ஜாலி" ஆக இருப்பவர்கள் எதிர்மறை சூழ்நிலை கூட நல்லவிதமாக மாற்றி விடுவார்கள். இது அவர்களின் மன ஆரோக்கியத்தைக் காப்பதோடு, குடும்பம் மற்றும் சமூகத்திற்கும் நற்பலன்களைத் தரும். ஒரு நண்பரின் துயரத்தை கூட நகைச்சுவையால் இலகுவாக்கலாம். பள்ளி கல்லூரி காலங்களிலேயே நாம் கவனிக்கலாம் .. உம்முனு இருப்பவர்களுக்கு அதிக நண்பர்கள் இருப்பார்களா? அல்லது சிரித்து ஜாலியாக இருப்பவர்களுக்கு அதிக நண்பர்கள் இருப்பார்களா? மகிழ்ச்சியுடன் இருப்பவரை பார்ப்பதே மகிழ்ச்சி. அவருடன் இருப்பது இன்னும் மகிழ்ச்சி. 

9) பிறருக்கு உதவும் தன்மை 

ஒருவரின் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதி, அதைத் தீர்க்க முன்வருவது மனிதாபிமானத்தின் உயர்ந்த வடிவம். உதவும் மனப்பான்மை என்பது பணம், நேரம் அல்லது சக்தியை வாரி வழங்குவது மட்டுமல்ல. அது பிறரிடம் நாம் காட்டும் அன்பு, அவர்கள் நலனில் அவர்களின் மகிழ்ச்சியில் நாம் காட்டும் அக்கறை, அவர்களின் முயற்சியில் நமது ஒத்துழைப்பு எனும் மூன்று அடிப்படைகளிலும் அமையும் . ஒரு சிறிய உதவியும் சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக, பசியால் வாடுவோருக்கு உணவளித்தல், வழிநடத்தத் தெரியாதவருக்கு வழிகாட்டுதல், துயரத்தில் உள்ளவருக்கு ஆறுதலாக இருப்பது போன்ற செயல்கள் உங்களின் மதிப்பை உயர்த்தும். . உதவுவது மனிதப் பண்பின் இயல்பு. இத்தகைய உள்ளம் வளர, சுயநலத்தை விடப் பிறர்நலத்தை முதலாக வைக்க வேண்டும். பிறருக்கு உதவும் எண்ணம் அவருடைய மனதை காட்டும். அடுத்தவர்களுக்கே உதவுபவர் தன் குடும்பத்தை எப்படி கஷ்டமில்லாமல் வைத்திருப்பார் என்ற பிம்பத்தை உண்டாக்கும். இதுவும் உங்களை கதாநாயகனாக்கும் 

10) நல்ல நட்பு தொடர்புகள் இருப்பது 

நல்ல நட்புகள் ஒருவரின் சமூகப் பண்பாடு, நம்பிக்கைத் தகுதி மற்றும் மனிதாபிமானத்தை எடுத்துக்காட்டும். திருமணம் என்பது இரு குடும்பங்களின் நம்பிக்கை மற்றும் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டது. ஒருவர் நல்ல நண்பர்களுடன் நீண்டகால உறவை வளர்த்திருப்பது, அவரது நேர்மை, பொறுப்புணர்வு, உறவுகளைப் பராமரிக்கும் திறன் போன்ற குணங்களை வெளிப்படுத்தும். இத்தகைய பண்புகள் பெண் தரும் குடும்பத்தினரின் நம்பிக்கையை ஈர்க்கின்றது . எடுத்துக்காட்டாக, நல்ல நட்புகள் கொண்டவர் சமூகத்தில் மதிக்கப்படுகிறார்.அவரது சுற்றத்தில் உள்ளவர்களின் நற்சான்றுகள் குடும்பங்களுக்கு "பாதுகாப்பான தேர்வு" என்ற உணர்வைத் தருகின்றன. மேலும், நண்பர்களிடம் காட்டும் அன்பு, புரிதல், தியாகம் போன்றவை திருமண வாழ்க்கையிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நட்பை வெறும் பொழுது போக்குக்காக அமைக்காமல் உண்மையான மனிதத் தன்மையின் அடையாளமாக வளர்த்துக்கொள்வது முக்கியம். ஒரு நல்ல நண்பராக விளங்குபவர், நல்ல கணவனாகவும் தகுதியுடன் இருப்பார் என்பதே பரவலான பார்வை.

ஆக இவை அனைத்தும் பெண் வீட்டாரின் பார்வையில் நம்மை ஹீரோவாக்கும் காரணிகள் . இவற்றை நாம் கவனித்து மேம்படுத்திக் கொண்டால் அந்த நேரம் நம்மிடம் எதுவும் இல்லாவிட்டாலும் பெண் தர விருப்பப்படுவார்கள்.

---------------------------------------------------------

அல்மஹ்ர் முஸ்லிம் மேட்ரிமோனி

மணமகளுக்கு முற்றிலும் கட்டணம் இல்லை

Whatsapp : 9789271238

--------------------------------------------------------